சந்திர கிரஹணம் (04-05-04) - செவ்வாய் கிழமை
கிரஹணத்துக்கு ஸம்ஸ்கிருதத்தில் உபராகம் என்றும் சந்திரனுக்கு ஸோமன் என்றும் பெயர். ஸோமோபராகம் என்றால் சந்திரகிரஹணம். ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஸம்பவிக்கும் இந்த கேது கிரஸ்த பூர்ணசந்திரகிரஹணம் கீழ்கண்ட ஸ்டாண்டர்டு மணிப்படி நமக்கு தெரியும். ஆரம்பம் 04-05-04 நள்ளிரவு 12.14 மணி (மத்திமம் 01.31 மணி) முடிவு 05-05-04 விடியற்காலை 3.48 மணி.
வாதி, விசாகம், சித்திரை, திருவாதிரை, சதயம்
நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கிரஹண காலத்தில் பட்டம் கட்டிக்கொண்டு பரிஹார ஸ்லோகம் சொல்லி கிரஹண முடிந்த பிறகு ஸ்நானம் செய்து, அரிசி தக்ஷிணை தானம் செய்து பரிஹாரம் செய்து கொள்ள வேணும். அனைவருமே மதியம் மூன்று மணிக்குப்பிறகு சாப்பிடக்கூடாது. கிரஹணம் ஆரம்பித்தவுடன் ஒரு தடவையும் முடிந்தவுடன் ஒரு தடவையும் ஸ்நானம் செய்யணும். (ஆரம்ப ஸ்நானத்தை ஸமுத்ரத்தில் செய்யலாம். விட்ட ஸ்நானத்தை சமுத்ரத்தில் செய்யக்கூடாது) . அன்று இரவு கிரஹண காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். கர்பினிப் பெண்கள் கிரஹண காலத்தில் வெளியே வரவேண்டாம்.
கிரஹணத்தின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
யோஸெள வஜ்ரதரோ தேவ : ஆதித்யானாம் ப்ரபுர்ம :
ஹஸ்ர நயனஸ் சந்திர கிரஹ பீடாம் வ்யபோஹது
கிரஹணத்தின் போது பட்டத்திலோ துணியிலோ மேற்கண்ட ஸ்லோகங்களை எழுதி உடம்பில் படுமாறு வைத்துக்கொண்டு விட்டஸ்நானம் செய்து தக்ஷிணைக் தாம்பூலம் அரிசி வைத்து 'மம ஸோமோபராக தோஷ பரிஹாரார்த்தம் இதம் யத்கிஞ்சித் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸம்ப்ரததே'என்று சொல்லி அதை பிராம்மணனிடம் தரவும், அல்லது தத்தம் செய்து வைத்து பிறகு தரலாம்.