1
ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!
பூதேச பீதபயஸூதன மாமநாதம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!
பூதேச பீதபயஸூதன மாமநாதம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே. மகேசனே. சம்போ. பூதங்களின் தலைவரே. பயந்தவர் பயம் களைபவரே. ஸம்ஸாரம் என்ற துன்பக்காட்டிலிருந்து அநாதனான என்னைக் காத்தருளும்
2
ஹேபார்வதீஹ்ருதயவல்லப சந்த்ரமௌலே
பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப!
ஹேவாமதேவ பவ ருத்ர நிநாகபாணே
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப!
ஹேவாமதேவ பவ ருத்ர நிநாகபாணே
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: ஹே பார்வதீகாந்த!ச்ந்த்ரமௌலே!வாமதேவ!பிரமதநாதனே!மேருவை வில்லாகக் கொண்டவரே. பவனே. ருத்ரனே. பிநாகத்தை வில்லாகக் கொண்டவரே. ஸமமஸாரமாகிய து:கப்பிடியிலிருந்து என்னைக் காப்பாயாக
3
ஹேநீலககண்டவ்ருஷபத்வஜ பஞ்சவர்த்ர
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ I
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ I
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: ஹே நீலகண்டனே. காளைக்கொடியோனே. ஐந்துமுகங்கள் கொண்டவனே. உலகக் கடவுளே. ஆதிசேஷனை வளையாகக் கொண்டவனே. ப்ரமதத்தலைவனே. சர்வனே. ஜடாபாரம் தாங்கியவனே. பசுபதியே. கிரிஜாபதியே. என்னை உலகியல் து:க்கத்திலிருந்து காத்தருள்வாயாக!
4
ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச I
பாணேச்வராந்தரியோ ஹரலோக நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச I
பாணேச்வராந்தரியோ ஹரலோக நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: ஹே விசிவநாத, சிவ. சங்கர. தேவ தேவ. கங்காதர. பிரமத நாயக. நந்திக்கு ஈசனே. பாணாஸுரன், அந்தகாஸுரன் ஆகியோரை அழித்தவரே. ஹரனே உலக நாதனே என்னை ஸம்ஸாரதுக்கத்திலிருந்து காத்தருள்வீராக!
5
வாராணஸீபுரபதே மணிகர்ணிகேச
விரேச தக்ஷமககால விபோ கணேச!
ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
விரேச தக்ஷமககால விபோ கணேச!
ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: வாராணஸீ நகரத்தின் நாயகநே!மணிகர்ணிகைத் தலைவனே. வீரர்களின் தலைவனே. தக்ஷயாகத்தை குலைத்தவனே. விபோ. ப்ரமத கணங்களின் தலைவனே. எல்லாம் அறிந்தவனே. எல்லோர் ஹ்ருதயத்திலும் குடி கொண்டவனே. நாதனே என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருளவேணுமே
6
ஸ்ரீமன்மஹேச க்ருபாமய ஹேதயாலோ
ஹேவ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத!
பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஹேவ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத!
பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: ஸ்ரீ மஹாதோவ, கருணையே உருவானவரே. ஆகாயத்தைக் கேசமாகக் கொண்டவரே. நீலகண்டரே, கணங்களுக்கு நாதரே. விபூதி பூசியவரே. மண்டையோடு மாலையணிந்தவரே. என்னை ஸம்ஸாரத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்
7
கைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ!
நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ!
நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: கைலாயமலையில் வாழும் ஹே சிவபிரானே. யமனை வென்றவனே. முக்கண் உடையானே. மூவுலகிலும் வாழ்பவனே. விஷ்ணுவின் அன்பனே. செருக்கு களைபவனே. சக்தியின் நாதனே. என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருள வேண்டுமே!
8
விச்வேச விச்வபவநாசக விச்வரூப
விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச!
ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச!
ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
பொருள்: ஹே உலக நாயகனே. உலகில் பிறப்பதை நீக்குபவனே உலகே உருவானவனே. மூவுலகிலும் குணம்மிக்கவரில் மேலானவனே ஹேவிச்வநாத. கருணையுருவானவனே. எளியோருக்குப் பங்காளனே. என்னை உலகியல் துன்பத்திலிருந்து காத்தருள வேண்டுமே!
9
கௌரீவிலாஸபவனாய மஹோச்வராய
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய!
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்யது:கதஹநாய நம:சிவாய!!
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய!
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்யது:கதஹநாய நம:சிவாய!!
பொருள்: பார்வதியின் கேளிக்கையிடமேயான மஹேச்வரனுக்கு சிவனுக்கு நமஸ்காரம். அவர் ஐந்து முகமுடையவர், சரணம் என்று வந்தவருக்கு கல்பகமரம் போன்றவர். அகில உலகுக்கும் தலைவர். அவர். ஏழ்மை, துன்பங்களைக் களைபவரும் அவரே