சொத்தைப் பல்லை தடுக்க என்ன வழி? சில பல் ஈறுகளில் கை வைத்து அழுத்தினால் மஞ்சளாகச் சீழ் போல வருகிறது இதற்குத் தீர்வு என்ன ? 'அரிமேதஸ் தைலம்' எனும் எண்ணெய், ஆயுர்வேத மரு

சொத்தைப் பல்லை தடுக்க என்ன வழி? சில பல் ஈறுகளில் கை வைத்து அழுத்தினால் மஞ்சளாகச் சீழ் போல வருகிறது. இதற்குத் தீர்வு என்ன ?

'அரிமேதஸ் தைலம்' எனும் எண்ணெய், ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். 10-15 சொட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கவும். தினமும் காலை, இரவு உணவிற்குப் பிறகும், காலையில் எழுந்து பல் துலக்கியதும் இவ்வாறு செய்யவும். பல் வலி, சொத்தை, ஈறுகளில் சீழ் போன்றவற்றை நீக்குவதில் இந்தத் தைலம் சிறந்தது. பஞ்சை எண்ணெயில் நனைத்துச் சொத்தை உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்திருக்கவும். தலைக்குக் குளிப்பதற்கும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தவும்.

'தசனகாந்தி' எனும் சூர்ணம் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலைகளில் விற்கப்படுகிறது. இந்தப் பொடியை இரவில் உணவிற்குப் பிறகு பல் தேய்க்கப் பயன்படுத்தவும். பல் வலி, பல் சொத்தை, ஈறுகளில் சீழ் போன்றவற்றை இது விரைவில் குணமாக்கிவிடும்.

குடலிலுள்ள சூட்டினால் ஈறுகளில் சீழ் வரக்கூடும். அடிக்கடி வெந்நீரில் இந்துப்பு (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) அல்லது சாதா உப்புப் போட்டுக் கொப்பளிக்கவும். குடல் சூட்டைத் தணிப்பதற்கு அடிக்கடி கருந் திராட்சை, சுக்கு, சூரத்தாவாரை, ரோஜா மொட்டு, கடுக்காய் இவற்றின் கசாயத்தைக் கொண்டு பேதிக்குச் சாப்பிடவும். 60 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு 250 மி.லி.யாகக் குறைக்கவும். அதில் 125 I.L. கசாயத்தைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

காதில் சீழ் வடிவதற்கு ஆயுர்வேதம் மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமா?

திரிபலா சூர்ணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) 5 கிராம், குக்குலு 3 கிராம் அளவில் எடுத்து அடுப்புக் கரியைப் பற்ற வைத்து எரியும் நெருப்புக் குறைந்து தணலுடன் இருக்கும்போது, அதில் இவற்றைப் போட்டு வரும் புகையைக் காதினுள் காண்பித்தால் காதிலிருந்து வடியும் சீழ் நின்றுவிடும். ஒரு நாளில் குறைந்தது 2-3 முறை இவ்வாறு செய்யவும். சீழ் வருவது நின்றுவிட்டால் க்க்ஷ£ரா தைலம் 3-5 சொட்டு வரை காதினுள் விடவும்.

'வசாலசுனாதி' எனும் தைலத்தைக் காதில்விட காதுச் சீழ், காதுவலி குறைந்துவிடும். இதை 2-3 சொட்டுகள் விடவும்.

எட்டி விதை என்ற ஒரு கடைச் சரக்கு, மிகக் கடினமானது. விஷ இனத்தைச் சேர்ந்தது. இதை வேப்பெண்ணெயில் 4-5 மணி நேரம் ஊற வைத்து ஒரு கூரான இரும்புக் குச்சியில் குத்திக்கொண்டு கொளுத்தி, முன் ஊற வைக்க உபயோகித்த வேப்பெண்ணெயைச் சொட்டு சொட்டாக விடவும். எட்டி விதை எரிந்து கீழே சுடர் தைலம் விழும். இதைப் பததிரப்படுத்திக் கொள்ளலாம். இதைக் காதில்விட வலி நிற்கும். வலியுடன் வரும் சீழும் இருக்கும்.

இப்படிக் காதில் விடும் தைலங்களை மறுதினமோ அல்லது வலி நின்றவுடனேயோ பஞ்சால் துடைத்து விடுவதுதான் நல்லது.