மூலிகைக் கஞ்சி ஒரு பலம் (60 கிராம்) மூலிகைச் சரக்கை சூர்ணம் செய்து, எட்டு பங்கு ஜலத்தில் கஷாயம் போல் (120 IL) காய்ச்சி எடுக்கவும் இதற்கு 'ப்ரமத்யா' எனப்பெயர் இதை இளஞ்சூடாக

மூலிகைக் கஞ்சி

ஒரு பலம் (60 கிராம்) மூலிகைச் சரக்கை சூர்ணம் செய்து, எட்டு பங்கு ஜலத்தில் கஷாயம் போல் (120 IL) காய்ச்சி எடுக்கவும். இதற்கு 'ப்ரமத்யா' எனப்பெயர். இதை இளஞ்சூடாக பருக வேண்டும்.

முஸ்தாதி ப்ரமத்யா - கோரைக் கிழங்கும் வெட்பாலரிசியும் சேர்த்து ப்ரமத்யா என்கிற கஞ்சி பக்குவம் செய்யவும், இதை ஆற வைத்து, தேன் சேர்த்து இரண்டு பலம் (120 IL) அளவில் உட்கொள்ள இரத்தபேதி நீங்கும்.

யவாகூ முறை - நாலு பலம் (240 கிராம்) உணவு அல்லது ஒளஷதச் சரக்கை அறுபத்தினாலு பலம் ஜலத்தில் சேர்த்து, அரைவாசி கறையுமளவு காய்ச்சியெடுக்கப்படும் குழம்பான திரவம் 'யவாகூ' எனப்படும். ஆம்ரத்வகாதி யவாகூ - மாம்பட்டை, மரிமாஞ்செடிப்பட்டை, நாவற்பட்டை இவற்றை கஷாயமிட்டு, அதில் சம்பா அரிசியை உடைத்துச் சேர்த்து யவாகூவாகப் பக்குவம் செய்து உட்கொள்ள கிரஹணீரோகம் (Sprue) தீரும்.

யூஷம் செய்யும் முறை - ஒரு கஷாயத்தில் பிரதான வஸ்து ஒரு பலமும், சுக்கு, திப்பிலி இவை அரைக்கால் பலமும், ஒரு பிரஸ்த்தம் (1லிட்டர்) ஜலத்தில் சேர்த்து காய்ச்சியெடுக்கப்படும் கஞ்சீ 'யூஷம்' எனப்படும்.

ஸப்தமுஷ்டிக யூஷம் - கொள், யவதானியம், இலந்தம் பழம், பயறு, முள்ளங்கி, கிரந்தி தகரம், சுக்கு, தனியா இவற்றாலான யூஷத்தையுபயோகிக்க கபம், வாதங்களின் கோளாறுகள், ஸந்நிபாதஜ்வரம் (வாத பித்த கப சீற்றத்தினால் உண்டாகும் காய்ச்சல்) மூட்டு வலி, வீக்கம் இவை தீரும். தொண்டை, வாய், மார்பு இவற்றிலுள்ள மலங்களை வெளிப்படுத்தி அவற்றிற்கும் சுத்தியைத் தரும். இக்கஷாயத்திற்கு 'ஸப்த முஷ்டிகயூஷம்' என்று பெயர்.

பேயா - ஒரு பலம் (60 கிராம்) பதார்த்தத்தைப்பொடித்து, அறுபத்திநாலு பாலம் ஜலத்தில் பக்குவம் செய்து, அரைவாசி குறையும்படி காய்ச்சியெடுத்து, உணவு முதுலியதுடன் உட்கொள்ளலாம். இதை "பேயா" எனக்கூறுவர்.

உசீராதி பேயா - வெட்டிவேர், பர்ப்பாடகம், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, சுக்கு, சந்தனம் இவற்றால் பேயாவைப் பக்குவம் செய்து, குளிர்ந்த பிறகு, உடற்சூடும் ஜ்வரமும் நிவ்ருத்தியாவதற்கு உபயோகிக்கலாம்.உஷ்ணோதகம் - ஜலத்தை எட்டில் ஒரு பங்காவது, நாலில் ஒரு பங்காவது, அரைவாசியாவது, கொதிவரும் வரையிலுமாவது காய்ச்சியெடுக்க அது 'உஷ்ணோதகம்' எனப்படும். உஷ்ண ஜலத்தை இரவில் பருகிவர கபத்தினால் ஏற்படும் நோயகள், மூட்டுவீக்கம் மற்றும் வலி, உடல் பருமன்நோய், இருமல்,

மூச்சுத் திணறல், ஜ்வரம் இவை நீங்கும், மூத்திரப்பையிலுள்ள நோய்களையும் இது போக்கும். பசியை நன்கு தூண்டி விடும் சக்தியும் இதற்குண்டு.

ஷீரபாக விதி - மூலிகை சரக்குக்கு எட்டு மடங்குபாலும், பாலுக்கு, நான்கு மடங்கு ஜலமும் சேர்த்து, சேர்க்கப்பட்ட பால் மாத்திரம் மிகுந்திருக்குமாறு காய்ச்சி எடுக்கவும், மூலிகைகள் சேர்க்காமல் வெறும் பாலை மாத்திரம் மேற்கூறிய படி ஜலம் சேர்த்துக் காய்ச்சி அன்னம் முதலியதற்கு பதிலாக அஜீர்ண வயிற்று வலியில் உட்கொள்ளலாம்.

பஞ்சமூலி க்ஷீரம் - சிறுவழுதுணை, சிறுகாஞ்சொறி, பூனைக்காலி, சிற்றாமுட்டி, கண்டங்கத்திரி, வெல்லம், சுக்கு இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த பால் கபஜ்வரம், மலபந்தம், நீர்ச்சுருக்கு இவற்றை நீக்கும். அன்னம் பக்குவம் செய்யும் வகை நோய்களுக்கு தகுந்தவாறு உணவுகளைப் பக்குவம் செய்யும் வகைகளை அறிவோம்.

யவாகூ அல்லது க்ருஸரா - அரிசி, பயறு, உளுந்து, எள் இவற்றில் எதையாவது எடுத்துப்பொடித்து, அதற்கு ஆறு பங்கு ஜலம், சேர்த்து குழம்பாகக் காய்ச்ச வேண்டும், இதற்கு 'யவாகூ' அல்லது க்ருஸரர் எனப்பெயர். ரோகிகளுக்கு இது அனுகூலமானது. மலத்தைக்கட்டும் பலம் வாய்ந்தது. போஷாக்கை அளிப்பது.

விலேபீ - முன்போலவே அரிசி முதலியதையுபயோகித்து, அவற்றிற்கு நாலு பங்கு ஜலம் சேர்த்து யவாகூவை விட இன்னும் கனமாகப் பக்குவம் செய்ய, அவ்வுணவு 'விலேபீ' எனப்படும், இதற்கு போஷாக்கு, ஹ்ருதயத்திற்கு நலம் தரும் சக்தியுண்டு. இனிப்பாகயிருப்பதால் பித்தத்தை குறைத்து விடும்.

பேயாவும் யூஷவும் - அதிக தண்ணீரும் சொற்ப அரிசியுடையதும் என பேயாவென்கிற மற்றோருவித கஞ்சியுண்டு. முற்கூறிய அரிசி முதலிய பதார்த்தங்களில் ஒன்றை பதினாலு பங்கு ஜலம் சேர்த்து பக்குவம் செய்ய வேண்டும். யூஷமென்னும் கஞ்சி போயவைப் பார்க்கினும் சிறிது கனமாயிருக்கும். பேயா யூஷத்தினும் கணத்தில் லேசானது. மலக்கட்டையும், தாது புஷ்டியைத் தரும் சக்தியும் அதற்குண்டு, யூஷமும் எளிதில் ஜீர்ணமாகும், லேசானது. பலம் தரும், தொண்டைக்கு நல்லது கபத்தை போக்கும். மண்டம் - நாலு பலம் அரிசியைப் பதினாலு மடங்கு ஜலத்தில் பக்குவம் செய்து, அதிலிருந்து அவிழைத் தவிர்த்து கஞ்சியை மாத்திரம் வடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பக்குவம் செய்து வடித்தெடுத்த கஞ்சி வெகு சீக்கிரத்தில் ஜீர்ணமாகும். இனிப்பாகயிருக்கும். இதற்கு 'மண்டம்' எனப் பெயர். இந்த மண்டத்தில் சுக்கும், இந்துப்பும் சேர்த்து உபயோகித்தால் சிறந்த பசையைத்தூண்டி விடும் சக்தியும், ஜீர்ணமாகாமல் கிடப்பதை ஜெரிக்கவும் செய்து விடும்.

அஷ்ட குண மண்டம் - தனியா, சுக்கு, திப்பலி, மிளகு, இந்துப்பு, இவற்றையும் மோரையும் மேற்கூறிய மண்டத்தில சேர்த்து, பெருங்காயமும் எண்ணெயும் பொரித்துச் சேர்த்து பக்குவம் செய்தால் அதற்கு 'அஷ்ட குண மண்டம்' என்று பெயர். இது பசியைத் தூண்டும். மூத்திரப்பையிலுள்ள தோஷங்களையும், மூத்திரம் சிக்கிக்கொள்வதையும் போக்கக்கூடியது. ரத்தத்தை அதிகரிக்கும், ஆயாஸத்தைத்தீர்க்கும், ஜூரம் போக்கும். மூன்று தோஷங்களாகிய வாத பித்த கபங்களை சமநிலைக்கு கொண்டு வரும் தன்மையுடையது.

வாட்ய மண்டம் - யவதான்யத்தை நன்றாக கழுவியுலர்த்தி, நன்கு வறுத்து, முன்போலவே பக்குவம் செய்ய அதற்கு 'வாட்ய மண்டம்' எனப்பெயர். அதற்கு கப பித்தத்தை குறைத்து விடும் சக்தியுண்டு, தொண்டைக்கு இதமானது. ரத்த பித்தங்களை சுத்தம் செய்துவிடும்.

லாஜமண்டபம் - நெற்பொறிகளாலாவது, வறுத்த அரிசியிலாவது முன்போல் பக்குவம் செய்தால் அதற்கு லாஜமண்டம் என்றுபெயர். கப, பித்தத்தைக் குறைக்கும். மலக்கட்டு உண்ட உடல் எரிச்சல், ஜ்வரம் போக்கும்.