1
பசூனாம் பதிம் பாபநாசம் பரேசம்
கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வஸாநம் வரேண்டம்!
ஜடாஜூடமத்யே ய்புரத் காங்கவாரிம்
மஹாதேவ மேகம் ஸ்மராமி ஸ்மராரிம் !!
கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வஸாநம் வரேண்டம்!
ஜடாஜூடமத்யே ய்புரத் காங்கவாரிம்
மஹாதேவ மேகம் ஸ்மராமி ஸ்மராரிம் !!
பொருள்: பாபங்களைப் போக்கும் பரமேச்வரன் பசுபதியாய், கஜேந்திரனின் தோலை ஆடையாக அணிந்தும், ஜடையின் நடுவில் கங்கையைத் தாங்கியும் இருக்கிறார். அந்த மஹாதேவன் ஒருவரையே மனதில் ஸ்மரிக்கிறேன்
2
மஹேசம் ஸுரேசம் ஸுராராதிநாசம்
விபும் விச்வதாம் விபூத்யங்கபூஷம் !
விரூபாக்ஷமிந்த்வர்க வஹ்நித்ரிநேத்ரம்
ஸதானந்தமீடே ப்ரபும் பஞ்சவக்த்ரம்!!
விபும் விச்வதாம் விபூத்யங்கபூஷம் !
விரூபாக்ஷமிந்த்வர்க வஹ்நித்ரிநேத்ரம்
ஸதானந்தமீடே ப்ரபும் பஞ்சவக்த்ரம்!!
பொருள்: மஹேச்வரனுக்கும் தேவர்களுக்கு ஈசனும், அஸுரர்களை விரட்டி அடித்தவரும், விபுவாயும், உலகத்திற்கு நாதனும், விபூதியைப் பூசியவரும், சந்திர, சூர்ய, அக்னி ஆகிய முக்கண்களை உடையவரும், எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவருமான ஐந்து முகத்துடைய பரமேச்வரனை ஸ்தோத்திரம் செய்கிறேன்
3
கிரீசம் கணேசம் கலே நீலவர்ணம்
கவேந்த்ராதிரூடம் குணாதீதரூபம் !
பவம் பாஸ்வரம் பஸ்மனா பூஷிதாங்கம்
பவானீ கலத்ரம் பஜே பஞ்ச வக்த்ரம் !!
கவேந்த்ராதிரூடம் குணாதீதரூபம் !
பவம் பாஸ்வரம் பஸ்மனா பூஷிதாங்கம்
பவானீ கலத்ரம் பஜே பஞ்ச வக்த்ரம் !!
பொருள்: மலையில் வசிக்கும், கணங்களுக்குத் தலைவனும், நீலகண்டரும், ரிஷபத்தில் ஏறி வருபவரும், குணங்களைக் கண்ட உருவம் கொண்டவரும், விபூதி அணிந்து விளங்குபவரும் பார்வதியை மணந்தவரும், ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட பரமேச்வரனை ஸேவிக்கிறேன்
4
சிவாகாந்த சம்போ சசாங்கார்தமௌலே
மஹேசான சூலின் ஜடாஜூடதாரின் !
த்வமேகோ ஜகத்வ்யாபகோ விச்வரூப:
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ பூர்ணரூப!!
மஹேசான சூலின் ஜடாஜூடதாரின் !
த்வமேகோ ஜகத்வ்யாபகோ விச்வரூப:
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ பூர்ணரூப!!
பொருள்: பார்வதீமனாளனும், சந்திரப் பிறைகொண்டவரும், சூலம் ஏந்தியவரும், ஜடாபாரம் தாங்கியவரும் ஆன ஹே சம்போ!நீர் ஒருவரே உலகம் அளாவிய உலகேயானவர். நீர் முழுமையானவர். ஹே!ப்ரபோ அருளவேண்டும்
5
பராத்மன மேகம் ஜகத் பீஜமாத்யம்
நிரீஹம் நிராகாரமோங்காரவேத்யம்
யதோ ஜாயதே பால்பதே யேந விச்வம்
தமீசம் பஜே லீயதேயத்ர விச்வம்!!
நிரீஹம் நிராகாரமோங்காரவேத்யம்
யதோ ஜாயதே பால்பதே யேந விச்வம்
தமீசம் பஜே லீயதேயத்ர விச்வம்!!
பொருள்: உலகத்தின் ஒரே முதற்காரணமான பரமாத்மா அவரே:பற்று அற்ற:வடிவம் கொள்ளாத:ஒங்காரப் பொருளாக இருப்பவர் அவரே. உலகம் தோன்றுவதும், இருப்பதும், லயிப்பதும் அவரிடமே, அந்த ஈசனை ஸேவிக்கிறேன்
6
நபூமிர்நசாபோ நவஹ்நி:ந வாயு:
நசாகாசமாஸ்தே ந தந்த்ரா ந நித்ரா!
நசோஷ்ணம் ந சீதம் நதேசா நவேஷோ
ந யஸ்யாஸ்தி மூர்தி:த்ரிமூர்திம்தமீடே!!
நசாகாசமாஸ்தே ந தந்த்ரா ந நித்ரா!
நசோஷ்ணம் ந சீதம் நதேசா நவேஷோ
ந யஸ்யாஸ்தி மூர்தி:த்ரிமூர்திம்தமீடே!!
பொருள்: ப்ருதிவி, அப், தேஜஸ், வாயு, ஆகாசமாகிய ஐந்து பூதங்களும் அவர் அல்ல. சோம்பலோ நித்ரையோ அவரல்ல, சூடு, குளிர், தேசம், வேஷம் என்பவையும் அவரல்ல. அவருக்கு வடிவவே இல்லை. பிரஹ்ம, விஷ்ணு, மஹேச்வரரூபியான அவரை ஸ்தோத்திரம் செய்கிறேன்
7
அஜம் சாச்வதம் காரணம் காரணாநாம்
சிவம் கேவலம் பாஸகம் பாஸகாநாம்!
துரீயம் தம:பாரமாத்யந்தஹீணம்
ப்ரபத்யே பரம் பாவனம் த்வைதஹீநம்!!
சிவம் கேவலம் பாஸகம் பாஸகாநாம்!
துரீயம் தம:பாரமாத்யந்தஹீணம்
ப்ரபத்யே பரம் பாவனம் த்வைதஹீநம்!!
பொருள்: பிறவியில்லாத எப்பொழுதும் விளங்கும் அவர் மற்றெல்லாகாரணங்களுக்கும் முதற்காரணமாணவர். சிவமே உருவானவர். ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். அஞ்ஞான இருளுக்கு அப்பாலே ஆதியந்தமில்லாத துரீயமாயுள்ளவர். இரண்டற்ற தூயதான பரம்பொருளாம் அவரை சரணடைகிறேன்
8
நமஸ்தே நமஸ்தே விபோ விச்வமூர்தே
நமஸ்தே நமஸ்தே சிதானந்த மூர்தே !
நமஸ்தே நமஸ்தே தபோயோக கம்ய
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீதிஜ்ஞானகம்ய!!
நமஸ்தே நமஸ்தே சிதானந்த மூர்தே !
நமஸ்தே நமஸ்தே தபோயோக கம்ய
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீதிஜ்ஞானகம்ய!!
பொருள்: உலகமே உருவான எங்கும் நிறைந்த உமக்கு நமஸ்காரம். ஞானம் ஆனந்தம் என்பனவற்றின் உருவான உமக்கு நமஸ்காரம். தவம் யோகம், வேத உணர்வு இவற்றின் மூலம் அடையத்தக்கவரான உமக்கு நமஸ்காரம்
9
ப்ரபோ சூலபாணே விபோ விச்வ நாத
மஹாதேவ சம்போ மஹேச த்ரிநேத்ர !
சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே
த்வதன்யோ வரேண்யோ ந மான்யோ நகண்ய: !!
மஹாதேவ சம்போ மஹேச த்ரிநேத்ர !
சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே
த்வதன்யோ வரேண்யோ ந மான்யோ நகண்ய: !!
பொருள்: ப்ரபோ!விச்வநாத!மஹாதேவ, சம்போ!மஹேச!முக்கண்ணா!பார்வதீ மனாள!சாந்தரூப!மன்மதன், த்ரிபுரங்கள் ஆகியவற்றை தொலைத்தவரே!உம்மைத் தவிர சிறப்பு மிக்கவரும், போற்றத்தக்கவரும், எண்ணத்தக்கவரும் வேறு எவருமில்லை
10
சம்போ மஹேச கருணாமய சூலபாணே !
கௌரீபதே பதுபதே பசுபதே நாசின் !
காசீபதே கருணாயா ஜகதேதத் ஏக:
த்வம் ஹம்ஸி பாஸி விததாஸி மஹேச்வரோஸி !!
கௌரீபதே பதுபதே பசுபதே நாசின் !
காசீபதே கருணாயா ஜகதேதத் ஏக:
த்வம் ஹம்ஸி பாஸி விததாஸி மஹேச்வரோஸி !!
பொருள்: சம்போ. மஹேச்வர:கருணையுருவே. சூலபாணே. கௌரீபதே. பசுபதே, பசுபாசம் நீக்கிய காசீபதே. நீர் ஒருவரே இவ்வுலகைப் படைத்துக் காத்து பிறகு அழித்தும் வருகிறீர். அதனால் நீரே பெருங்கடவுள்
11
த்வத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே !
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!
பொருள்: தேவனே!பவனே!மன்மதனே வென்றவனே!உம்மிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. ஹேவிச்வநாத!உம்மிடமே நிலை பெறுகிறது இந்த உலகம். பின் உம்மிடமே லயமும் அடைகிறது. சராசரங்களின் வடிவினன் அன்றோ நீர்!