சித்திர ஆதிசங்கரர் அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று ச

சித்திர ஆதிசங்கரர்

அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்த மற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றேதான். தன்னை விட்டே தான் எப்படி விலக முடியும்?என்று இப்படி ஆணித்தரமாகக் கேட்டு விட்டான் அந்தப் புலையன்.

உடனே சத்தியத்தை தலையால் வணங்கும் ஸ்ரீ சங்கரர் இப்பேர்பட்ட ஞான நிலையை அடைந்து பேசுபவர் புலையனாக இருக்கமுடியாது. காசிவிஸ்வநாதரும் விசாலாட்சியுமே தம்மை சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்து 'மனீஷா பஞ்சகம்'என்ற ஐந்து சுலோகங்களைப் பாடினார். உடனே புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதப் பெருமானே நின்றார்:புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நால்வேதமாயின.

"என் மறு உருவே ஆன சங்கரா!வாய்பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல்

வாழ்விலேயே c நடத்திக் காட்டுபவன் என்று உலகறியவே இந்த நாடகம் செய்தேன்"என்று கூறி ஆசி வழங்கி மறைந்தார் இறைவன்

சங்கரருக்குப் பதினாறு வயது நிறைகிற சமயம். தொண்டு கிழவரான ஒரு பிராமணர் அவரிடம் வாதம் செய்யவந்தார். சங்கரர் செய்துள்ள பிரம்ம சூத்திர பாஷ்யத்தை ஆட்சேபித்து அந்தக் குடு குடு கிழவர் எதிர் வாதம் ஆரம்பித்தார்.

சங்கரர் தமது கூர்ந்த அறிவுத் திறனால் அந்த எதிர் வாதங்களைத் தவிடு பொடி செய்தார். ஆனால் கிழவனாரும் மதிநுட்பத்தில் சங்கரருக்கு சளைத்தவராக இல்லை. இவர் ஒரு உண்மையை நிலை நாட்டினால், அடுத்த வரியிலேயே அவர் மேலும் பல ஆட்சேபங்களைக் கிளப்பினார்.

<< Prev. page * Next page >>