ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் கேள்வி - பதில் பொடுகுத் தொல்லை நீங்க வழி என்ன? மயிர்க் கால்களில் ஏற்படும் வரட்சியும் உடலின் சூடும் தலையிலுள்ள தோல்பகுதிகளுக்கு எண்ணெய் பச

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்.

கேள்வி - பதில்

பொடுகுத் தொல்லை நீங்க வழி என்ன?

மயிர்க் கால்களில் ஏற்படும் வரட்சியும் உடலின் சூடும் தலையிலுள்ள தோல்பகுதிகளுக்கு எண்ணெய் பசையை குறைத்து விடுகின்றன. முடியை சீப்பினால் வாரும்போது வரண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உரிகின்றது. இதைத்தான் பொடுகு என்று குறிப்பிடுகிறோம். இது தொத்து வியாதியைப் போல பரவுவதுண்டு. தலையிலுள்ள பொடுகு காதுக்குள் பரவி கடும் அரிப்பையும் ஏற்படுத்தலாம். அதனால் பொடுகுள்ளவர்கள் உபயோகிக்கும் சீப்பை மற்றவர் உபயோகிக்கக்கூடாது. தலையைச் சொரிந்த உடனே காதைக் குடைவதும் நல்லதல்ல.

சீயக்காய், சோப்பு போன்ற தோல் வரட்சியை அதிகமாக்கும் பொருளை அடிக்கடி உபயோகிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வடித்த கஞ்சி, கடலைமாவு, பயறுமாவு, முதலியவைகளில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் குழைத்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் தோலின் நெய்ப்பும் பதமும் குறையாமல் பாதுகாக்க முடியும். எவ்வளவு எண்ணெய்யைத் தடவினாலும் பொடுகுடன் கூடிய தோல்பகுதி உறிஞ்சிக் கொண்டுவிடும். அதனால் விடாமல் அடிக்கடி தலைக்கு எண்ணெயைத் தடவ வேண்டும்.

காளான் இனத்தைச் சேர்ந்த கிருமியால் பொடுகு ஏற்பட்டதாகயிருந்தால் காதுகளில் அரிப்பு, சீழ், இரைச்சல் போன்ற உபாதைகளை உண்டாக்கக்கூடும். உடலிலும் பரவி, படை, சொறி போன்ற தோல் நோய்களும் ஏற்படுத்தக்கூடும். அதனால் சற்று கவனத்துடன் ஆரம்பத்திலேயே பொடுகை தடுப்பது அவசியம்.

அருகம்புல்லின் கஷாயத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் சில மூலிகைகளும் கலந்து காய்ச்சப்படும்.

தூர்வாதி கேர தைலம் - ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தைலத்தைத் தினமும் தலைக்குத் தடவி மேற்குறிப்பிட்ட கஞ்சி அல்லது மாவை தண்ணீரில் கரைத்து தேய்த்துக் குளித்த வர பொடுகு, அரிப்பு குறைந்துவிடும். உடலில் வரண்ட படையுள்ளவர்களும் இந்த எண்ணெயைத் தேய்த்து வர குணம் தெரியும்.

பாலும் மிளகும் அரைத்துச் சுடவைத்துத் தலைக்கு தூர்வாதி கேர தைலம் 1/2 மணிமுதல் 3/4 மணி நேரம் வரை ஊற வைத்துக் குளிக்கும் போது தேய்த்து குளிப்பதும் நல்லதே.

பொடுதலை என்ற ஒரு செடி தமிழ்நாட்டில் ஆறு குளம் குட்டை இவைகளின் கரைகளில் தானாகவே வளர்கிறது. இதன் காய் திப்பிலியை ஒத்திருக்கும். இதை வேருடன் பிடுங்கி பிழிந்து எடுத்த சாறுடன் அதற்கு சம அளவு நல்லெண்ணையும் சேர்த்து வெய்யிலில் வைத்து சாறு சுன்டியதும் எண்ணையை மாத்திரம் எடுத்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்கும்.

இரவில் சரியாக தூக்கம் வருவதில்லை. ஆயுர் வேதத்தின் மூலம் இதற்கு தீர்வு என்ன?

இனிய தூக்கத்திற்கு எருமைப் பால், எருமைத் தயிர், கரும்புச்சாறு, இவற்றை ஜீர்ண சக்தியை ஒட்டி அதிகம் சேர்ப்பது நலம் தரும்.

உடல் சோர்வு நீங்குவதற்கு இதமான வெண்ணீரிலோ குளிர்ந்த தண்ணீரிலோ குளிப்பது நல்லது.

அரிசி மாவில் வெல்லம் கலந்து வேக வைத்து எடுக்கப்படும் இனிப்புப் பண்டம் அரிசி சாதம், உளுந்து போன்றவைகளில் உணவாக அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

உடல் உஷ்ணத்தினால் தூக்கம் வரவில்லை என்றால் ஹிமசாகர தைலம் அல்லது சந்தனாதி தைலம் ஆயுர் வேத மருந்து கடைகளில் கிடைக்கும். உச்சந் தலையில் அரை மணி முதல் முக்கால் மணி வரை பஞ்சில் நனைத்து தலையில் வைத்து ஊரிக்குளிப்பது நல்ல தூக்கத்தைத் தரும்.

உடல் வலியால் தூக்கமில்லை என்றால் தாண்வந்திரம் தைலத்தைத் தலைமுதல் பாதம் வரை சிறிது சூடாகத்தேய்த்து ஒரு மணி நேரம் ஊரிக் குளிப்பதால் உடல் வலி குறைந்து தூக்கம் வரும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் மிளகு ரஸம் அல்லது ஜீரக ரஸம் சுட்ட அப்பளத்துடன் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையில் சூடாக சாப்பிட வேண்டும்.

உறைந்த தயிரின் மேல் நிற்கும் தெளிந்த நீரை உள்ளங்காலில் அழுத்தி தேய்த்துவிட தூக்கம் வரும். மற்றவர் உதவியுடன் உடலை இதமாக பிடித்துவிடச் சொல்வது, இரவில் மனதிற்கு பிடித்த இனிய சங்கீதம் கேட்பது, தூக்கத்தை வரவழைக்கும் வழிகளாகும.

அதி மதுரத்தையும் ஜீரகத்தையும் சம அளவில் நன்கு பொடித்து துணியில் சலித்து வைத்துக் கொள்ளவும். 2-3, கிராம் அளவில் இரவில் படுக்கும் முன் ஒரு சிறிய பூவம் வாழைப்பழத்துடன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.

வழக்கமாக தூங்கி விழிக்கும் நேரங்களை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றாமல் இருப்பது நல்லது. படுக்கப்போகும்முன் மனக்கவலை, கோபம், துக்கம் முதலிய மனக்கிளர்ச்சி தரும் உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது. தலையணையன்றி படுத்தல் நல்லதல்ல. தரைக்கும் தலைக்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்பும்படி தலையணை இருக்க வேண்டும்.

நோய் காரணமாகத் தூக்கம் சரியாக வரவில்லையென்றால் அதனை மருத்துவ உதவியால் குணப்படுத்திக் கொள்வது அவசியம்.

4. வாயில் கொப்பளங்கள் உண்டாவதன் காரணம் என்ன? இதை நிரந்தரமாகத் தீர்க்க வழி என்ன?

சத்தற்ற உணவு, சாப்பிட்ட பிறகு வாய்சுத்தியில் கவனக்குறைவு, வாயில் தங்கிவிடும் உணவுப் பகுதிகள் புளித்து சுரப்பிகளை புண்ணாக்கி கொப்பளங்கள் ஏற்படுதல், தேவையில்லாமலேயே வீர்யமுள்ள மருந்துகளை அதிகம் சாப்பிடுதல்

தாம்பூலம் போடுபவர்கள் பாக்கும் சுண்ணாம்பும் அதிகமாகச் சேர்ப்பது, பழக்கமில்லாத சுண்ணாம்பை உபயோகிப்பது, காரமுள்ள வெற்றிலை, பச்சைப்பாக்கு முதலிய காரணங்களால் வாய்ப்புண் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றன.

கருங்காலிக் கட்டையை வெட்டிப் பெருந்தூளாக இடித்து தண்ணீரில் போட்டு (60 கிராம் கட்டைக்கு 1 லிட்டர் தண்ணீர்) கஷாயமாக்கி (250 IL) கஷாயத்தை வடிகட்டி மறுபடியும் இறுகித் திரளும் வரை காய்ச்சி இறக்கி நிழலில் காய வைத்துக் கொள்ளவும். நல்ல துவர்ப்புச் சுவையுள்ள இது காசுக் கட்டி என்று பெயர். வாய்ப்புண், அஜீர்ணபேதி, மலத்துடன் ரத்தப்போக்கு, ஈறுகரைந்து பல்வேர் தெரிதல், பற்களிலிருந்து ரத்தம் கசிதல், கூச்சம், வாய்க்கொப்பளம் முதலியவைகளில் இதன் தூளை 2-6 டெஸிக்ராம் அளவில் தேனில் குழைத்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து விழுங்க குணம் தெரியும்.

வெளுப்பு கத்தக்காம்பு ஒதலை மரத்தின் இலைகளிலிருந்து எடுக்கப்பெறம் சத்து (white catechu) கசப்பும் துவர்ப்புள்ள இது எகிறுகளில் வீக்கம், பல்வலி, வாய்க்கொப்பளம், எரிச்சல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல் இவைகளில் காசுக்கட்டிக்குக் குறிப்பிட்டது போல சாப்பிட மிகவும் சிறந்தது.

பால்வடியும் மரங்களாகிய ஆல், அரசு, அத்தி மற்றும் இத்திமரப்பட்டைகளுடன் கருங்காலிக் கட்டை மற்றும் வேலம்பட்டையும் சேர்த்து கஷாயம் காய்ச்சி வாய் கொப்பளிக்க எப்பேர்ப்பட்ட வாய்க்கொப்பளமும், வாய் வேக்காளமும் குணமாகிவிடுகின்றன.

அதிமதுரத்தூள் 20 கிராம், காசுக்கட்டி 10 கிராம், கத்தக்காம்பு 10 கிராம், நெய்யில் பொரித்த வால் - மிளகுத்தூள் 5 கிராம் சேர்த்துத் தண்ணீர் விட்டறைத்து சிறிய மாத்திரைகளாகச் செய்து வாயிலடக்கிக் கொள்ள வாய்ப்புண், தொண்டைப்புண், வாய்க்கொப்பளம் நீங்கி விடும்.

திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய்ச் சூர்ணத்துடன் அதி மதுரத்தூள் சீமமாக 5 கிராம் வீதமெடுத்து தேன் மற்றும் நெய் 1 ஸ்பூன் (5 IL) அளவில் குழைத்து வாய்க்கொப்பளத்தில் பூச அவை நீங்கி விடும்.

24914227 - ஸ்ரீதர்