மூலிகை அறிவோம் - திராட்சை Latin Name - Vitis Venifera Sanskrit - Draksha இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்ந்த மலைப் பாங்கான இடங்களில் அதிக அளவில் திராட்சை உற்பத்தியாகிறது உருண்டை,

மூலிகை அறிவோம் - திராட்சை

Latin Name - Vitis Venifera

Sanskrit - Draksha

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்ந்த மலைப் பாங்கான இடங்களில் அதிக அளவில் திராட்சை உற்பத்தியாகிறது. உருண்டை, நீட்டம், பெரியது, சிறியது என்ற அமைப்பு, வெள்ளை, கருப்பு, சிவப்பு என்ற நிறம் ஆகியவை காரணமாக திராட்சையின் இனங்கள் பதினான்குக்கும் அதிகமாகின்றன.

அங்கூர் திராட்சை என்பது பசுவின் பால் மடிக்காம்பு போன்று நீளமாக விதையுடன் கூடியது, சிறிதாக விதையின்றி அமைந்துள்ளதை AvIv திராட்சை என்றும் கூறுவது வழக்கம்.

நல்ல சதைப் பற்றுடன், தோல் மெல்லியதாகவும், சிறிய விதைகள் உள்ளதுமான திராட்சை சிறந்தது புளிக்கும் இனத்தவை சிறந்ததல்ல. பெரும்பாலும் உலர்ந்தும், சில சமயங்களில் பசுமையாகவும் இவை விற்கப்படுகின்றன.

திராட்சை இனிப்பு, குளிர்ச்சி, நெய்ப்புத்தன்மை பொருந்தியது. மற்ற பழங்களைப் போலில்லாமல் இது சீக்கிரம் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளுக்கு வலுவைக் கொடுத்து அவை திறம்பட செயலாற்ற உதவுகின்றது. ஜீரண சக்தி அதிகமாவதுடன் நன்கு பக்குவமடையாமல் ஆங்காங்கு தேங்கிநிற்கும் கழிவுப்பொருள்களை உறைந்த நெய்யை உருக்குவது போல் இளக்கியும், பக்குவப்படுத்தியும், அவைகளை வெளியேற்றவும் உதவுகின்றது. இதனால் வயிறு பஞ்சு போன்று மிருதுவாகவும், ரத்தம் சுத்தமாகவும் ஆகின்றன.

கீழ் அல்லது மேல் நோக்கிச் செல்ல வேண்டிய வாயு, சிறுநீர், மலம் போன்ற கழிவுப் பொருள்களும் உள்ளுறுப்புகளில், ஊடுருவிச் செல்லும் போஷணைப் பொருள்களும் ஏதேனும் கோளாறு காரணமாக வழிதப்பிச் செல்லுவதாலோ அல்லது செல்லும் வழியறியாது தேங்கி நிற்குமிடத்தோ திராட்சையை உபயோகிக்க அது அவற்றின் தடையை நீக்கிக் அதனதன் இயற்கை வழியே செல்ல மிகவும் உதவுகிறது.

கபத்தின் சீற்றத்தில் இனிப்புப் பொருள் பத்தியமல்ல. ஆனால் திராட்சை விதிவிலக்கு. காரணம் அது ஜீரணசக்தியை மேம்படுத்தி, கழிவுப் பொருள்களை உடலிலிருந்து வெளியேற்றுவதால்தான்.

நோயால் நலிந்தவர், சிறு குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்குமே புஷ்டியைத் தரக்கூடிய சிறந்த பழமாகும். அதன் பழரஸம், திராட்சை கஷாயம், திராக்ஷ£ரிஷ்டம் போன்றவற்றைப் பருகியவுடன் ஓர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. இதன் புஷ்டி, குளிர்ச்சி, நெய்ப்புத் தன்மை போன்ற குணங்களால் தண்ணீர் தாகம், அங்கங்கள் எரிதல், பித்தக் கோளாறுகள், தலைசுற்றல், மயக்கம், வாய் மூக்கு போன்ற துவாரங்கள் வழியே ரத்தம் பெருக்கெடுக்கும் ரத்தபித்தம் என்னும் நோய், சோகை போன்ற உஷ்ண சம்பந்தமான கோளாறுகள் குறைகின்றன.

நெய்யில் பொரித்த திராட்சையைச் சூடாக உட்கொள்ள வரட்சியுடன்

கூடியதும், கபத்துடன் கூடியதும் இருமல் குணமடையும்.

இதய பலவீனத்தால் படபடப்பு, இதயம் அதிகமாகத் துடிப்பது போன்ற நிலையில் பன்னீரில் சுமார் 30-40 திராட்சைகளை ஊற வைத்துப் பிரிந்து வடிகட்டிய ரஸத்தைப் பருகுதல் நலன் தரும்.

4 அவுன்ஸ் (100 IL) தண்ணீரில் 35 கிராம் திராட்சையை ஊறவைத்து கசக்கிப் பிழிந்து சம அளவு பசுவின் பால் கலந்து பருக, மூத்திரம் அதிகமாகப் போகுதல், நீரழிவு, கல்லடைபபு, விரை விக்கம் போன்றவை குறைகின்றன.