ஆயுர் வேதம் உடலும் சமையலும் உணவை பக்குவமாக சமைப்பது என்பது பெரிய கலை பொதுவாக உணவை சமைத்துத்தான் சாப்பிட வேண்டும் பசியை தூண்டிவிடும் 'ஜாடராக்னி' என்னும் நெருப்

ஆயுர் வேதம்

உடலும் சமையலும்

உணவை பக்குவமாக சமைப்பது என்பது பெரிய கலை.பொதுவாக உணவை சமைத்துத்தான் சாப்பிட வேண்டும். பசியை தூண்டிவிடும் 'ஜாடராக்னி' என்னும் நெருப்பானது அணைந்துவிடாமலும் நோய்வாய்ப்படாமலிருப்பதற்காகவும் தான் சமைத்துண்பது என்பது வழக்கமாகியது. அதாவது சகல ஜீவராசிகளின் வயிற்றிலும் நெருப்பாகவுள்ள ஜாடரக்னியானது அணைந்துவிட்டால் மரணமும், அதுவே நோய் ஏதும் அண்டாமல் காப்பாற்றப்படுமானால் நீண்ட ஆயுள் கிடைக்கவும் ஏதவாகிறது. இந்நெருப்பினை நோய் ஏதேனும் தாக்கினால் அம்மனிதன் நோயாளி ஆகிவிடுவதால் இந்த அக்னியே உடலின் நிலை நிறுத்தத்திற்கும் உடல் அழிவதற்கும் மூலகாரணமாக உள்ளது. இவ்வளவு முக்யத்வம் வாய்ந்த இந்த ஜாடாக்னியை நாம் எவ்வாறு நோயற்றதாக வைத்திருக்கமுடியும் என்று ஆராய்ந்தோமேயானால் உணவில் ஏழு வகையான கல்பனைகளை அஷ்டாங்க சங்க்ரஹம் எனும் வாக்படாசாரியர் இயற்றிய நூலில் விஸ்தாரமாகக் காணப்படுகிறது. அவைகளை சற்று கூர்ந்து கவனிப்போம்.

1. சுபாவம் - எளிதில் ஜீர்ணமாகக்கூடிய உணவு, ஜீர்ணமாவதற்கு நெடுநேரம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு என்று இருவகை. சுலபமாக ஜெரிக்கக்கூடிய உணவை சற்று அதிக அளவில் சாப்பிட்டாலும் கூட அக்னிக்கு அதை ஜீர்ணம் செய்வதில் அதிக சிரமம் இருக்காது. ஆனால் அக்னிக்கு over load தருவது சுலபத்தில் ஜீர்ணமாகாத உணவு வகைகள். அப்படிப்பட்ட உணவை நாம் சாப்பிட நேரும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் உணவின் இயற்கையான சுபாவத்தை அறிந்தபிறகுதான் உட்கொள்ளவேண்டும். இவ்விஷயத்தில் அக்கறை உள்ளவர்களுக்கு ஜாடராக்னியின் நல்ல ஒத்துழைப்பினால் நீண்ட ஆயுள் கிடைக்க வாய்ப்புள்ளது.

2. சேர்க்கை - உணவின் பதார்த்தங்கள் தனிதனியாக இருக்கும்போது அவைகளின் குணாதிசயங்கள் பதார்த்தங்களின் சேர்க்கையினால் புதிய வகையான குணாதிசயங்கள் வெளிப்படும். உதாரணத்திற்கு கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தானிக்காய் தனித்தனியாக உபயோகப்படுத்தும்போது உள்ள அவைகளின் செய்கைகள், இம்மூன்றையும் சேர்த்து உட்கொள்ளும்போது மாறுபடுகின்றன. "திரிபலா" என்ற இந்த மருந்து சேர்க்கையை இரவில் தூள் செய்து சிறிது தேன் மற்றும் நெய்விட்டு குழைத்து படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டால் சிறந்த கண் பார்வைக்கும், கண்நோய்கள் நீங்குவதற்கும் மருந்தாகும். தனியாக இவைகளை உபயோகிக்கும் போது இந்த குணாதிசயம் கிட்டுமா என்பது ஆராயத்தக்கது. இப்படி உணவின் சேர்க்கையினால் ஏற்படும் மாறுபாட்டினை நாம் உணவு உண்ணும்போது நன்கு ஆராய வேண்டும்.

3. பாகம் - அரிசியை தண்ணீரில் போட்டு நன்கு அலம்பி பிறகு வேண்டுமளவு தண்ணீர் விட்டு சாதம் வடிக்கிறோம். தண்ணீரிலும் நெருப்பிலும் அரிசியை அலம்புவதும் வேக - வைப்பதும் என்ற முறையினால் எளிதில் ஜீர்ணமாகாத அதன் தன்மை நீங்கி சுலபத்தில் ஜெரிக்க வழிவகுக்கிறது. அதுபோல நாம் சமையல் செய்யும் பாத்திரங்கள் கூட உணவின் தன்மையை மாற்றிவிடுகின்றன. தயிரை உணவாகக்கொள்ளும்போதும், மோராக சாப்பிடும் போதும் அவைகளின் குணம் மற்றும் செயல் அனைத்தும் வேறுபடுகின்றன. வஸ்து ஒன்றுதான் ஆனால் தண்ணீர் விட்டு சிறிது உப்பு கலந்து மத்து வைத்து நன்கு கடைவதால் இவை செயல்திறன் வித்யாசப்படுகின்றன. உடலில் கடைவதால் இவை செயல்திறன் வித்யாசப்படுகின்றன. உடலில் வீக்கம் உள்ள ஒரு நபர் தயிர் சாப்பிட்டால் வீக்கம் அதிகரிப்பதும் அதுவே மோராக சாப்பிட்டால் வீக்கம் வடிந்து விடுவதையும் காண்கிறோம். வெறும் மத்து வைத்து கடைவதால் ஏற்படும் பாகவிஷேத்தை போல ஒவ்வொரு சமையல் நுணுக்கங்களிலும் நாம் கூர்ந்து கவனித்து ஜாடராக்னியை காப்பாற்ற வேண்டும்.

4. உணவின் அளவு - ஜாடராக்னியின் தன்மையைப் பொருத்து உணவின் அளவை நாம் தீர்மானிக்க வேண்டும். நண்பர் பத்து இட்லி சாப்பிடுகிறாரே, நானும் சாப்பிடுகிறேன் என்று புறப்பட்டால் அக்னியால் ஜெரிக்க முடியாமல் போய் நோய் ஏற்படுகிறது. உணவின் அளவை மிகுந்த சிரத்தையுடன் கவனித்து சாப்பிட அதுவே நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணமாகும். பழக்கப்பட்ட உணவை நெய்ப்பு மற்றும் சூடானதும், எளிதில் ஜெரிக்கக்கூடியதும், அறுசுவைகளும் சேர்ந்துள்ளதும், நிதானமாகவும், பசியுள்ள போதும் நாம் விரும்புபவர்களுடன் கூட அமர்ந்து சாப்பிடும் உணவினால் ஜாடராக்னிக்கு சுகம் ஏற்பட்டு உடலில் உணவின் சத்தை வேகமாக தாதுக்களில் பரவி நீண்ட ஆயுள், ஒளி, நிறம், தேஜஸ், புஷ்டி மற்றும் பலம் ஏற்பட ஏதுவாகிறது. மேற்குறிப்பிட்ட ஏழு ஆஹார கல்பனைகளால் பசியை தூண்டும் அக்னியை நாம் போற்றி பாதுகாத்து வருமேயானால் அதுவே நோயற்ற வாழ்விற்கு வழியாகும் என்பதால் உணவில் அதிக சிரத்தையுடன் இருப்போம் என்று திடசங்கல்பம் செய்து கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103. Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net