அநாத்மஸ்ரீ விகர்ஹணம் 1 லப்தா வித்யா ராஜமன்யா தத:கிம் பராப்தா ஸம்பத்ப்ராப வாட்யாதத:கிம் புக்தா நாரீ ஸுந்தராங்கீ தத:கிம் யேந ஸ்வாத்மா நைவஸாக்

அநாத்மஸ்ரீ விகர்ஹணம்

1.லப்தா வித்யா ராஜமன்யா தத:கிம்

பராப்தா ஸம்பத்ப்ராப வாட்யாதத:கிம்

புக்தா நாரீ ஸுந்தராங்கீ தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

அரசாங்கப் போற்றுதலுக்கேற்ற கல்வி பெற்றிருந்து என்ன பயன், ஆளுமையுடன் செல்வம் பெற்றிருந்துதான் என்ன பயன்?அழகிய ஆரணங்கு தன் வயப்பட்டிருந்தும் பயன் என்ன? ஒருவன் ஆத்மானுபவம் பெற்றிருக்கவில்லையெனில் ?

2.கேயூராத்யைர்பூஷிதோ வா தத:கிம்

கௌசே யாத்யை ராவ்ருதோவோ தத:கிம்

த்ருப்தோ ம்ருஷ்டான்னாதினா வா தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷத்க்ருதோsபூத்

தோள்வளை போன்ற அணிகள் அணிந்திருந்தும் பயன் என்ன? நல்ல வெண்பட்டு உடுத்தியிருந்தும் தான் என்ன பயன்? பிசைந்த நறுமண அன்னம் புசித்து திருப்திபட்டிருந்தாலும் பயன் என்ன? ஒருவன் ஆத்மஞானம் பெற்றிருக்கவில்லையெனில்?

3.த்ருஷ்டா நாநா சாருதேசாஸ்தத:கிம்

புஷ்டாஸ்சேஷ்டா பந்துவர்காஸ்தத:கிம்

நஷ்டம் தாரித்ர்யாதி து:கம் தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

எவனொருவன் ஸ்வாத்மானுபவம் பெற்றிருக்கவில்லையோ அவன் அழகிய பல நாடு நகரங்களைப் பார்த்து வந்திருந்தும் பயனில்லை. அன்பிற்குரிய உற்றார் உறவினைப் பேனி காத்திருந்தும் பயனில்லை. ஏழ்மை நீங்கி துன்பமே நெருங்காவண்ணருந்தும் பயனில்லையே ?

4.ஸ்நாத: தீர்த்தே ஜஹ்முஜாதௌ தத:கிம்

தாநம் தத்தம் த்வ்யஷ்டஸங்க்யம் தத:கிம்

ஜப்தா மந்த்ரா: கோடிசோ வா தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

எவனொருவன் ஆத்மானந்தானுபவம் பெறவே இல்லையோ அவன் கங்கை முதலிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்திருந்தும் பயனில்லை. பதினாறு வித தானங்கள் செய்திருந்தும் பயனில்லை. கோடிக்கணக்கில் மந்திர ஜபம் செய்திருந்தும் பயனில்லை.

5.கோத்ரம் ஸம்யக்பூஷிதம் வா தத:கிம்

காத்ரம் பஸ்மாச்சாதிதம் வா தத:கிம்

ருத்ராக்ஷ£தி: ஸந்த்ருதோ வா தத:கிம்

யே நஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

ஒருவன் ஸ்வாத்மானுபவம் பெற்றிருக்கவில்லையெனில் அவன் தனது வம்சத்தை முன்னேறச் செய்திருந்தும், உடம்பில் விபூதிப் பட்டைகள் தீட்டியிருந்தும், ருத்ராஷம் முதலியவை தரித்திருந்தும் பயனில்லையே!

6.அந்நைர் விப்ராஸ்தர்பிதா வா தத:கிம்

ஜ்ஞைர்தேவாஸ் தோஷிதா வா தத:கிம்

கீர்த்யா வ்யாப்தா:ஸர்வலோகாஸ்தத:கிம்

யேந ஸ்வாதமா நைவ ஸாக்ஷ£த்க்ரிதோsபூத்

அன்னம் முதலியவற்றால் நல் பிராமணர்களை திருப்தியடை வித்திருந்தும் பயனில்லை; யாகம் முதவியவற்றால் தேவர்களை மகிழ்ச்சியடைச் செய்திருந்தும் பயனில்லை; எங்கும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்தும் பயனில்லை. ஒருவன் ஆத்மானுபவம் பெறவில்லையெனில்.

7.காய:க்லிஷடஸ் சோப வாஸைத்தத: கிம்

லப்தா:புத்ரா:ஸ்யபத்ன்யாஸ்தத:கிம்

ப்ராணாயாம:ஸாதிதோ வா தத: கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த் க்ருதோsபூத்

உபவாஸருந்து காயகிலேசம் அடைந்தும் பலனில்லை. தனது மனைவியிடமே பிள்ளைகள் பெற்றிருந்தும் பயனில்லை. ப்ராணாயாமம் செய்து சாதனை புரிந்திருந்தும் பயன் இல்லை. ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெறாவிடில்.

8.யுத்தே சத்ருர் நிர்ஜிதோ வா தத:கிம்

பூயோ த்ரை: பூரிதோ வா தத:கிம்

யோகை:ப்ராப்தா:ஸித்தயோ வா தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

யுத்தத்தில் பகைவரை வென்றிருந்தும் பயனில்லை; மறுபடியும் உற்ற நண்பர்கள் புடைசூழ இருந்தும் பயனில்லை; யோக சாதனையால் பற்பல சித்திகளைப் பெற்றிருந்தும் பயனில்லை. ஒருவன் ஆத்மாஸாக்ஷ£த்காரம் அடைந்திராவிடில்.

9.அப்தி:பத்ப்யாம் லங்கிதோ வா தத:கிம்

வாயு:கும்பே ஸ்தாபிதோ வா தத:கிம்

மேரு:பாணௌ உத்ருதோ வா தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெற்றிராவிடில் சமுத்ரத்தை காலால் தாண்டித்தான் என்ன பயன்? காற்றை குடத்தில் அடைத்துதான் என்ன பயன்? மஹாமேரு மலையை கையில் தூக்கிப்பிடித்துதான் பயன் என்ன?

10.க்ஷ்வேல:பீதோ துக்தவத்வா தத:கிம்

வஹ்நிர்ஜக்தோ லாஜவத்மா தத: கிம்

ப்ரப்தஸ்சார:பக்ஷிவத் கே தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த் க்ருதோsபூத்

ஒருவன் ஆத்ம ஸாக்ஷ£த்காரம் செய்திராவிடில், அவன் விஷயத்தை பால்போல் குடித்தும் பயனில்லை; பொரி போல் தீயை முழுங்கியும் பயனில்லை; பறவை போல் வானில் பறக்கும் சக்திபெற்றிருந்தும் பயனில்லை.

11.பத்தா: ஸம்யக் பாவகாத்யா ஸ்தத: கிம்

ஸாக்ஷ£த் வித்தாலோஹவர்யாஸ்தத:கிம்

லப்தோ நிக்ஷேபோsஞ்ஜநாத்யைதத:கிம்

யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

b முதலியவை கட்டப்பட்டாலும் பயனில்லை; உலோகங்களை கையால் துண்டு துண்டாக முறித்திருந்தாலும் பயனில்லை; மை முதலியவற்றைக் கொண்டு புதையலைக் கண்டுபிடித்திருந்தாலும் பயனில்லை - ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெற்றிராவிட்டால்.

12.பூபேந்த்ர த்வம் ப்ராப்த முர்வ்யாம் தத:கிம்

தேவேந்த் ரத்வம் ஸம்ப்ருதம் வா தத:கிம்

முண்டூந்த்ரத்வம் சோபலப்தம் தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெற்றிராவிடில் அவன் பூலோகத்தில் அரச ஸார்வ பௌமனாக இருந்தும் பயனில்லை. தேவேந்தர பதவியை தேடிப் பெற்றிருந்தும் பயனில்லை; ஸந்நியாஸிகள் தலைவர் என்று பெயர் பெற்றிருந்தும் பயனில்லை.

13.மந்த்ரை:ஸர்வ:ஸ்தம்பிதோ வா தத:கிம்

பாணைர்லக்ஷ்யோ பேதிதோ வா தத:கிம்

காலஜ்ஞானம் சாபி லப்தம் தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த் க்ருதோsபூத்

ஒருவன் ஆத்மஸாவரூபத்தை ஸாக்ஷ£த்கரிக்கவில்லையாகில் அவன் மந்த்ரங்களால் எல்லோரையும் அசையமுடியாதபடி செய்து விட்டாலும் கூட பயன் என்ன? அம்புகளால் குறியை பிளந்து எரிந்து விட்டாலும் என்ன பயன? துல்யமான கால அளவை தெரிந்து கொண்டு விட்டால் கூட என்ன பயன்?

14.காமாதங்க:கண்டிதோவா தத:கிம்

கோபாவேச:குண்டிதோ வாதத:கிம்

லோபாச்லேஷோ வர்ஜிதோ வாதத:கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

ஒருவன் ஆத்மஸ்வரூபத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக்

கொள்ளவில்லையானால், காமத்தொல்லையை அடியோடு தொலைந்து விட்டாலும், கோபத்தாக்குதலை முடக்கிவிட்டாலும், பேராசையைச் சேராமல் அழித்து விட்டாலும்தான் பயன் ஏதுல்லை.

15.மோஹத்வாந்த:பேஷிதோ வா தத:கிம்

ஜாதோ பூமௌ நிர்மதோ வா தத:கிம்

மாத்ஸர்யார்தி:மீலிதா வா தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

மோஹமாகிய இருள் கசக்கி எறிப்பட்டது என்றாலும், பூலோகத்தில் செருக்கு இல்லாதவனாகிய பிறந்தான் என்றாலும் போட்டித் தொல்லை ஒடுக்கப்பட்டு விட்டது என்றாலும் பயன் என்ன? ஏனெனில் ஆத்மானுபவம் பெறப்படவில்லையே ?

16.தாதுர்லோக:ஸாதிதோ வா தத:கிம்

விஷ்ணோர்லோகோ க்ஷிதேவா தத:கிம்

சம்போர்லோக:சாஸிதோ வா தத:கிம்

யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ரும்தோsபூத்

எவனொருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் செய்யவில்லையோ அவன் பிரம்மலோகத்தை எட்டி பிடித்துவிட்டாலும், விஷ்ணுலோகத்தப் பார்த்து வந்து விட்டாலும், சிவலோத்தை ஆண்டு விட்டாலுமே பயன் ஏதுல்லையே ?

17.யஸ்யேதம் ஹ்ருதயே ஸம்யகநாத்மஸ்ரீ விகர்ஹமம்

ஸதோதேதி ஸ ஏவாத்ம ஸாக்ஷ£த்காரஸ்ய பாஜனம்

இந்த ஆத்மானுபவச் செல்வம் இல்லாதவனைப் பழித்தல் என்ற இவ்விஷயம் எவன் மனதில் நன்றாகத் தோன்றி முன்னேறுகிறதோ அவனே ஆத்ம ஸாக்ஷ£த்காரத்திற்கு பாத்திரமாவான்.

18.அன்யே து மாயிக ஜகத்ப்ராந்தி வ்யாமோஹ மோஹிதா :

நதேஷாம் ஜாயதே க்வாபி ஸ்வாத்மஸாக்ஷ£த்க்ருதிர்புவி

மற்றவர் பொய்யான உலக வாழ்க்கையின் மயக்கம் மூண்டவர் ஆவர். அவர்களுக்கு ஆத்ம ஸாக்ஷ£த்காரம் ஒருபொழுதும் உண்டாகாது.

அநாத்மஸ்ரீ விகர்ணம் முற்றிற்று.