ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி நசரத்பேட்டை - 602 103 ஸ்ரீ ஆதிசங்கரரால் துவக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், மூலாம்னாய பீடம், ஈஸ்வர பக்தியின் ஒ

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி நசரத்பேட்டை - 602 103

ஸ்ரீ ஆதிசங்கரரால் துவக்கப்பட்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், மூலாம்னாய பீடம், ஈஸ்வர பக்தியின் ஒரு முக்கிய திருத்தலமாகவும் கல்வி மற்றும் பொது ஜன வாழ்க்கையின் மேம்பாட்டிற்கும் சுகாதாரத்திற்கும் எண்ணற்ற சேவைகளை செய்வதிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. ஸ்ரீ மடத்தின் அறக்கட்டளையின் சார்பாக பல இடங்களில் வேதபாட சாலைகளும், பசு பாதுகாப்பு நிலையங்களும், பள்ளிகள், மருத்துவமனைகள், ஊனமுற்றோர் குடியிருப்பு வசதிகள், முதியோர் இல்லங்கள் மற்றும் ஜன கல்யாண் போன்ற அமைப்புகளும் உருவாக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ மடத்தை அலங்கரித்திருக்கும் 69வது ஆசார்யாள் பூஜ்யஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், 1993-ம் ஆண்டு காஞ்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை துவக்கி வைத்து, தமது குருவாகிய மஹா ஸ்வாமிகளுக்கு உகந்த காணிக்கையாக அப்பல்கலைகழகத்திற்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா என்று பெயரிட்டார். அப்போதிருந்த பாரதப் பிரதமர் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவித்து நாட்டிற்கு கல்வியின் தரம்மேம்பட திறந்து வைத்தார்.

இப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள்கள் தனித்தன்மை கொண்டவை. பாரம்பர்யமாக வரும் சமஸ்கிருத படிப்புகளையும், சாஸ்திரங்களையும் நவீன விஞ்ஞானத்துடன் இணைப்பது, ஆயுர்வேதத்தை பரம்பரை வைத்ய முறைகளுடன் கற்றறிவது, வாஸ்து சாஸ்திரத்துடன் கட்டிடக்கலையை இணைப்பது கணினி தொழில் நுட்பத்துடன், வானசாஸ்த்ரம், பௌதிகம் மற்றும் கணிதத்தை இணைத்து படிப்பது, சமஸ்கிருதத்தின் விஞ்ஞான பூர்வமான அபூர்வ கண்டு பிடிப்புகளான விமான சாஸ்தீரம், சுல்ப சாஸ்த்ரம், விவசாயம், மரம் மற்றும் சிலைவடிப்புகள் ஆகியவைகளுக்கு பொருத்ததுத்துடன் கூடிய நவீன காலத்திய வேதியில், உலோகவியல், இயற்கைவியல், மரபியல், அர்த்த சாஸ்திரம் மற்றும் தொழில் நிர்வாகம் போன்றவைகளுடன் இணைப்பது போன்ற சரியான முறையில் படிப்புகளை இணைத்து கல்வியை கற்றுத் தருதல் போன்ற திட்டங்களை இந்த பல்கலைக்கழகம் செய்து வருகின்றது.

இப்பல்கலைக்கழகம் சமஸ்கிருதம், கலை மற்றும் அறிவியல், பொறியியல், கணிணி தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிர்வாகப் படிப்புகளை பல இடங்களில் நடத்தி வருகின்றது. தன்னில் மேலும் ஒரு அங்கமாக ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியை 1995-ம் ஆண்டு பூந்தமல்லி அருகேயுள்ள நசரத்பேட்டையில் தொடங்கியது. மத்ய சர்க்காரைச் சேர்ந்த மத்திய கூட்டமைப்பான இந்திய மருத்துவத்துறை, புதுதில்லி ( CCIM, New Delhi)

இக்கல்லூரியை நடத்த அனுமதி தந்தது. அன்றிலிருந்தே இக்கல்லூரி, ஆயுர்வேத மருத்துவத்திற்கு வேண்டிய அத்தனை வசதிகளையும் மிகச் சிறப்பான வகையில் வளர்ச்சியைப் பெற்று, தரமான கல்வியையும், நோயாளிகளுக்கு தக்க மருந்துகளையும் வழங்கி வருகின்றது. இக்கல்லூரியின் சிறப்பம்சங்கள் வருமாறு -

அ. பதினான்கு பிரிவுகள் செயல்படுகின்றன. அவை

1. சமஸ்க்ருதம், சித்தாந்தம்

2. கிரியா சரீரம்

3. ரசனா சரீரம் எனும் உடற்கூறு

4. அகத தந்திரம் எனும் விஷ வைத்யம்.

5. ஸ்வஸ்த்த விருத்தம் எனும் பொது சுகாதாரம்

6. ரோகநிதானம் எனும் உடல் வியாதிகள் அறிவது.

7. திரவிய குணம் எனும் மூலிகை பற்றிய விஷயங்கள்

8. ரசசாஸ்திரம் எனும் பாதரசம் போன்ற மருந்துகள் தயாரித்தல்

9. கௌமார பிருத்யம் எனும் குழந்தை மருத்துவம்

10. பிரசூதி தந்த்ரம் எனும் மகப்பேறு மருத்துவம்

11. காயசிகித்ஸை எனும் மருந்துகளை நோய் ஆரோக்ய நிலையில் வழங்குதல்

12. பஞ்சகர்மா எனும் உடலை சுத்தம் செய்து கொள்ளும் முறைகள்

13. சாலாக்ய தந்த்ரம் எனும் காது மூக்கு தொண்டை பிரிவு.

14. சல்ய தந்த்ரம் எனும் அறுவை சிகித்ஸை. இவையனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறைக்கும் தேவையான பொருட்கள். பரிசோதனை கூடம், கோப்புகளை பதிவு செய்வதற்கான கணிணி, உடற்கூறு போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளன.

. இருபத்தி ஏழு ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இக்கல்லூரியில் சுமார் 175 மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்குவதற்கான தங்கும் விடுதிகள், ஆசிரியர்கள் மற்றும் பிற அலுவலர்கள் தங்குவதற்கு அலுவலர் குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், வசதிகளனைத்தும் செய்யப்பட்ட மேடையுடன் கூடிய அரங்கம், உணவுக்கூடம், அறுபது முதியோர் தங்கியுள்ள முதியோர் இல்லம் போன்றவை அமைந்துள்ளன.

இ. குளிரூட்டப்பட்ட மற்றும் பொது அறைகளுடன் 150 படுக்கை வசதிகளுடன் கொண்ட ஆஸ்பத்திரி, ஆண் - பெண்பாலருக்கு தனி அறைகள், 4 உடல் சுத்தி செய்வதற்கான அறைகள், அறுவை சிகித்ஸை, மகப்பேறு, வெளி நோயாளிகள் பிரிவு, காது, மூக்கு, தொண்டை மருத்தவம், பெண்களுக்குரிய ஒவ்வாமை நோய்கள், குழந்தை மருத்துவம் போன்ற பிரிவுகளுக்குத் தனித்தனியாக அறைகள், நோயை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைக்கூடம், X-ray, ECG

போன்றவையுடன் ஆஸ்பத்திரி சிறப்பான சேவையை செய்து வருகின்றது. நான்கு புற நோயாளிகள் பிரிவு சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை, பம்மல், மாங்காடு மற்றும் பூந்தமல்லியில் பொதுமக்களின் வசதிக்காகவும் நிர்வாகம் அமைத்துள்ளதால் பொதுமக்கள் பயண்பெற்று வருகின்றனர்

. ஈ. எழுபது வகையான ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதற்காக மருந்துக்கூடம் நவீன இயந்திரங்களால் அமைக்கப்பட்டு செயல்படுகின்றது.

1. மாணவ மாணவியரின் அறிவுக்கூர்மையை வளர்க்கும் வகையில் புத்தக சாலையில் 5700 புத்தகங்களும் 50 வார மற்றும் மாத இதழ்களும் உள்ளன. புராதன மருத்துவ முறைகளை சேர்த்து மிக அபூர்வ ஆக்கபூர்வமான புதிய புத்தகங்களாகிய "HORTUS MALABARICUS", "TRISKANDHA KOSHA"

போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திலுள்ள, 1,17,000 புத்தகங்களுடன் கூடிய புராதன ஓலைச்சுவடிகளையும் மாணவ மாணவியர் பயன்படுத்திக் கொள்ளும் வசதியையும் பல்கலைக்கழகம் செய்துள்ளது.

. கல்லூரி வளாகத்தில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் திருமலை, கேரளம், ஆந்திரம் மற்றும் வடக்கு மாநிலங்கள், தமிழ்நாடு போன்ற பிரதேசங்களிலிருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட எண்ணிலடங்கா அபூர்வ வகை மூலிகைச் செடிகள் பயிரிடப்பட்டு சிறப்பான மேற்பார்வையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர்பாசன வசதியுடன் மூலிகை வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நோய் தீர்ப்பதில் வல்லமையும், மருத்துவப் புத்தகங்களில் காணப்படாத மூலிகைப் பண்ணைக்காக மேலும் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

. பெண்களின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் குழுவினால் இக்கல்லூரி தேர்வு செய்யப்பட்டு கிராம மகளிருக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டு சுய தொழில் செய்வதற்காக மூலிகை வளர்ச்சி மற்றும் மூலிகை மருந்துகள் தயாரிப்பதிலும் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் பள்ளிகளிலும் மிகப்பெரிய அளவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கனரக வாகன ஒட்டுனர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளக்கும், முதியோர்களுக்கும் அடிக்கடி கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன. பொது மக்களுக்கு ஆயுர்வேதத்தின் பெருமையை உணர்த்தும் பொருட்டு "அமிருதாலோகா" என்னும் பொருட்காட்சியும் இலவச மருத்தவமும் நான்கு நாட்களுக்கு இதற்கு முன் எங்கும் நடைபெறாத வகையில் சிறப்பாக சென்னை மயிலாப்பூரில் நடந்தது. இன்றும் ஆயுர்வேத சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் எந்த விழாவிலும் இக்கல்லூரியின் பொருட்காட்சியில் வைக்கப்பட்ட படங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுர்வேதத்தை நன்கு கற்றுணர்வதற்காக ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அமைத்த "தன்வந்தரி வாக்விலாசினி சபா"வில் அனைவரும் பயன்பெறும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

"ஆயுர்சுரபி" என்னும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மலரும் இதழை இக்கல்லூரி வெளியிடப்பட்டு ஆயுர்வேதத்தை அறியும் வண்ணம் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் தேசிய அளவில் நடைபெறும் மாநாடுகளில் பங்குபெறுகின்றனர்.

2) கல்லூரியின் இருப்பிடம் -

சென்னை மாநகரத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் பூந்தமல்லி அருகில் நசரத்பேட்டை எனும் கிராமத்தில் சென்னை - பெங்களூர் தேசிய

நடுஞ்சாலையில் கல்லூரி அமைந்துள்ளது. சுவையான நிலத்தடி நீரும், காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ ஆசார்யர்களின் தொடர்பும் கொண்டதால் இக்கல்லூரி வளாகம் ஒரு புனித தலமாகும்.

3) படிப்பினைப் பற்றி

CIM, New Delhi அனுமதித்திருக்கும் பட்டப்படிப்பான ஆயுர்வேதாசார்யா (ஆயுர்வேத மருந்து அறுவையியல் இளையர்) ( Bachelor of Ayurvedic Medicine and Surgery) எனும் 5 1/2 வருடப் படிப்பு போதிக்கப்படுகின்றது. இப்படிப்பு கீழ்கானும் முறையில் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் Professional 18 மாதங்கள்

இரண்டாவது Professional 18 மாதங்கள்

மூன்றாவது Professional 18 மாதங்கள்

Internship (CRRI) எனும் ஆஸ்பத்திரிப் பயிற்சி - 12 மாதங்கள்

முதல் Professional படிப்பில் part - I 12 மாதங்களுக்கும், part - II 18வது மாத இறுதியிலும் முடிவுறும். Part - II விலுள்ள பாடங்களும் ஆரம்பம் முதலே சொல்லித்தரப்படும். மாணவ மாணவியர் பாடங்களனைத்திலும் தேர்வில் வெற்றி பெற்றவுடன் ஆஸ்பத்திரி பயிற்சி தொடங்கும். அதையும் திருப்திகரமாக முடித்தவுடன் ஆயுர்வதாசார்யா எனும் பட்டமளிப்பை பல்கலைக்ககழகம் வழங்கும்.

4. மாணவ மாணவியர் சேர்க்கை -

தற்சமயம் வருடத்தில் 50 மாணவ மாணவியர் வரை சேர்க்கப்படுகின்றனர்.

5. சேர்க்கை சட்டங்கள் - உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று மாணவ, மாணவியருக்கான கல்லூரியில் சேரும் விண்ணப்பம் பற்றிய விபரம் புகழ் பெற்ற தினப்பத்திரிகைககளில் விளம்பரம் மே மாதங்களில் கொடுக்கப்பட்டு விடும். நுழைவுப் பரிட்சை மற்றும் வாய் வழியாக மாணவ மாணவி சேர்க்கை பல்கலைக்கழகத்தின் சிறந்த நிபுணர்களால் ஜூன் மாதம் நடைபெறும்.

6) படிப்பில் சேருவதற்கான தகுதி - தமிழக அரசு நடத்தும் ப்ளஸ்2 பரிட்சையில் தேர்ச்சி செய்திருக்க வேண்டும். அல்லது அதற்கு சமமாக 12 வருடத்திற்குப் பிறகு எழுதி தேர்ச்சி பெற்று வேறு மாநில, மத்திய சர்க்கார் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டுப் படிப்பு பல்கலைக்கழகத்தால் சம்மதிக்கப்பட்ட படிப்பு. Physics , Chemistry மற்றும் Biology, Botany & Zoology group தேர்ந்தெடுத்து ப்ளஸ் 2 -வில் வெற்றி பெரும் மாணவர்கள் மட்டுமே தகுதியுடையவராவார்கள்.

7) வயது - படிப்பில் சேரும் தருவாயில் முன்சென்ற 31 டிசம்பர் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ 17 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.

8) சேரும் காலம் - 31 அக்டோபர் வரை சேரும் மாணவ, மாணவியர் தங்களது முதல் professional part-I பரிட்சைகளை அடுத்த வருட October ம் part-II

பரிட்சைகளை அடுத்த ஏப்ரலிலும் எழுத அனுமதிக்கப்படுவர்.நவம்பர் 1ம் தேதியோ அல்லது அதற்குப் பிறகு சேரும் மாணவ, மாணவியர் அதற்கு முன் சேர்ந்த மாணவர்களுடன் பதிவுச் செய்யப்பட்டாலும், அவர்கள் பரிட்சையை அடுத்த வருடத்தில் சேரும் மாணவர்களுடன் சேர்ந்துதான் பரிட்சை எழுத இயலும்.

9) சேரும் தருவாயில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் -

In original with one photocopy

1. S.S.L.C. சான்றிதழ்

2) ப்ளஸ் 2 அதற்குச் சமமான சான்றிதழ்

3) T.C.

4) நன்னடத்தை சான்றிதழ்

5) ஜாதி சான்றிதழ்

6) வருமான சான்றிதழ்

7) உடல் ஆரோக்யத்திற்கான சான்றிதழ்

8) வெளிநாட்டு மாணவ, மாணவியர் மேலுள்ள சான்றிதழ்களுடன் கீழ் குறிப்பிடும் சான்றிதழ்களும் சமர்பிக்கவேண்டும். அவை -

9) a) Association of Indian universities certificate regarding equivalent eligible qualification for admission.

b) No Objection certificate from External Affairs, Ministry and Ministry of health & Family Welfare, Govt. of India.

c) 5 1/2 of years student visa

d) copy of passport e) HIV Negative Test Report

f) Police verification certificate

10) வேலைநாட்கள் - விடுமுறை - பரிட்சை - வருடத்திற்கு 200 நாட்கள்

வகுப்பு

I professional part I BAMS

ஜூலை 1 முதல் / அக்டோபர் 31 - செப். 15 th மே விடுமுறை செப் /16-30 வரை படிப்பிற்காக விடுமுறை. அக்டோபர் - பரிட்சை

வேலைநாட்கள் - 23x9+12 = 219

I prof. part II B.A.M.S

நவம்பர் முதல் மார்ச் 15 வரை (மார்ச் 16 முதல் - 31 வரை படிப்பிற்கான விடுமுறை/ஏப்ரல் - பரிட்சை/மே - விடுமுறை)

வேலைநாட்கள் - 23x4 +12 = 104

II prof. part I B.A.M.S

ஜூன் முதல் மார்ச் 15 வரை (மார்ச் 16 - 31 வரை - பரிட்சைக்கான விடுமுறை ஏப்ரல் - பரிட்சை

வேலை நாட்கள் - 23x9+12 = 219

II prof. part II B.A.M.S

மே முதல் - செப் 15 வரை (செப் 16 முதல் - 30 வரை பரிட்சை விடுமுறை. அக்டோபர் - பரிட்சை)

வேலைநாட்கள் - 23x4+12 - 104

III prof part I B.A.M.S

நவம்பர் முதல் செப். 15 வரை (மே - விடுமுறை/செப் 16 - 30 வரை - பரிட்சை விடுமுறை. அக்டோபர் - பரிட்சை

வேலை நாட்கள் - 23x9+12 = 219

III prof. part II B.A.M.S

நவம்பர் முதல் மார்ச் 15 வரை (மார்ச் 16 - 31 வரை - பரிட்சை விடுமுறை. ஏப்ரல் - பரிட்சை)

வேலைநாட்கள் -23x4+12 = 104

11) வகுப்புகள் ஆரம்பம் - ஜூலை 1ம் தேதி முதல் (உத்தேசமாக)

12) வகுப்பு மொழி - ஆங்கிலமும் சமஸ்கிருதமும்.

13) பரிட்சை நாட்கள் -அக்டோபர் 1ம்தேதி - ஏப்ரல் 1ம்தேதி (உத்தேசமாக) விடுமுறை நாட்களில் இவ்விரு தேதிகளும் வருமாயின் அடுத்த வேலை நாட்களில் பரிட்சைகள் தொடங்கும்.

14) வருகைப் பதிவேடு - பரிட்சையில் அனுமதி பெற 80% வருகையை மாணவ, மாணவியர் பாட வகுப்புகளிலும் மற்றும் செய்முறை வகுப்புகளிலும் தனித்தனியாக பதிவு செய்திருத்தல் வேண்டும்.

15) வருகைப் பதிவு குறைவாக இருத்தல் - 10% வரை வருகை குறைவை சரியான காரணங்களை மாணவ மாணவியர் காண்பிக்கும் பட்சத்தில் கல்லூரி முதல்வர் சம்மதித்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரின் அனுமதிக்காக பரிந்துரைக்கலாம்.

16) வினாத்தாள் மறுகூட்டல் மறுதிருத்தல் - அனைத்து பரிட்சைகளுக்கும் மறுகூட்டல் அனுமதியுண்டு. ஒவ்வொரு Professional part I மற்றும் Part-II விலும் வினாத்தாள் மறுதிருத்தல் என்பது ஒரு பாடத்திற்கு ( subject )

மட்டுமே அனுமதிக்கப்படும். வினாத்தாள் முதல்முறையாக எழுதியிருந்தால் மட்டுமே மறுதிருத்தலுக்கு அனுமதி கிடைக்கும். ஒரு பாடத்தில் மாணவ, மாணவியர் 4% அல்லது அதற்கும் மேல் எடுத்திருந்தால்தான் மறுதிருத்தல் அனுமதி வழங்கப்படும்.

17) பரிட்சையிலிருந்து விலக்கி வைத்தல் - I மற்றும் II Professional பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெறாவிட்டால் III professional பாடங்களுக்கான பரிட்சைகள் எழுத இயலாது.

18) தேர்ச்சியுறுவதற்கான மதிப்பெண் -

எழுத்துப் பரிட்சையில் 50% (Theory)

செய்முறை பரிட்சையில் 50% (Practical)

எழுத்துப் பரிட்சை, செய்முறை பரிட்சை, வகுப்பில் நடத்தப்பட்ட எழுத்து மற்றும் செய்முறை பரிட்சை, வாய் வழி பரிட்சை மற்றும் ரொகார்ட் ஆகிய அனைத்தும் சேர்த்து ஒவ்வொரு பாடத்திலும் 50% வாங்கினால்தான் தேர்ச்சி பெற்றவராவார்.

வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் ரெகார்ட் மதிப்பெண்கள், பாடம் சொல்லித் தரும் கல்லூரி ஆசிரியரால் தீர்மானிக்கப்படும்.

19) வகுப்புப் பரிட்சை - வகுப்பில் நடத்தப்படும் பரிட்சைகளில் மாணவ மாணவியர் கட்டாயமாக பங்கெடுத்து மதிப்பெண்கள் பெற வேண்டும். அவ்வாறு பங்கேற்காத மாணவ, மாணவியர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இறுதிப் பரிட்சையில் பங்கேற்க இயலாது.

20) முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மதிப்பெண்கள்

ஒவ்வொரு பாடத்திலும் 75% Distinction

60% First Class மாணவ மாணவியரின் தரவரிசையின் தீர்மானத்தை அவர்கள் தோல்வியுறாது பரிட்சைகளில் இறுதிவரை தேர்ச்சியுற்றிருக்க வேண்டும். மொத்த மதிப்பெண்களை எல்லாப் பாடங்களையும் சேர்த்துக் கூட்டி தர வரிசை நிர்ணயம் செய்யப்படும்.

21) ஆஸ்பத்திரி பயிற்சி - காயசிகித்ஸை - 3 மாதங்கள்

பிரசூதிதந்த்ரம் மற்றும் ஸ்திரீரோகம் - 2 மாதங்கள்

கௌமாரபிருத்யம் - 1 மாதம்

சல்யதந்திரம் - 2 மாதங்கள்

சாலாக்ய தந்திரம் - 2 மாதங்கள்

கம்யூனிட்டி மருத்துவம் - 2 மாதங்கள்

22) தங்கும் விடுதி மற்றும் உணவகம் மாணவ மாணவியருக்கு தங்கும் விடுதிகள் உள்ளன. முதல் 18 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் வருடப் படிப்பில் சேரும்போது குளியலறையுடன் கூடிய இரண்டு படுக்கைகள் வசதி கொண்ட அறைகள் ஒதுக்கப்படும். சைவ உணவு மட்டுமே உணவகத்தில் தரப்படும். விடுதி மாணவர் அனைவரும் கட்டாயம் உணவகத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். விருந்தினர் வருகையை முன்கூட்டியே விடுதிக் காப்பாளிரிடம் தெரிவிக்க வேண்டும். கல்லூரியின் நலன் கருதி கல்லூரி முதல்வர் தவறும் செய்யும் அல்லது காரணம் ஏதும் கூறாமலும் தங்கும் விடுதியிலிருந்து மாணவ மாணவியரை வெளியேற்றலாம்.

23) ஒழுக்கம்

1) ஒழுக்கத்திற்கான கட்டுப்பாடுகளை அதாது நேரங்களில் நிர்வாகம் கொண்டு வரும். 2) மாணவ, மாணவியர் ஒழுக்கத்துடன் மற்றவர்களுடன் பழக வேண்டும்.

3) எந்தவிதமான தகராறுகளும், கோஷமிடுதல், அரசியல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்குபெறக்கூடாது. 4) அசையும், அசையாச் சொத்துகளை மாணவர்கள் கேடு வருத்தக்கூடாது.

5) குற்றங்களின் விளக்கம் கேட்டு தரப்படும் நோட்டிஸ்களுக்கு மாணவர்கள் உடனடி விளக்கக் கடிதம் தர வேண்டும்.

6) அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மாணவர்கள் கல்லூரி அல்லது தங்கும் விடுதிகளிலிருந்து விடுப்பு எடுத்தல் கூடாது.

7) மாணவர்களின் ஏது விஷயம் பற்றி அறிவிக்கப்பட்டாலும் அவர்களது தாய் தந்தையர் உடனடியாக பதிலளித்தல் வேண்டும். நேரில் வரச் சொன்னால் உடன் வரவேண்டும்.

24) உடை - மரியாதைக்குரிய ஆடைகளையே அணிய வேண்டும். வெள்ளைக்கோட் ஆஸ்பத்திரி மற்றும் செய்முறை பயிற்சியில் கட்டாயம் அணிய வேண்டும்.

தற்சமயம் உள்ள சட்ட திட்டங்கள் இவை. மேலும் மாற்றப்படலாம்.

கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெற அணுக வேண்டிய முகவரி -

முதல்வர்

நிர்வாக அதிகாரி

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி

நசரத்பேட்டை - 612 103

போன் - 26272162, 26495783

Details About Subjects and Exams