சித்திர ஆதிசங்கரர் வேதவாழ்வை மீண்டும் ஆழ வேரூன்றச் செய்துவிட்டார் நமது சங்கரபகவத்பாதர் அத்வைத ஞான வழியே ச

சித்திர ஆதிசங்கரர்

வேதவாழ்வை மீண்டும் ஆழ வேரூன்றச் செய்துவிட்டார் நமது சங்கரபகவத்பாதர். அத்வைத ஞான வழியே சத்தியமான தத்துவம் என்பதை உலகம் ஒப்பச் செய்துவிட்டார்.

பிறமதங்கள் எழுபத்தி இரண்டையும் இருந்த இடம் தெரியாமல் விரட்டிவிட்டார். எதற்காக அவதரித்தாரோ அப்பணிமுடிந்தது. இப்போது அவருக்கு வயது முப்பத்திரண்டேதான். முப்பத்தி இரண்டு யுகத்தில் செய்யமுடியாத சாதனையை அவர் தனிமனிதராகவே இருந்து முப்பத்திரண்டு ஆண்டுகளில் சாதித்து விட்டார்.

ஆனால் "நான் சாதித்தேன்"என்ற அகங்காரம் அவருக்கு எள்ளளவும் இல்லை. பராசக்தியான காமாட்சியின் அருள்சக்தி எள்ளளவு தம்மீது தெளித்ததாலேயே இவ்வளவும் செய்ய முடிந்தது என்று கருதினார்.

<< Prev. page * Next page >>