ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – மஹாயான விஷயம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

‘மஹாயானத்தைப் பத்மபாதர் குறிப்பிட்டிருக்கிறாரே: கிறிஸ்து சகாப்த ஆரம்பத்தில் இருந்திருக்கக் கூடிய கனிஷ்கரின் காலத்தில்தானே பௌத்தம் மஹாயானம், ஹீனயானம் என்று உடைந்தது?’ என்று ஒரு பாயின்ட் பார்த்தோம். இப்படி முழுக்க வேறு வேறாக இரண்டு பிரிவுகள் உறுதிப்பட்டது கனிஷ்கர் காலத்தில் தானென்றாலும், புத்தர் மஹா பரிநிர்வாணம் அடைந்ததை அடுத்து ராஜக்ருஹத்தில் நடந்த முதலாவது பௌத்த மஹாநாட்டிலேயே இரண்டு விதமான அபிப்ராயக்காரர்கள் மோதிக்கொண்டார்களென்றும், அப்புறம் ஸ்தவிரவாதம் (‘தேராவாதம்’ என்று பாலிப் பெயரில் வழங்குவது) என்றும் மஹாஸங்கிகம் என்றும் இந்த இரண்டு பிரிவுகளும் விரிந்து கொண்டே போய்த்தான் முடிவில் (முறையே) ஹீனயான, மஹாயானங்களாக ஆயின என்றும் அவர்களுடைய மதப் புஸ்தகங்களிலிருந்து தெரிகிறது. முதலிலிருந்தே பல காலம் ஹீனயாம் மஹாயானம் என்ற இந்தப் பெயர்களும் ஓரளவு வழங்கியிருக்கலாம். அப்படியானால் பத்மபாதர் அந்தப் குறிப்பிட்டதில் chronological error (காலக் கணிப்பில் தவறுதல்) இல்லைதானே? மெகஸ்தனிஸ் ஸமாசாரத்தை நினைவு வைத்துக்கொண்டு ஹிஸ்டரி முழுதையும் முற்காலத்துக்குத் தள்ளினாலோ இந்தக் கேள்வியெல்லாமே அடிபட்டு விடும்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 12. பூர்வகால புத்தர்களும் ஜினர்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  14. 'த்ராவிட சிசு'விஷயம்
Next