விச்வநாதர் விளையாடல்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

உடனே தீண்டாதான் மறைந்து விச்வநாதராக தர்சனம் தந்தான்! ஆசார்யாளைப் பரிசோதித்து, அவர் தம்மளவில் ஞானியானாலும் உலக ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டியவர்களுக்காகத் தாமும் அப்படியே செய்வார், உலகத்திற்கு மேலே போனவர்களின் விஷயத்திலோ தம்முடைய குருத்வத்தை மறந்து சிஷ்ய பாவத்தில் அடங்கி நிற்பார் என்று காட்டவே ஸ்வாமி பஞ்சமனாக வேஷம் போட்டுக்கொண்டு வந்து விளையாடினது! ஒருவர் தாமே தம் மஹிமையைச் சொல்லிக்கொண்டால், மஹிமைக்குப் பதில் அஹங்காரி என்ற குறைவுதான் உண்டாகும். ஆசார்யாள் அப்படிச் சொல்லிக்கொள்ளமாட்டார். அதனால், லோகம் தானாக அவர் மஹிமையைத் தெரிந்து கொள்ளும்படியாக இப்படி ஸ்வாமி நாடகமாடினார்.

ஆசார்யாள் தமக்கு மூலமான பரமேச்வரன் ப்ரஸன்னமானதும் நமஸ்காரம், ஸ்தோத்ரம் எல்லாம் செய்தார். ஸ்வாமி நிரம்ப அநுக்ரஹம் பண்ணிவிட்டு மறைந்து போனார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஞானியின் ஸமத்வம் வேறு;ஸமூஹ ஸமத்வம் வேறு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குமாரிலபட்டர் கதை;கர்மமும் ஞானமும்
Next