சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம் 1 நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய! நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகராய நம:சிவாய!! நாகங்களை ஹாரமாகக் க

சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம்

1.நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய

பஸ்மாங்கராகாய மஹேச்வராய!

நித்யாய சுத்தாய திகம்பராய

தஸ்மை நகராய நம:சிவாய!!

நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும், விலக்ஷணயான கண்ணையுடையவரும், விபூதி பூசியவரும், மஹேச்வரனாயும், நித்யராயும் சுத்தராயும், திசைகளையே ஆடையாக உடையவருமான அந்த நகாரஸ்வரூபினியான சிவனுக்கு நமஸ்காரம்.

2.மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய

நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!

மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய

தஸ்மை மகாராய நம:சிவாய!!

தேவகங்கைத் தண்ணீர் புஷ்பம் இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேச்வரர், பிரமதர்கள் இவர்களுக்குத் தலைவரும், மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும் ஆன அந்த மகாரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

3.சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-

ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

தஸ்மை சிகாராய நம:சிவாய!!

பார்வதீ முகமாகிய தாமரைக்கொத்துக்கு சூர்யனாயிருப்பவரும், தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவரும், நீலகண்டரும், வ்ருஷபக்கொடி கொண்டவரும் ஆன அந்த சிகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

4.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-

முனீந்தர தேவார்சித சேகராய!

சந்த்ரார்கவைச்வாநர லோசனாய

தஸ்மை வகாராய நம:சிவாய!!

வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற முனிவர்களும், தேவர்களும் பூஜித்த உச்சியையுடையவரும், சந்திரன், சூர்யன், அக்னி ஆகிய கண்களையுடையவருமாகிய அந்தவகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

5.யக்ஷஸ்வரூபாய ஜடாதராய

பிநாகஹஸ்தாய ஸநாதனாய!

திவ்யாய தேவாய திகம்பராய

தஸ்மை நகராய நம:சிவாய!!

யக்ஷஸ்வரூபியாவும், ஜடைதரித்தராயும், பிநாகவில்லை கையில் கொண்டவரும், பழமையன தேவரும் திகம்பரருமான அந்த யகாரரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் முற்றிற்று.