1.மம ந பஜந சக்தி : பாத யோஸ்தே ந பக்தி:
ந ச விஷயவிரக்தி : த்யாநயோகே நஸக்தி :
இதிமநஸி ஸதாஸஹம் சிந்தயம் ஆத்யசக்தே
ருசிர வசனபுஷ்பை ரர்சனம் ஸஞ்சிநோ
ஹே ஆதிசக்தியே!உனது திருவடிகளை சேவிக்கப் போதுமான சக்தியுல்லை; பக்தியுல்லை, அல்லது உலக விஷயங்களிலிருந்து விரக்தியுல்லை, தியானம், யோகம் இவற்றில் பற்றுல்லை. என்றிவ்வாறு எண்ணுவதுடன் இந்த அழகிய வார்த்தைகளாகிய புஷ்பங்களால் அர்சனையை செய்ய முற்படுகிறேன்.
2.வ்யாப்தம் ஹாடகவிக்ரஹைர்ஜலசரைராரூட தேவவ்ரஜை :
போதை ராகுலிதாந்தரம் மணிதரைர்பூமீதரைர் பூஷிதம் !
ஆரக்தாம்ருதஸிந்து முத்தர சலத்சீசய வ்யாகுல
வ்யோமானம் பரிசிந்த்ய ஸந்ததமஹோ சேத : க்ருதார்த்தீபவ
ஏமனமே! தங்க விக்ரஹங்களாகிய ஜலஜந்துக்கள் விழுயிருப்பதையும், வாஹனத்தில் ஏறிய தேவர்கூட்டமாகிய படகுகளால் கலக்கமுற்ற உட்பகுதியையுடையதும், மணி ஹாரங்கள் ளிரும் தேவர்களாகிய மலைகள் சூழ்ந்ததும், கட்டுக்கடங்காமல் கிளம்பிய அலைகள் ஆர்பரிக்கும் மேற்புறத்தையுடையதுமாகிய சிவந்த அம்ருதக் கடலை எண்ணி எண்ணி பெருமைப்படுவாயே !
3.தஸ்ன் உஜ்வ லரத்ரனஜால விலஸத்காந்திச் சடாபிஸ்புடம்
குர்வாணம் வியதிந்த்ரசாப நிசயை ராச்சாதிதம் ஸர்வத :
உச்சை : ச்ருங்கந்ஷண்ண திவ்யவநிதாப்ருந்தா நந்ப்ரோல்லஸத்
கீதாகர்ணந நிஸ்சலாகில ம்ருகம் த்பம் நமஸ்குர்ம ஹே
அங்கு பளபளப்பான ரத்ன மணிகளின் காந்தியால் விளங்குவதும், அதானால் ஆகாயத்தை இந்திரவில் மறைத்திருப்பதுபோல செய்வதும், உச்சியின் மேல் உட்கார்ந்து தேவலோகமங்கையர் பாடுபடுவதைக் கேட்டு மகிழும் மான்களை உடையதுமாகிய த்பத்தைப் போற்றுகிறோம்.
4.ஜாதிசம்பக பாடலாதிஸுமன : ஸெளரப்யஸம்பாவிதம்
ஹ்ரீங்காரத்வானி கண்டகோகிலகுஹ§ ப்ரோல்லாஸி சூதத்ருமம்
ஆவிர்பூதஸுகந்தி சந்தனவனம் த்ருஷ்டிப்ரியம் நந்தனம்
சஞ்சச்சஞ்சல சஞ்சரீக சடுலம் சேத ஸ்சிரம் சிந்கய
ஹேமனதே ! c உல்லாசமாகப் பறக்கும் தேனீக்கள் நிறம்பிய, கண்ணுக்கினிய நந்தன வனத்தை நினைத்து பூரிப்பாயாக. அந்த நந்தவனத்தில் சந்தனவரங்களும், ஹ்ரீங்காரத்வனியெழுப்பும் குயிலின் குஹ§ என்ற குரலால் குதூஹலிக்கும் மாமரங்களும், ஜாதி, சம்பகம், பாடலம் ஆகிய மரங்களும் வாசனை ச விளங்குகின்றன.
5.பரிபதித பராகை: பாடல க்ஷே£ணி பாக :
விகஸித குஸுமௌகை:பீத சந்த்ராக்க ரச் : !
அலிசுகபிக ராஜீ கூஜிதை:ச்ரோத்ரஹாரீ
ஸ்புரது ஹ்ருதி மதீயே நூன முத்யாநராஜ:
பாடல் விருக்ஷத்தினடியில் மகரந்தப் பொடிகள் ழ்ந்துள்ளது. மலர்ந்த புஷ்பங்கள் சந்திரன் சூர்யன் ஆகியோரது கிரணங்களை உட்கொள்கின்றன. தேனீக்கள், குயில்கள், கிளிகள் இவற்றின் கூச்சல் காதுக்கு இனிமையாக உள்ளது. அவை நிரம்பிய சிறந்த உத்யானம் என் மனதில் பிரகாசிக்கிறது.
6.ரம்யத்வார புரப்ரசாரதமஸாம் ஸம்ஹார காரிப்ரப
ஸ்பூர்ஜததோரண பாரஹாரக மஹா விஸ்தாரஹாரத்யுதே
க்ஷே£ணீ மண்டல ஹேமஹார விலஸத்ஸம்ஸார பாரப்ரதே
ப்ரோத்யத் பக்த மனோவிஹார கநகப்ராகார துப்யம் நம :
அடுத்து, அழகான முகப்பு வாயிலின் பக்கமுள்ள இருளைப் போக்கும் ஒளி பொருந்திய தோரணத்தின் பாரத்தை ஈர்க்கும் கப் பெரிய ஹாரத்தையுடையது தங்கமயப்ராகாரம் அதற்கும் நம் நமஸ்காரங்கள் உரித்தாகின்றன. அந்தப்ராகாரம் பூயின் தங்க ஹாரமோ வென்றதிசயிக்கத்தக்கதாயும், ஸம்ஸாரத்தினின்று கரையேற்றுவதாயும் பக்தர்களின் மனமகிழ்ச்சிக்குரியதாயும் உள்ளது.
7.உத்யத்காந்தி கலாபகல்பிதநப : ஸ்பூர்ஜத்விதாமப்ரப:
ஸத்க்ருஷ்ணாகரு தூப வாஸித வியத்கோஷ்டாந்தரே விச்ருத :
ஸேவாயாத ஸமஸ்ததைவத கணை : ஆஸேவ்ய மாநோsநிசம் :
ஸோsயம் ஸ்ரீ மணிமண்ட போsனவரதம் மச்சேதஸித்யோததாம்
சேவை நித்தம் வந்த தேவர்கள் அனைவரும் சேவிக்கும் இந்த மணிமண்டபம் என்மனதில் எப்பொழுதும் ளிரட்டும். அந்த மண்டபம், மேல் நோக்கிப்பரவும் காந்தி மண்டலமே விதானமாகக் கொண்டது. அதில் சந்தனப்பொடி
தூபத்தின் மணம் ஆகாச வெளியை மணக்கதாச் செய்கிறது.
8. க்வாபி ப்ரோத்பட பத்மராக கிரணவ்ராதேந ஸந்த்யாயிதம்
குத்ராபி ஸ்புட விஸ்புரன்மரகதத்யுத்யா தஸ்ராயிதம்
மத்யாலம்பி விசாலமௌக்திகருசா ஜ்யோத்ஸ்னாயிதம் குத்ரசித்
மாத: ஸ்ரீ மணிமந்திரம் தவ ஸதா வந்தாமஹே ஸுந்தரம்
ஹே தாயே! அழகிய உனது மணிமந்திரத்தை எப்பொழுதும் வணங்கிநிற்கிறோம். அம்மணிமந்திரத்தின் ஒரு பகுதியில் கப்பெரிய பத்மராகக்கற்களின் ஒளி சுவதால் ஸந்தியாகாலமோ வெனத் தோற்றமளிக்கிறது. வேறொரு பாகத்தில் கத் தெளிவாக மரகதப் பச்சைகளால் இருள்சூழ்ந்தது போலவும், மடுவில் தொடங்கும் முத்து மாலைகளின் காந்தியால் நிலவு தோன்றியது
போலவும் காட்சியளிக்கிதே !
9. உத்துங்காலாயவிஸ்புரன்மரகத ப்ரோத்யத் ப்ரபாமண்டலா
ந்யாலோக்யாங் குரிதோத்ஸவைர்நவத்ருணா கீர்ண ஸ்தலீ சங்கயா
நீதோவாஜிபிருத்பதம் பத ரத :ஸுதேந திக்மத்யுதே :
வல்காவல்கித ஹஸ்தமஸ்தசிகரம் கஷ்டைரித : ப்ராப்யதே
ஹே தேவி ! உனது உயரமான ஆலயத்திலுள்ள மரகதக்கற்களின் ஒளி மண்டலத்தை புதிய அருகம்புல் மண்டிய தரையோவெனத் திகைத்து, மகிழ்ச்சி பொங்க, சூரியன் தேரிலுள்ள குதிரைகள் வேறுபக்கம் திரும்பிய பொழுது, கப்பிரயாசையுடன் அவற்றின் கடிவாளத்தை இழுத்து அருணன் அஸ்தமான மலைச்சிகரத்தில் சேர்ப்பிக்க வேண்டியுள்ளது.
10. மணிஸதந ஸமுத்யத்காந்திதாரானுரக்தே
வியதி சரமஸந்த்யாசங்கிநோ பானுரத்யா :
சிதிலித கதி குப்யத்ஸுத ஹ§ங்காரநாதை :
கதமபி மணி கேஹாத்உச்சகைருச்சலந்தி
இன்னும் ஹேதேவி! உனது மணிமந்திரலுள்ள மணிகளின் காந்தியால் செவ்வொளி தோன்றிய பொழுது மாலை வேளைதான் வந்துவிட்டதென எண்ணி சூர்யன் குதிரைகள் சற்றுமெல்ல நடக்கத் தொடங்கி (மணிமந்திரம் வழியில்) கோபித்துக் கொண்ட அருணனின்ஹ§ம் என்ற குரலால், பின்னும் உயரத்தில் செல்லத்துவங்குகின்றன.
11. பக்த்யா கிம் நுஸமர்பிதாநி பகுதா ரத்னாநி பதோதிநா
கிம்வா ரோஹணபர்வதேந ஸதனம் யைர்விச்வகர்மா கரோத்
ஆஜ்ஞாதம் கிரிஜே ! க்டாக்ஷ கலயா நூநம் த்வயாதோஷிதே
சம்பௌ ந்ருத்யதி நாகராஜபணிநா கீர்ணா மணிச்ரேணய:
ஹே பார்வதிதேவி!உனது மந்திரத்தை நிர்மாணித்த விச்வகர்மாவுக்கு வேண்டிய அளவு மணிகளையும் ரத்னங்களையும் சமுத்ரராஜனும், ரோஹணமலையும் பக்தியுடன் அளிக்கவில்லையோ! எனக்கு தெரிந்துவிட்டது! உன்கடாக்ஷச்சைக் கண்டு மகிழ்ந்த சம்பு நடனம் புரியத் தொடங்கியதும் நாகராஜன் வேறு மணிகளை கொட்டிவிட்டானே!
12. விதூரமுக்தவாஹநைர்விநம்ரமௌலி மண்டலை:
நிபத்த ஹஸ்தஸம்புடை: ப்ரயத்னஸம்ய தேந்த்ரியை :
விரிஞ்சி விஷ்ணு சங்கராதிபிர்முதா தவாம்பிகே
ப்ரதீக்ஷ்யமாண நிர்கமோ விபாதி ரத்னமண்டப :
ஹே அம்பிகே! உனது ரத்னமண்டபத்தை நோக்கி வரும் அனைவரும் வெகு தூரத்திலேயே வாஹனங்களை விட்டுவிட்டு தலை வணங்கியும், கைகூப்பியும், புலன்களை அடக்கியவாரும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகியோர் கூட உனது வரன் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
13. த்வநனேம்ருதங்க காஹல : ப்ரகீத கிந்நரீகண :
ப்ரந்ருத்த திவ்ய கன்யக : ப்ரவ்ருத்தமங்கலக்ரம :
ப்ரக்ருஷ்ட ஸேவகவ்ரஜ: ப்ரஹ்ருஷ்ட பக்தமண்டலோ
முதே மமாஸ்து ஸந்ததம் த்வதீய ரத்னமண்டப:
ஹேதேவி ! உனது ரத்ன மண்டபத்தில் ம்ருதங்கம், காஹலம் முதலிய லயவாத்யங்கள் முழங்குகின்றன. கிந்நரீ கணங்கள் நடனமாடுகின்றனர். தேவ கன்னியரும் நடனம் புரிகின்றனர். மங்களகார்யங்கள் நடக்கின்றன. ஸேவகர்கள் ஒதுக்கப்பட்டு, பக்தர்கள் மகிழ்ந்து உள்ளனர்.
14. ப்ரவேசநிர்கமாகுலை: ஸ்வக்ருத்யரக்தமானனஸ :
பஹிஸ்திதாமராவலீவிதீயமாந பக்திபி:
விசித்ர வஸித்ர பூஷணை : உபேத மங்கநாஜநை :
ஸதா கரோது மங்கலம் மமேஹ ரத்னமண்டபம்
ஹேதேவி! உனது ரத்ன மண்டபத்தினுள் பரபரப்புடன் போவோரும் வருவோருமாய் உள்ளனர். வெளியில் உள்ளோர் பக்தியுடன் நிற்கின்றனர். பற்பலவஸ்திரம், ஆபரணம் அணிந்த பெண்களும் உள்ளனர். எனக்கு அம்மண்டபம் மங்கலம் உண்டாக்கட்டும்.
15. ஸுவர்ணரத்ன பூஷிதை: விசித்ர வஸ்த்ரதாரிபி :
க்ருஹீத ஹேமயஷ்டிபி : நிருத்தஸர்வதைவதை :
அஸ்ங்க்யஸுந்தரீஜனை : புர : ஸ்திதைரதிஷ்டிதோ
மதீயமேது மானஸம் த்வதீயதுங்கதோரண:
தங்கம், ரத்னம் இவற்றால் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு வஸ்திரம் தரித்து, கையில் கம்புடன் தேவதைகளை நிறுத்துவதுடன் பாதுகாப்பிலுள்ள பல சுந்தரிகள் குழுய உனது வானளாவிய தோரணவாயில் என் மனதில் தோற்றமளிக்கிறது.
16. இந்த்ராதீம்ஸச திகீச்வரான் ஸஹபரீவாரா நதோ ஸாயுதான்
யோஷித்ரூபதரான் ஸ்வதிக்ஷ§நிஹிதான் ஸஞ்சிந்த்ய ஹ்ருத்பங்கஜே
சங்கம் ஸ்ரீவஸுதாரயா வஸுமதீடுக்தம் சபத்மம் ஸ்மரன்
காமம் நௌ ரதிப்ரியம் ஸஹசரம் ப்ரீத்யா வஸந்தம் பஜே
தங்கள் தங்கள் பரிவாரங்களோடும், ஆயுதங்களோடும் சேர்ந்த- ஸ்திரீவேஷம் பூண்டு அவரவர் திசைகளில் நிறுத்தப்பட்டுள்ள-இந்த்ராதி திக்பாலகர்களை மனதிற்சிந்தித்து, ஸ்ரீவஸுதாரையுடன் சங்கத்தையும், வஸுமதியுடன் பத்மத்தையும் ஸ்மரித்து, ரதியின் கணவன் மன்மதனையும், அன்புத் தோழன் வஸந்தனையும் நினைவு கூர்வேன்.
17. காயந்தீ : கல ணயா திமதுரம் ஹ§ங்காரமாதந்வதீ:
த்வாராப்யாஸ க்ருதஸ்திதீரிஹ ஸரஸ்வதாயாதிகா : பூஜயன்
த்வாரேநௌ மதோன்மதம் ஸுரகணாதீசம் மதே னோன்மதாம்
மாதங்கீமஸிதாம்பராம் பரிலஸன்முக்தா விபூஷாம் பஜே
க இனிமையாக ணை வாசித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறவர்களும், உனது மந்திரத்தின் வாயிற்புரம் இருந்து கொண்டு 'ஹ§ம்' என்று சொல்லிக் கொண்டுருக்கிற ஸரஸ்வதீ முதலியவர்களை பூஜித்து விட்டு, வாயிற்படியில் தேவகணங்களுக்கு தலைவரான கணாதீசரையும், மதம் கொண்டு கருப்புவஸ்திரமணிந்த மாதங்கியையும் சேவிக்கிறேன்.
18. கஸ்தூரிகாச்யாமல கோமலாங்கீம்
கதம்பரீ பானமதாலஸாங்கீம்
வாமஸ்தனாலிங்கித ரத்ன ணாம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மரா
கஸ்தூரி போன்று கருநீல நிறமுள்ளவளும், காதம் பரிபானத்தால் மதமேறிய உடலையுடடையவளும், இடது ஸ்தனத்துடன் இணைந்த ரத்ன ணையை யுடையவளுமான மாதங்ககன்யகையை மனதில் ஸ்மரிக்கிறேன்.
19. விகீர்ண சிகுரோத்கரே விகலிதாம்பராடம்பரே
மதாகுலித லோசனே விமல பூஷணோத் பாஸினி
திரஸ்கரிணி தாவகம் சரணபங்கஜம் சிந்தயன்
கரோ பசுமண்டலீம் அலிகமோஹதுக்தாசயாம்
குலைந்த கேசபாசங்களும், நழுவிய வஸ்திரமும், மதம் கொண்ட திரஸ்கரிணி (திரைசீலை) தேவியே உனது திருவடியை நினைத்துக் கொண்டு சுற்றுப்புறதேவதைக் கூட்டத்தை பாற்கடல் மயக்கத்தை கொண்டதாகச் செய்கிறேன்
20. ப்ரமத்த வாருணீரஸைர் விகூர்ணமானலோசநா :
ப்ரசண்டதைகத்ய ஸுதனா : ப்ரவிஷ்ட பக்தமானஸா:
உபோட கஜ்ஜலச்சவ்விடா விராஜி விக்ரஹா :
கபால சூல தாரிணீ: ஸ்துவே த்வதீய தூதிகா :
ஹேதேவி !உனது ஏவலரைப் போற்றுகிறேன். அவர் மதுபானத்தால் சுழலும் கண்களைக் கொண்டவர், பயங்கரமான ராக்ஷஸர்களையும் அழிப்பவர், வந்துள்ள பக்தர்களை கருத்தில் கொண்டவர், கரியமை கொண்டு தடவிய உடலை உடையவர்கள், கபாலம் சூலம் இவற்றை ஏந்தியவராவர்.
21. ஸ்பூர்ஜந்நவ்யயவாங்குரோபலஸிதா போகை : புர : ஸ்தாபிதை:
தீபோத்பாஸிசராவசோபித முகை : கும்பைர் நவை : சோபிநா
ஸ்வர்ணாபத்த விசித்ரரத்னபடலீசஞ்சத்கபாடச்ரியா
யுக்தம் த்வாரசதுஷ்டயேந கிரிஜே வந்தே மணீமந்திரம்
ஹேபார்வதி! உனது மணி மந்திரத்தை வணங்குகிறேன். அம்மணி மந்திரம், தங்கத்தில் கட்டிய பல மணிகற்கள் ன்னும் கதவழகையுடைய நான்கு வாயில்கள்
கொண்டது. புதுயவதான்யமுளைபோல் விளங்கும் உட்புறத்தையுடையவையும், எரியும் தீபத்துடன் கூடிய தாழிபோல் உள்ள முகத்துடன் கூடியவையுமான புதுகும்பங்கள் முன்னே வைக்கப்பட்டுள்ளன அங்கே.
22. கநகரசிதே பஞ்சப்ரேதாஸநேந விராஜிதே
மணிகணசிதே ரக்தச்வேதாம்பராஸ்தரணோத்தமே
குஸுமஸுரபௌ தல்பெ திவ்யோபதானஸுகாவஹே
ஹ்ருதயகமலே ப்ராதுர்பூதாம் பஜே பரதேவதாம்
சுவர்ணத்தினாலானதும், புஷ்பங்கள் தூவி வாஸனையுடன் கூடியதும் திவ்யமான தலையணைகளால் சுகமானதுமான ஹ்ருதய கமலத்தில் தோன்றும் பரதேவதையை நான் போற்றுகிறேன். அங்கு பஞ்சப்ரேதாஸனமும், ரக்த ச்வேத நிறமுள்ள விரிப்பும், வைரக்கற்களால் பதிக்கப்பட்டுள்ளது அவ்வரியாஸனம்.
23. ஸர்வாங்கஸ்திதிரம்யருசிராம் ப்ராத : ஸமப்யுத்திதாம்
ஜ்ரும்பாமஞ்ஜுமுகாம்புஜாம் மதுமத வ்யாகூர்ணதக்ஷித்ரயாம்
ஸேவாயாதஸமஸ்தஸந்நிதிஸகீ: ஸம்மாநயந்தீம்த்ருசா
ஸம்பச்யன்பரதேவதாம் பரமஹோ மன்யே க்ருதார்த்தம் ஜனு :
ஸர்வாங்கங்களும் கிடந்தநிலையால் அழகிய ரூபங்கொண்டு, காலையில் எழுந்து கொட்டாவியுடன் அழகு ளிர, மதுபானத்தால் சுழலும் முக்கண்பரப்புடன், சேவைக்காக வந்த நெருங்கிய தோழிகளை பார்வையால் மட்டும் கௌரவிக்கும் பரதேவதையை கண்ணாரக்கண்டு எனது ஜன்மம் ஸபலமானதை எண்ணி மகிழ்கிறேன்.
24. உச்சைஸ்தோரணவர்திவாத்ய நிவஹத்வாநே ஸமுஜ்ரும்பிதே,
பக்தைர் பூ விலக்ன மௌலி பிரலம் தண்டப்ரணாமேக்ருதே
நாநாரத்ன ஸமூஹநத்த கனகஸ்தாலீஸ முத்பாஸிதாம்
ப்ராதஸ்தே பரிகல்பயா கிரிஜே நீராஜனா முஜ்வலாம்
வானளாவிய தோரணவாயிலில் வாத்யத்வனிகள் அதிர, பக்தர்கள் பூயில் விழுந்து கண்டப்ரணாமம் செய்ய, பலவித ரத்னங்கள் பதித்த தங்கத்தட்டில் எரியும் நீராஜனத்தை, ஹேபார்வதி! காலையில் உனக்கு காட்டி மகிழ்கிறேன்.
25. பாத்யம் தேபரிகல்பயா பதயோரர்க்யம் ததாஹஸ்தயோ :
ஸெளதீபி: மதுபர்கமம்ப மதுரம் தாராபிராஸ்வாதய
தோயே நாசமநம் விதேஹி சுசிநா காங்கேந மத்கல்பிதம்
ஸாஷ்டாங்கம் ப்ரணிபாத மீசதயிதே த்ருஷ்ட்யா க்ருதார்தீகுரு
ஹே ஈசதயிதே! உனக்கு பாதங்களில் பாத்யத்தையும், கைகளில் அர்க்யத்தையும் ஸமர்பிக்கிறேன். ஹே அம்ப! அம்ருத மயதாரைகளால் இனிய மதுபர்க்கம் இதோ ஆஸ்வாதானம் செய்யலாமே! சுத்தமான கங்கை ஜலத்தால் ஆசமனம் செய்து கொள்ளலாம். ஸாஷ்டாங்க நமஸ்காரத்தையும் ஏற்று என்னை க்ருதார்த்தனாக செய்யவேணும்.
26. மாத: பச்ய முகாம்புஜம் ஸுவிமலே தத்தே மயா தர்பணே
தேவி ஸ்குரு தந்ததாவன தம் கங்காஜலே நான்விதம்
ஸுப்ரக்ஷ£லிதமாநநம் விரசய ஸ்நிக்தாம்பரப் ரோஞ்சநம்
த்ராகங்கீகுரு தத்வமம்ப மதுரம் தாம்பூல மாஸ்வாதாய
ஹே தாயே! நான் சமர்பித்த கண்ணாடியில் முக கமலத்தை தர்சனம் செய்துகொள்! கங்காஜலம் கொண்டு தந்த தாவனத்தை ஏற்கலாமே! முகத்தை நன்கு அலம்பிக்கொள்ளலாம் உடனே மெல்லிய வஸ்திரத்துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு மதுரமான தாம்பூலத்தையும் ஆஸ்வாதனம் செய்யலாமே!
27. நிதேஹி மணிபாதுகோபரி பதாம்புஜம் மஜ்ஜமா
லயம்வ்ரஜசனை : ஸகீக்ருதகராம்புஜாலம்பனம்
மஹேசி கருணாநிதே தவ த்ருகந்தபாதோத்ஸுகான்
விலோகய மநாகமூனுபய ஸம்ஸ்திதான் தைவதான்
ஹேமஹேசி! கருணாநிதே! மணிபாதுகையின் மீது கால் வைத்து மெல்ல குளியலறைக்குச் செல்லலாமே! அப்பொழுது தோழிகள் கைகொடுத்து பிடித்துக் கொள்வார்கள். உனது கடைக்கண் பார்வை விழ வேண்டுமென விழையும் இருபுறமும் நின்று எதிர்பார்த்திருக்கும் தேவர்களை சற்று கண்படப்பார்க்கலாமே.
28. ஹேமரத்ன வரணேந வேஷ்டிதம் விஸ்த்ருதாருண விதாந சோபிதம்
ஸஜ்ஜஸர்வபரிசாரிகாஜநம் பச்ய மஜ்ஜநக்ருஹம் மநோமம
தங்கம், ரத்னம் இவற்றைப் பதித்து சுற்று மறைவு கொண்டதும், சிவப்பு விதானம் விரிக்கப்பட்டு அழகாய் இருப்பதும், பரிசாரிகைகள் அனைவரும் தயாராக இருப்பதுமாகிய என் மனமாகிய குளியலரையைக் காணலாமே !
29. கனக கலச ஜால ஸ்பாடிகஸ் நான பீடா -
த்யுபகரண விலாசம் கந்தமத்தாலிமாலம்
ஸ்புரதருண விதானம் மஞ்ஜுகந்தர்வகானம்
பரமசிவமஹேலே மஜ்ஜமாகாரமேஹி
தங்கச் சொம்புகள், ஸ்படிகமயமான ஸ்நான பீடம் முதலிய உபகரணங்களடங்கியதும், வாஸணையால் ஈர்க்கப்பட்டு பறந்து வரும் தேனீக்களையுடையதும், சிவப்பு விதானம் பொருந்தியதும், இனிய கந்தர்வகானம் முழங்குவதுமாகிய ஸ்நான மண்டபத்திற்கு வந்து அருளலாமே !
30. பீனோத்துங்கபயோதர : பரிலஸத்ஸம் பூர்ண சந்த்ராநநா :
ரத்ணஸ்வர்ண விநிர்தா : பரிலஸத்ஸ்வர்ணாம் பரப்ராவ்ருதா:
ஹேமஸ்நாந கடீஸ் ததா ம்ருது படீ ருத்வர்தனம் கௌஸுமம்
தைலம் கங்கதிகாம் கரேஷ§தததீர்வந்தேsம்ப தேதாஸிகா :
ஹே அம்ப!பருத்து உயர்ந்த மார்பகங்களையுடையவர்களும், சந்திரன் போன்ற முகமுடையவர்களும், தங்கமே உருவானவர்களும், தங்கமய பட்டாடை உடுத்தியவர்களும், தங்கக் குடங்களையும், ம்ருதுவான உடுப்புகளையும், புஷ்பப் பொடிகளையும், தைலம், சீப்பு ஆகியவற்றையும் கையில் கொண்டு வருபவர்களுமான உனது பரிசாரகப் பெண்களை வணங்குகிறேன்.
31. தத்ரஸ்பாடிகபீடமேத்ய சநகை ருத்தாரிதாலங்க்ருதி :
நீசை ருஜ்ஜிதகஞ்சுகோபரி ஹிதாரக்தோத் தரீயாம்பரா
மேணீபந்தமபாஸ்ய கங்கதிகயா கேசப்ரஸாதம் மநாக்
குர்வாணா ப்ரதேவதா பகவதீ சித்தே மமத்யோததாம்
அப்பொழுது அங்கே, ஸ்படிக பீடத்திற்கு வந்து நகைகளை கழட்டி, மெல்ல கஞ்சுகம், உத்தரீயம் இவற்றை களைந்து, பின்னலை அவிழ்த்து சீப்பினால் சற்று கேசங்களை ஒழுங்குச் செய்து கொண்டிருக்கிற பரதேவதை என் மனதில் தோன்றட்டுமே!
32. அப்யங்கம் கிரிஜேக்ருஙாணம் ம்ருதுநாதைலேநஸம்பாதிதம்
காச்மீரைரகருத்ரவைர்மலயஜைருத்வர்தநம் காரய
கீதே கிந்நரகாநீ பிரபிதோ வாத்யே முதா வாதிதே
ந்ருத்யந்தீஹ பச்யதேவி புரதோதிவ்யாங்கநா மண்டலீம்
ஹேபார்வதி! ம்ருதுவான தைலத்தை உனது உடம்பில் தடவிக்கொள். காச்மீரத்து அகருக்குழம்பினாலும், மலய மலைக் குழம்பினாலும் உடம்பிற்குத் தேய்த்து உத்வர்தனம் செய்துகொள். கிந்நரஸ்திரீகள் பாடுவதையும், வாத்யங்கள் வாசிக்கதேவலோக மங்கையர் ஆடுவதையும் பார்த்து ரசிப்பாயாக !
33. க்ருதபரிகரபந்தா:துங்கபீநஸ்தனாட்யா:
மணிநிவஹநிபத்தா ஹேமகும்பீர்ததாநா :
ஸுரபிஸலில நிர்யத்கந்தலுப்தாலிமாலா:
ஸவிநயமுபதஸ்து:ஸர்வத:ஸ்நானதாஸ்ய :
பரிகரபந்தம் செய்து கொண்டு, பருத்துயர்ந்த ஸ்தனங்களுடையவர்களாய், ரத்னங்கள் பதித்த தங்கக் குடங்களை கையில் ஏந்தியவர்களாய் வரும்பொழுது வாசனைக்க தண்ணீரின் காரணமாக தேனீக்கள் பின் தொடர்ந்து மொய்க்க ஸ்நான
சேவகிகள் வந்துவிட்டார்களே!
34. உத்கந்தை ரகருத்ரவை:ஸுரபிணா கஸ்தூரிகாவாரிணா
ஸ்பூர்ஜத்ஸெளரப யக்ஷகர்தமஜலை: காச்மீர நீரைரபி
புஷ்பாம்போபிரசேஷதீர்தஸலிலை: கர்பூரபாதோபரை:
ஸ்நானம் தே பரிகல்பயா கிரிஜே பக்த்யாததங்கீகுரு
ஹே கிரிஜே! மனம்க்கதான அகருத்ரவத்தாலும், கஸ்தூரித் தண்ணீராலும் மணம் சும் வாஸனைச்சந்தன ஜலத்தாலும், காச்மீரப்பன்னீராலும், பல தீர்த்தங்களிலிருந்து கொண்டு வந்த தண்ணீராலும், புஷ்பம், கற்பூரம் கலந்த தண்ணீராலும் பக்தியுடன் உனக்கு ஸ்நானம் செய்விக்கிறேன். அதை ஏற்க வேணுமே !
35. ப்ரத்யங்கம் பரிமார்ஜா சுசிநா வஸ்த்ரேண ஸம்ப்ரோஞ்சனம்
குர்வே கேச கலாப மாயததரம் தூபோத்தமைர்தூபிதம்
ஆலீப்ருந்த விநிர்தாம் யவநிகாமாஸ்தாப்ய ரத்னப்ரபம்
பக்தத்ராணபரே மஹேசக்ருஹிணி ஸ்நானாம்பரம்முச்யதாம்
ஹே பக்தர்களைக்காக்கும் மஹேசர்க்ருஹிணியே! உனது ஒவ்வோரு அங்கங்களையும் சுத்த வஸ்திரத்தால் துடைத்து, க நீண்ட கேசகலாபத்தை தூபத்தை புகைத்து உலரவைக்கிறேன். ஸகிகள் அமைத்த திரைசீலைக் குள்ளிலிருந்து ஸ்நான வஸ்திரத்தை களையலாமே !
36. பீதம்தே பரிகல்பயா நிபிடம் சண்டாதகம் சண்டிகே
சூக்ஷ்மம் ஸ்நிக்தமுரீகுருஷ்வ வஸனம் ஸிந்தூரபூரப்ரபம்
முக்தாரத்ன விசித்ரஹேமரசனா சாருப்ரபாபாஸ்வரம்
நீலம் கஞ்சுகமர்பயா கிரிசப்ராணப்ரியே ஸுந்தரி
ஹே சண்டிகே! உனக்கு மஞ்சள் நிறமான உடலோடு ஒட்டிய உள்சட்டையை அர்பிக்கிறேன். மெல்லிய, வழவழப்பான சிவந்த பட்டாடையை ஏற்பாயாக ! முத்து, ரத்னங்கள் இன்னும் ஜரிகை வேலைப்பாடுகளமைந்த பகட்டான நீலநிற கஞ்சுகத்தையும் அணிவாயாக !
37. விலுலிதசிகுரேணச்சாதிதாம்ஸரப்ரதேசே
மணிநிகரவிராஜத் பாதுகாந்யஸ்தபாதே
ஸுலலிதமவலம்ப்ய த்ராக்ஸ்கீமம்ஸ தேசே
கிரிசக்ருஹிணி பூஷா மண்டபாயப்ரயாஹி
கலைந்து விரிந்து கிடக்கும் கேசத்தால் தோள் புறம் மறைக்கப்பட்டுள்ளது. ஹேபரமேச்வரன் பார்யயே! c மணிகளைப் பதித்த பாதுகைகளில் கால் வைத்து, ஸகிகளின் தோளைப் பிடித்துக் கொண்டு அலங்காரமண்டபம் வரலாமே!
38. லஸத்கநக குட்டி மஸ்புரதமந்த முக்தாவலி -
ஸமுல்லஸித காந்தபி: கலித சக்ராபவ்ரஜே
மஹாபரணமண்டபே நிஹிதஹேமஸிம்ஹாஸனம்
ஸகீஜனஸமாவ்ருதம் ஸமதிதிஷ்ட காத்யாயநி
இந்த அலங்கார மண்டபத்தில் தங்கமயமான மேடை மீது முத்து மாலைகள் தொங்குவதால் இந்த்ரவில் அமைப்பின் அழகு ளிர்கிறது. அங்கு ஒரு தங்கஸிம்மாஸனம் போடப்பட்டு அருகில் ஸகீஜனங்களும் உள்ளனர். அந்த ஸிம்மாஸனத்தில் அமரலாமே ஹே காத்யாயனி !
39. ஸ்நிக்தம் கங்கதிகாமுகேந சநகை: ஸம்சோத்ய கேசோத்கரம்
ஸீமந்தம் விரசய்ய சாருவிமலம் ஸிந்தூரரேகான்விதம்
முக்தாபிர்க்ரதிதாலகாம் மணிசிதை: ஸெளவர்ணஸுத்ரை : ஸ்புடம்
ப்ராந்தே மௌக்திககுச்சகோ பலஸிதாம் க்ரத்நா வேணீமாம்
தேவி! உனது மழமழப்பான கேசக்கற்றையை சீப்பின் நுனியால் மெல்ல ஒழுங்குபடுத்தி, ஸிந்தூரக்கோட்டுடன் சீமந்தத்தையும் சீர்படுத்தி, மணியும் முத்தும் கலந்து கோர்த்த தங்க நூல் இழையால் பின்னலைப் பின்னும் பொழுது, நுனியில்
முத்துக் குஞ்சலம் இணைக்கிறேன்.
40. விலம்பிவேணீ புஜகோத்தமாங்க -
ஸ்புரன்மணிப்ராந்தி முயாநயத்தம்
ஸ்வரோ சிஷோல்லாஸித கேஸபாசம்
மஹேசி சூடாமணி மர்பயா
ஹேமஹேச்வரி!உனது தொங்கும் பின்னலாகிய நாகத்தின் தலையிலுள்ள மணிதானோ வென்ற மயக்கத்தையுண்டாக்கும்படி சூடாமணியை அணிவிக்கிறேன்.
அது, தனது காந்தியால் தலைவகிடை ஒளிரச் செய்கிறது.
41. த்வாமாச்ரயத்பி :கபரீதஸ்ரை :
பந்தீக்ருதம் த்ராகிவ பானுபிம்பம்
ம்ருடானி சூடாமணி மாததாநம்
வந்தாமஹே தாவகமுத்தமாங்கம்
ஹேம்ருடானி! உன்னை ஆச்ரயித்திருக்கிற கேசமாகிய இருட்டினால் சட்டெனப்பிடிக்குள் வைக்கப்பட்ட சூர்ய பிம்பம் போல் சூடாமணியைத்தாங்கி நிற்கும் தலையை வணங்குகிறோம்.
42. ஸ்வமத்யநத்த ஹாடகஸ்புரன்மணிப்ரபாகுலம்
விலம்பிமௌக்திச் சடாவிராஜிதம் ஸமந்தத :
நிபத்தலக்ஷசக்ஷ§ஷா பவேந பூரி பாவிதம்
ஸமர்பயா பாஸ்வரம் பவாநி பாலபூஷனம்
ஹேபவாநி!உனக்கு நெற்றியில் அணியும் ஆபரணத்தை அணிவிக்கிறேன். அது, தன் நடுவில் தங்கத்துடன் பதித்த மணியில் ஒளி ச, தொங்கும் முத்து கோர்வையும் விளங்க, பரமேச்வரனால் நெற்றிக்கண்கொட்டாமல் கண்டு அனுபவிக்கப்பட்டதன்றோ!
4 3. மீநாம்போருஹகஞ்ஜரீடஸுஷமாவிஸ்தாரவிஸ்மாபகே
குர்வாணே கில காமவைரிமனஸ :கந்தர்ப பாணப்ரபாம்
மாத்பானமதாருணேsதிசபலே தீர்கே த்ருகம்போருஹே
தேவி ஸ்வர்ணசலாகயா ஊர்ஜிததம் திவ்யாஞ்ஜனம் தீயதாம்
ஹேதேவி! மதுபானம் செய்து மதமேறிச்சிவந்த நீண்ட உனது கண்களில் தங்கக்குச்சியால் சீரிய திவ்யாஞ்ஜனம் தீட்டலாமே. அந்த கண்கள், கருகருப்பானவை, மீனா, தாமரையிதழா அல்லது கஞ்ஜரீடமாவென நினைக்கத்தோன்றும் அழகையுடையவை; மன்மதனை வெறுத்த பரமெச்வரனுக்கே மன்மதபாணத்தின் சக்தியை காணவைப்பவையும் கூட.
44. மத்யஸ் தாருண காந்திருசிராம் முக்தாமுகோத்பாஸிதாம்
தைவாத் பார்கவ ஜீவமத்யகரவேர்லக்ஷ்மீமத : குர்வதீம்
உத்ஸிக்தாதரபிம்பகாந்தி விஸரைர்பெனமீபவன் மௌக்திகாம்
மத்தத்தா முராரீகுருஷ்வ கிரிஜே நாஸா விபூஷாமாம்
ஹே கிரிஜே! நான் ஸமர்பிக்கும் இந்த மூக்குத்தியை ஏற்பாயாக! அது
முகப்பில் முத்து பதிக்கப்பட்டு, நடுவில் சிவப்பு ஒளியுடன் ளிர்கிறது. தற்செயலாக, சுக்ரனுக்கும் புஷ்யத்திற்கும் நடுவில் பிரகாசிக்கும் சூர்யன் போல அது பிரகாசிக்கிறது. மேலும், கோவைப்பழம் போன்ற உதட்டின் ஒளி பரக்கபிபடுவதால், அதன் நிறமேற்ற முத்துக்களைக் கொண்டதாயுருக்கிறது.
45. உடுக்ருத பரிவேஷ ஸ்பர்தயா சீதபாநோ :
இவ விரசித தேஹத்வந்த்வ மாதித்ய பிம்பம்
அருண மணிஸமுத்யத்ப்ராந்த விப்ராஜி முக்தம்
ச்ரவஸி பரிநிதேஹிஸ்வர்ண தாடங்க யுக்மம்
ஹே தேவி! சிவந்த மணியும், சுற்றிலும் முத்துமாக அமைந்த இரண்டு கம்மல்களை அணிந்து கொள்ளலாமே. அவை சந்திரனுக்கு, நக்ஷத்ரங்கள் சுற்றிலுருப்பதைக் கண்டு பொறாமையால் சூர்யன் தன் தேஹத்தை இரட்டிப்பாகச் செய்து கொண்டுள்ளானோ எனத் தோற்றமளிக்கும்.
46. மரகத வரபத்மராக ஹீரோத்திதகுளிகாத்ரிகயாவநத்த மதயம்
விதத விமல மௌக்திகம்ச கண்டாபரணதம் கிரிஜே ஸமர்பயா
ஹேகிரிஜே!உனக்கு இதோ கழுத்தில் அணியும் ஆபரணம் ஸமர்ப்பிக்கிறேன். அதில், மரகதம், பத்மராகம், ஹீரம் இவற்றில் மூன்று மூன்று மணிகளாக நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தனியாக, நீண்ட முத்து மணிமாலையும் ஸமர்ப்பிக்கிறேன்.
47. நாநாதேஸமுத்திதைர்மணிகண ப்ரோத்யத் ப்ரபாமண்டல
வ்யாப்தை ராபரணைர்விராஜித கலாம் முக்தாச்சடாலங்க்ருதாம்
மத்யஸ்தாருண ரத்னகாந்திருசிராம் ப்ராந்தஸ்த முக்தாபல
வ்ராதாமம்ப சதுஷ்கிகாம் பரசிவே வக்ஷஸ்தலே ஸ்தாபய
ஹேபரசிவே! உனது மார்பில் இந்த நான்கு வடமாலையை அணியலாமே. இந்த மாலை பலநாட்டு மணிகள் அடங்கிய அணிகலன்களுடன் முத்துத் தொங்கலும், நடுவில் சிவப்பு மணியின் காந்திபரவ சுற்றிலும் முத்து வரிசையும் கூடியது.
48. அன்யோனயம் ப்லாவயந்தீஸதபரிசலத் காந்திகல்லோலஜாலை :
குர்வாணா மஜ்ஜதந்த :கரணவிமலதாம் சோபிதேவத்ரி வேணீ
முக்தாபி : பத்மராகை : மரகதமணிபி : நிர்தா தீப்யமாநை :
நித்யம் ஹாரத்ரயீதே பரசிவ ரஸிகே சேதஸித்யோததாம் ந:
ஹே பரசிவரஸிகேதேவி! உனது மூன்று ஹாரங்கள் எங்கள் மனதில் பிரகாசிக்கட்டும். அம்மூன்று ஹாரங்களும் முத்துக்களாலும், பத்மராகங்களாலும், மரகதமணிகளாலும் செய்யப்பட்டவை. அசைந்தாடும் பொழுது காந்தியலைகளால்
ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வன எனினும் மூழ்குபவரின் மனதை தூய்மையாக்கும் த்ரிவேணிபோல் இருப்பவையன்றோ !
49. கரஸரஸிஜநாலே விஸ்புரத்காந்தி ஜாலே
விலஸதமலசோபே சஞ்சதீசாக்ஷிலோபே
விவிதமணி மயூகோத்பாஸிதம் தேவி துர்கே
கநக கடகயுக்தம் பாகுயுக்மே நிதேஹி
ஹேதேவி துர்கே! c கையாகிய தாமரைத்தண்டையுடவள். உனது அழகு எங்கும் பரவி, பரமசிவன் கண்களுக்கும் இன்னும் பார்க்கவேண்டும், பார்க்கவேண்டும் என்று அவாவை தூண்டும். பற்பல மணிகள் பதித்த இரண்டு கடகங்களை இரண்டு கையிலும் போட்டுக் கொள்ளேன்!
50. வ்யாலம்பமாந ஸித பட்டககுச்சசோபி
ஸ்பூர்ஜன் மணீ கடித ஹாரவிரோச மாநம்
மாதர்மஹேச மஹிலே தவபாஹ§மூலே
கேயூரகத்வயதம் விநிவேசயா
ஹேதாயே! மஹேசரின் ப்ரியையே! உனது கையின் அடி பாகத்தில் இந்த இரண்டு தோள்வளைகளை பொருந்தியமைக்கிறேன். இவை தொங்கும் பட்டுநூல் குஞ்சத்துடனும், பளபளக்கும் மணிகள் கோர்த்த மாலையினாலும் அழகாக உள்ளது.
51. விததநிஜமயூகர் நிர்தம் இந்த்ரநீலை :
விஜிதகமல நாளாலீந மத்தாலி மாலாம்
மணிகண கசிதாப்யாம் கங்கணாப்யாமுபேதாம்
கலய வலயராஜீம் ஹஸ்தமூலேமஹேசி
ஹேமகேசி! ஒளிசும் இந்த்ரநீலக்கற்களால் தயாரிக்கப்பட்டவையும், ஒளிந்துள்ள மதமேறிய தேனீக்களைக் கொண்ட தாமரைத்தண்டையத்தவையும், மணிகள் பதித்த கங்கணங்களையும் உள்ளடக்கியதுமான வளையல்களையும் அணிந்து கொள்ளலாமே !
52. நீலப்பட்ட ம்ருதுகுச்சகோபிதா-
பத்தநைக மணிஜால மஞ்ஜூலாம்
அர்பயா வலயாத்புர : ஸரே
விஸ்புரத் கநக தைத்குரு பாலிகாம்
நீலப்பட்டுநூல் குஞ்சங்களும், பலமணிகளும் சேர்த்து அமைந்ததால் அழகான இந்த தங்க முழங்கை கவசத்தை ஸமர்பிக்கிறேன்.
53. ஆலவாலவ புஷ்பதன்வநா
பாலவித்ருமலதாஸுநிர்தம்
அங்குலீஷ¨ விநிதீயதாம்சநை :
அங்குலீயகதம் மதர்பிதம்
ஹேதேவி! இளம் பவழக்கொடிகளுக்கு மன்மதன் அமைந்த பாத்திபோலிருக்கும் இந்த மோதிரத்தை (நான் ஸமர்பித்த) அணியலாமே!
54. விஜிதஹரமநோபூ மத்த மாதங்ககும்ப-
ஸ்தல விலுலித கூஜத்கிங்கிணீஜாலதுல்யாம்
அவிரதகலநாதை ரீசசேதோ ஹரந்தீம்
விவதமணி நிபத்தாம் மேகலாமர்பயா
ஹேதேவி! பரமசிவனை ஜயித்த மன்மதனாகிய மதங்கொண்டயானையின் மஸ்தகத்தில் சிதறிக் கொஞ்சும் கிங்கிணி மாலையோவென மயக்கமுறச் செய்வதும்,
இடைவிடாது இனிய ஒலியால் பரமேச்வரனின் மனதை ஈர்ப்பதும், பல மணிகள்
கோர்த்து அமைத்ததுமாகிய மேகலையை ஸமர்ப்பிக்கிறேன்.
55. வ்யாலம்பமாநவரமௌக்திககுச்சசோபி
விப்ராஜிஹாடக புடத்வயரோசமாநம்
ஹேம்நா விநிர்தமநேக மணிப்ரபந்தம்
c நிபந்தநகுணம் விநிவேதயா
ஹேதேவி! தொங்கும் முத்துக்குஞ்சத்துடன் அழகிய இரண்டு தங்க முனைப்புகளுடன் கூடிய பல மணிகளிழைத்த வஸ்திர முடிச்சுப் பட்டையை ஸமர்ப்பிக்கிறேன்.
56. விநிஹித நவலாக்ஷ£பங்க பால்தபௌகே
மரகத மணிராஜீ மஞ்ஜூமஞ்ஜீரகோஷே !
அருண மணி.முத்யத் காந்திதாரா விசித்ர:
தவ சரணஸரோஜே ஹம்ஸக : ப்ரீதிமேது
ஹேதேவி! புத்தம் புதிய லாக்ஷ£ரஸ்த்தையும், இளம் வெயிலையும் ஒத்திருப்பதும், மரகத மணிக்கொத்துக்களால் அழகிய சதங்கையலியை உடையதுமான உனது திருவடித்தாமரையில் சிவப்பு மணிகளின் ஒளிச்சல் அழகான ஹம்ஸகம் உகப்படையட்டுமே!
57. நிபித்த சிதிபட்டகப்ரவரகுச்ச ஸம்சோபிதாம்
கலக்வணித மஞ்ஜூலாம் கிரிசசித்தஸம்மோஹிநீம்
அமந்த மணிமண்டலீ விமலகாந்தி கிம்மீரிதாம்
நிதேஹி பதபங்கஜே கநககுங்குரூமம்பிகே
ஹே அம்பிகே! கரும்பட்டு நூல் குஞ்சம் கட்டி, இனிய ஒலி எழுப்பும் பொழுது பரமன் மனதை கொள்ளை கொள்ளும் தங்க குங்குருவை காலில் போட்டுக்கொள். அதில் பதித்த மணிகளின் தெளிவான ஒளி பளபளக்கிறதே.
58. விஸ்ருரத்ஸஹஜ ராக ரஞ்ஜிதே
சிஞ்ஜிதேந கலிதாம் ஸகீஜநை :
பத்மராக மணிநூபுரத்வயீம்
அர்பயா தவ பாத பங்கஜே
ஹேதேவி ! இயற்கையாகவே செந்நிறமான உனது திருவடித்தாமரையில் தோழிகள் ஒலியுடன் கூடியமைந்த பத்மராக மணிச்சதங்கையை அர்பணிக்கிறேன்.
59. பதாம்புஜமுபாஸிதும் பரிகதேந சீதாம்சுநா
க்ருதாம் தனுபரம்பராவே திநாந்தராகாருணாம்
மஹேசி நவயாவகத்ரவபரேண சோணீக்ருதாம்
நமா நக மண்டலீம் சரணபங்கஜஸ்தாம் தவ
ஹேமஹேசி! உனது திருவடிகளைத்தாமரையிலுள்ள நக வரிசையை வணங்குகிறேன். அந்த நகவரிசை, உனது திருவடிஸேவைக்காக வந்த சந்திரன் தனது வடிவை பன்மடங்காக்கி மாலை நேரமாதலால் செம்மேனியுடன் விளங்குகிறானோ என தோன்றும் படி இருக்கும். உண்மையில் புதுயாவகரஸம் பூசப்
பட்டு சிவந்திருப்பவையே அவை.
60. ஆரக்தச்வேத பீதஸ்புரதுருகுஸுமைஸ்சித்ரிதாம் பட்ட ஸுத்ரை:
தேவஸ்த்ரீபி: ப்ரயத்னாத கருஸமு த்தைர்தூபிதாம் தூபகந்தை :
உத்யத்கந்தாந்தபுஷ்பந்தய நிவஹஸமாரப்த ஜங்கார கீதாம்
சஞ்சத்கல்ஹாரமாலாம் பரசிவரஸிகே கண்டபீடேsர்பயா
ஹே பரமசிவனின் கண்மணியே! உனது கண்டத்தில் தளதள வென்றிருக்கும் தாமரை மலர்மாலையை ஸமர்ப்பிக்கிறேன். அம்மாலை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறமுள்ள பெருபுஷ்பங்களாலும் பட்டுக்குஞ்சங்களாலும் அமைக்கப்பட்டது.
தேவஸ்திரீகள் முயன்று அகருப்புகையேற்றியது. வாசனை மயக்கத்தால் தேனீக்கள் ஜங்காரம் செய்ய ஹேதுவானது.
61. க்ருஹாண பரமாம்ருதம் கநக பாத்ரஸம்ஸ்தாபிதம்
ஸமர்பயமுகாம்புஜே விமலயிகாமம்பிகே
விலோகய முகாம்புஜம் முகுரமண்டலே நிர்மலே
ந்தேஹி மணிபாதுகோபரிபாதம்புஜம்ஸுந்தரி
ஹே ஸுந்தரி! தங்கத்தட்டில் பரிமாறிய அம்ருதத்தை ஆஸ்வதிக்கலாமே, வாயில் தூயதாம்பூலத்தைச் சுவைக்கலாமே, கண்ணாடியில் முகத்தைக் காணலாமே. திருவடித்தாமரையை மணிபாதுகையில் வைத்துக் கொள்ளலாமே !
62. ஆலம்ப்யஸ்வஸகீம் கரேணசநகை : ஸிம்ஹாஸநாத்உத்திதா
கூஜன்மந்தமராள மஞ்ஜுலகதிப்ரோல் லாஸிபூஷாம் பரா
ஆனந்த ப்ரதிபாதகை ருபநிஷத்வாக்யை: ஸ்துதாவேதஸா
மச்சித்தே ஸ்திரதாமுபைது கிரிஜா யாந்தீ ஸபாமண்டபம்
ஸ்ரீபார்வதீதேவி, தனது தோழியை பிடித்துக்கொண்டு ஸிம்மாஸனத்திலிருந்து மெல்ல எழுந்து, கூவும் அன்னம் போல் நடந்து வருகையில் பளபளபக்கும் பட்டாடையுடித்தியவளாய் பிரம்மதேவன் ஸ்துதி பாட, ஸபாமண்டபம் போய்க் கொண்டிருக்குமவள் என்மனதில் பதியட்டும்.
63. சலந்த்யாமம்பாயாம் ப்ரசலதிஸமஸ்தே பரிஜநே
ஸவேகம் ஸம்யாதே கநகலதிகா லங்க்ருதிபரே
ஸமந்தாதுத்தாலஸ்புரிதபதஸம்பாத ஜநிதை :
ஜண த்காரைஸ்தாரைர் ஜண ஜணிதமாஸீத்மணிக்ருஹம்
தாய் புரப்பட்டு நடக்கும்பொழுது அனைத்து பரிஜனங்களும் உடன் புறப்பட்டுச் செல்கின்றனர். நான்கு புறமும் அடியெடுத்து அடிவைத்து நடக்கும் பொழுது 'ஜன்ஜன்' என்ற பேரொலியால் மணிமண்டபமே குரலெழுப்புவது போல் ஆகிறது!
64. சஞ்சத்வேத்ரகராபிகங்கவிலஸத் பூஷாம்பராபி: புரோ
யாந்தீபி : பிரிசாரிகாபிரமரவ்ராதே ஸமுத்ஸாரிதே
ருத்தே ந்ர்ஜரஸுந்தரீபிரபித : கக்ஷ£ந்தரே நிர்கதம்
வந்தே நந்தித சம்புநிர்மல சிதானந்தைகரூபம் மஹ:
பிரம்பும் கையுமாக, உடம்பில் பட்டுப்புடவையும் நகைகளும் தளதளக்க முன்னே செல்லும் பணிப்பெண்களால் தேவர்கூட்டம் ஒதுக்கப்பட்டு, தேவஸ்திரீகள் தடுக்கப்பட்டு, வேறு கட்டு வழியாக வெளியில் வந்த, வகிழ்ந்து நிற்கும் சம்புவின்
தூய சிதானந்தமயமான ஒளியை கண்ணாரக் கண்டு வணங்குகிறேன்.
65. வேதா: பாததலே பதத்யயமஸெள விஷ்ணுர்மத்யக்ரத:
சம்புர் தேஹித்ருகஞ்சலம் ஸுரபதிம் தூரஸ்தமாலோகய
இத்யேவம் பரிசாரிகாபிருதிதேஸம் மாநநாம் குர்வதீ
த்ருக்த்வந்த்வேந யசோசிதம் பகவதீ பூயாத் விபூத்யைமைம
இதோ பிரம்மதேவன் காலடியில் விழுகிறார். முன்னே விஷ்ணுவும் நமஸ்கரிக்கிறார். அதோ சம்புவும் இருக்கிறார் அவருக்கு கடாக்ஷம் கொடு; இந்திரனை தூரத்திலேயே பார்த்து விடு ! இவ்வாறு பரிசாரிகைகள் பரிந்துரைக்க, பகவதீ, அவரவர்க்கு ஏற்றபடி கண் பார்வையால் மரியாதை செய்து கொண்டிருக்கிறாள் என் செல்வத்திற்கும் அவள்கடாக்ஷமே வேணும்.
66. மந்தம் சாரணஸுந்தரீபிரபிதோ யாந்தீபிருத்கண்டயா
நாமோச்சாரண பூர்வகம் ப்ரதிதிசம் ப்ரத்யேகமாவேதிதாந்
வேகாதக்ஷிபதம் கதாந்ஸுரகணாநாலோகயந்தீ சநை :
தித்ஸந்தீசணாம்புஜம் பதிஜகத் பாயாத் மஹேசப்ரியா
ஆவலுடன் முன்னும்பின்னும் செல்கின்ற சாரணமங்கைகள் ஒவ்வொருவராக பெயர்சொல்லி அறிமுகம் செய்து வைக்கும் தேவர்களை சட்டென முன்வந்து கண்டு கொள்ளும் அவர்களை மெல்ல கவனித்து அங்கேயே நமஸ்கரிக்க வைக்கும் ஸ்ரீதேவி உலகைகாக்க வேணும்.
67 அக்ரே கேசந பார்ச்வயோ : கதிபயே ப்ருஷ்டே பரேப்ரஸ்திதா :
ஆகாசே ஸமவஸ்திதா : கதிபயே திக்ஷ§ஸ்திதாஸ்சாபரே
ஸம்மர்தம் சநகை ரபாஸ்ய புரதோ தண்யப்ரணாமான்முஹ§ :
குர்வாணா : கதிசிஸுராகிரிஸுதே த்ருக்பாதச்சந்திதே
ஹே கிரிஸுதே! முன்னும், பக்கங்களிலும், பின்னும், ஆகாயத்திலும், பற்பல திசைகளிலும் நின்று கொண்டு தேவர்கள் மெல்ல கூட்டத்தை விலக்கி
தண்டவத்ப்ரணாமங்களைச் செய்து உனது கடைக்கண்பார்வை விழாதா என எதிர்பார்கின்றனர்.
68. அக்ரே காயதிகிந்நரீ கலபதம் கந்தர்வ காந்தா : சநை :
ஆத்தோத்யாநி ச வாதயந்தி மதுரம் ஸவ்யாபஸவ்யஸ்த்தா :
கூஜந்நூபுரநாதமஞ்ஜு புரதோந்ருத்யந்தி திவ்யாங்கமா :
கச்சந்த : பரித : ஸ்துவந்திநிகமஸ்துத்யா விரிஞ்ச்யாதய :
எதிரில் கிந்நரீ இனிமையாகப் பாடுகிறாள், இடப்புறமும் வலப்புறமுமாக நிற்கின்ற கந்தர்வப் பெண்கள் மெல்ல வாத்யங்களை வாசிக்கிறார்கள். தேவலோக மங்கையர் சதங்கையலியுடன் எதிரில் நடனமாடுகின்றனர். நாற்புறமும் பிரம்மன் முதலியோர் வேதஸ்துதியால் ஸ்தோத்ரம் செய்கின்றனர்.
69. கஸ்மை சித்ஸுசிராத் உபாஸிதமஹா மந்த்ரௌகஸித்திம் க்ரமாத்
ஏகஸ்மைபவநி: ஸ்ப்ருஹாய பரமானந்தஸ்வரூபாம் கதிம்
அன்யஸ்மை விஷயாணுரக்தமனஸே தீநாயது : கா பஹம்
த்ரவ்யம் த்வாரஸமாச்ரிதாய தததீம் வந்தாமஹே ஸுந்தரீம்
வெகுகாலமாக உபாஸனை செய்து வந்த மந்திரத்தின் ஸித்தியை ஒருவருக்கும், மற்றொருவருக்கும் ஸம்ஸாரம் வேண்டாததால் பரமானந்த ஸ்ரூபமோக்ஷத்தையும், இன்னுமொரு லௌகிக விஷயங்களில் ஈடுபட்டு ஏழையாய் இருப்பவருக்கு துன்பம் நீக்க திரவ்யத்தையும் கொடுத்து அருளும் ஸுந்தரியை வணங்குகிறோம்.
70. நம்ரீபூயக்ருதாஞ்ஜலிப்ரகடிதப் ரேமப்ரஸந்நாநநே
மந்தம் கச்சதிஸந்நிதௌ ஸவிநயம் ஸோத்கண்டமோக த்ரயே
நாநாமந்த்ரகணம் ததர்த்தமகிலம் தத்ஸாதநம் தத்பலம்
வ்யாசக்ஷ£ணமுதக்ரகாந்தி கலயே யத்கிஞ்சிதாத்யம் மஹ :
கைகூப்பி வணக்கத்துடன் மனதிலுள்ள அன்பை வெளிப்படுத்தி தெளிந்த முகத்தையுடைய பக்தர் மெல்ல ஸந்நிக்கு வந்த பொழுது, பல மந்த்ரங்களையும், அவற்றின் பொருளையும் அதை புரச்சரணம் செய்ய ஸாதனத்தையும், அவற்றின் பயனையும் வியாக்யானம் செய்து கொண்டிருக்கும் மேலான ஒளி படைத்தமுதல் ஒளியை மனதில் தியானிக்கிறேன்.
71. தவதஹனஸத்ரு¬க்ஷ ரீக்ஷணைரேவ சக்ஷ§ :
நிகில பசுஜநாநாம் பீஷயத் பீஷணாஸ்யம்
க்ருதவஸதி பரேசப்ரேயஸி த்வாரி நித்யம்
சரபதுணமுச் சைரிபக்தியுக்தோ ததோsஸ்
ஹேதேவி! உன்னுடைய மந்திரவாயிலில் ற்றிருக்கும் சரபங்களை பக்தியுடன் வணங்குகிறேன். அந்த சரபங்களின் முகம் பயங்கரமாயிருப்பதுடன், நெருப்பு போன்ற தம் கண்களால் மற்ற பிராணிகளின் கண்ணை பயமுறச் செய்வது.
72. கல்பாந்தே ஸஹஸைகதா ஸமுத்தாநேகார்க துல்யப்ரபாம்
ரத்னஸ்தம்பநிபத்த காஞ்சனகுணஸ்பூர்ஜத் விதாநேரத்தமாம்
கர்பூராகருகர்ப வர்திகலிகாப்ராப்தப்மர தீபாவலீம்
ஸ்ரீசகராக்ருதிமுல்லஸன்மணிகணாம் வந்தாமஹே வேதிகாம்
ப்ரலகாலத்தில் திடீரென ஒரே ஸமயத்தில் பலசூர்யர்கள் தோன்றினாற் போல் ஒளிக்கதும், ரத்ன ஸ்தம்பங்களில் கட்டிய தங்க கம்பியின் மீது அமைந்த விதான
முடையதும், கற்பூரம், அகரு, இவற்றை உள்ளடக்கிய திரியின் சுடர்தீபம் போல் அமைய ஸ்ரீசக்ரவடிவில் அமைந்த வேதிகையை வணங்கிறோம்.
73. ஸ்வஸ்தானஸ்திததேவதா கணவ்ருதே பிந்தௌ முதாஸ்தாபிதம்
நாநாரத்ன விராஜிஹேமவிலஸ்த் காந்திச் சடாதிர்தினம்
சஞ்சத்கௌஸும தூலிகாஸனயுதம் காமேச்வராதிஷ்டிதம்
நித்யானந்த நிதானமம்பஸததம் வந்தே ச ஸிம் ஹாஸநம்
அவரவர் இடத்தில் இருக்கும் தேவதைகள் சூழ்ந்த பிந்து மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட, பற்பல ரத்னங்கள் பதித்த தங்கத்தினால் நிர்மாணம் செய்யப்பட்ட,
பளபளக்கும் புஷ்பதூளிகாஸனம் உடைய, காமேச்வரர் அமர்ந்த, நித்யானந்தத்திற்கு
அடிப்படையான ஸிம்ஹாஸனத்தை வணங்குகிறேன்.
74. வதத்பிரபிதோ முதா ஜய ஜயேதி ப்ருந்தாரகை :
க்ருதாஞ்ஜலிபரம்பரா விதததீ க்ருதார்த்தா த்ருசா
அமந்த மணி மண்யலீகசித ஹேமஸிம் ஹாஸனம்
ஸகீஜனஸமாவ்ருதம் ஸமதிதிஷ்டதாக்ஷ£யணி
ஹேதாக்ஷ£யணி! தேவர்கள் ஜயஜய என்று கோஷம் செய்ய, அவர்களது வந்தனங்களை பார்வையால் அபிநந்தனம் செய்து, ஒளிக்க மாணிக்கங்கள் பதித்த ஸிம்மாஸனத்தில் ஸகீஜனங்கள் புடைசூழ அமரலாமே !
75. கஸ்தூராதிக வஸ்துஜாத மகிலம் ஸெளவர்ணப்ருங்காரகம்
தாம்பூலஸ்ய கரண்டகம் மணிமயம் சேலாஞ்சலம்தர்பணம்
விஸ்பூர்ஜன்மணிபாதுகே தததீ:ஸிமாஹாஸநஸ்யாபித :
திஷ்டந்தீ : பரிசாரிகாஸ்தவ ஸதா வந்தாமஹே ஸுந்தரி
ஹேஸுந்தரி! கற்பூரம் முதலிய வஸ்துக்களையும், கவர்ண கும்பத்தையும், வெற்றிலைப் பெட்டியையும், பட்டு வஸ்திரத்தையும், கண்ணாடியையும், பாதுகைகளையும் கையில் ஏந்திய வண்ணம் ஸிம்மாஸனத்தின் நாற்புறங்களிலும் நிற்கும் உனது பணிப்பெண்களை வணங்குகிறேன்.
76. த்வதமல வபுருத்யத் காந்தி கல்லோல ஜாலை:
ஸ்புடவ தததீபிர்பாஹ§விக்ஷேபலீலாம்
முஹ§ரபிச விதூதே சாமரக் ராஹிணீபி :
ஸிதகரகரசுப்ரே சாமரே சாலயா
ஹேதேவி! உனது தூய சரீரத்தின் காந்தியலைகளால் தெளிவாய் இருக்கும்
படி விளையாட்டாக கையசைத்துக்கொண்டு, சமரசம் சும் பெண்களால் சப்படும்
சந்திரகிரஹணமெனத்திகழும் சாமரங்களை அசைக்கிறேன்.
77. ப்ராந்தஸ்புரத்விமல மௌக்திக குச்ச ஜாலம்
சஞ்சன்மஹாமணி விசித்ரிதஹேமதண்டம்
உத்டத் ஸஹஸ்ரகர மண்டலசாரு ஹேம-
ச்சத்ரம் மஹேசமஹிலே விநிவேசயா
ஹேமஹேசன் ப்ரியையே! ஓரங்களில் ஒளிரும் முத்து குஞ்சலங்களையுடையதும், பளபளக்கும் மாணிக்கம் பதித்த தங்கத்தண்டுடன் கூடியதும், ஆயிரம் சூர்யர்கள் போன்று அழகாய் இருப்பதுமான தங்கக்குடையை அமைக்கிறேன்.
78. உத்யத்தாவகதேஹ காந்தி படலீஸிந்தூரப்பூரப்ரபா -
சோணீபூதமுதக்ரலோஹித மணிச்சேதானுகாரிச்சவி
தூராதாதர நிர்தாஞ்ஜலிபுடை ராலோக்யமாநம் ஸுர -
வ்யூஹை : காஞசனமாதபத்ரமதுலம் வந்தாமஹே ஸுந்தரம்
ஹேஸுந்தரி, உனது தேக காந்தியாகிய சிந்தூர ஒளியால் கவும் சிவந்ததும், சிவப்பு மணியின் பிளப்பு போலிருப்பதும், வெகு தூரத்திலிருந்தே கைகூப்பிய வண்ணம் தேவர்கள் தர்சித்து மனமகிழ்வதுமாகிய இணையற்ற தங்கக்குடையை வணங்குகிறேன்.
79. ஸந்துஷ்டாம் பரமாம்ருதேந விலஸத் காமேச்வராங்கஸ்திதாம்
புஷ்பௌகைரபிபூஜிதாம் பகவதீம் த்வாம் வந்தமாநா முதா
ஸ்பூர்ஜத்தாவகதேஸரச் கலநாப்ராப்தஸ்வரூபாபிதா :
ஸ்ரீசக்ராவரணஸ்திதா : ஸவிநயம் வந்தாமஹே தேவதா :
ஹேதேவி! பரமாம்ருதம் அருந்தி மகிழ்ந்து, ஸ்ரீகாமேச்வரரின் மடியிலமர்ந்து, புஷ்பக்குவியலால் பூஜிக்கப்பட்டிருக்கிற உன்னை வந்தனம் செய்யும், உனது தேகாந்திப்பட்டு உருமாறியிருக்கும் ஸ்ரீசக்ரத்தின் ஆவரணத்திலுள்ள தேவதைகளை வணங்குகிறேன்.
80. ஆதாரசக்த்யாதிக மாகலய்ய மத்யே ஸமஸ்தாதிகயோகிநீம்ஸ
த்ரேச நாதாதிகமத்ர நாதசது ஷ்டயம் சைலஸுதே நதோஸ்
ஹே பார்வதி! ஆதார சக்தி முதலிய தேவதைகளை தியானித்து நடுவில் யோகிநீயையும், நான்கு நாதர்களையும் வணங்குகிறேன்.
81. த்ரிபூராஸு தார்ணவாஸந மாரப்யத்ரிபுர மாலிநீம்யாவத்
ஆவரணாஷ்டக ஸம்ஸ்திதமாஸநஷ்டகம் நமா பரமேசி
ஹேபரமேச்வரி! த்ரிபுரஸுதார்ணவாஸனம் தொடங்கி த்ரி புரமாலினிவரையுள்ள எட்டு ஆவரணங்களிலுள்ள தேவதைகளையும், ஆறு ஆஸனங்களையும் நமஸ்கரிக்கிறேன்.
82. ஈசானே கணபம் ஸ்மரா விசரத் விக்நாந்தகாரச்சிதம்
வாயவ்யே வடுகம் ச கஜ்ஜலருசிம் வ்யாலோபதான்விதம்
நைர்ருத்யே மஹிஷாஸுரப்ரமதிநீம் துர்காம் ச ஸம்பூஜயன்
ஆக்னேயேsகில பக்தி ரக்ஷணபரம் க்ஷேத்ராதிநாதம் பஜே
ஈசாந திசையில் விக்னங்களையழிக்கும் கணபதியையும் வடமேற்கு திசையில், மை போன்று கருத்திருப்பவரும், நாகயஜ்ஞோப தம் தரித்தவருமான வடுகரையும், நைர்ருதிதிசையில் மஹிஷாஸுரமர்தினி, துர்கை ஆகியோரையும் பூஜித்து, ஆக்னேயதிசையில் எல்லா பக்தர்களையும் ரக்ஷிக்கும் க்ஷேத்ரபாலகரையும் சேவிக்கிறேன்.
83. உட்யாண-ஜாலந்தர-காமரூப-
பீடாநிமான் பூர்ண கிரிப்ரஸக்தான்
திரிகோண தக்ஷ£க்ரிம ஸவ்யபாக-
மத்யஸ்திதான்ஸித்தி கரான் நமா
ஒட்டியானம், ஜாலந்தரம், காமரூபம் ஆகிய டங்களையும், த்ரிகோணத்தின், வலதுபாகம், முன்பாகம், இடதுபாகம், நடுபாகம் ஆகிய இடங்களிலுள்ள சித்தியைச் செய்யும் தேவதைகளையும் வணங்குகிறேன்.
84. லோகேச: ப்ருதிபதிர்நிகதிதோ விஷ்ணுர்ஜலாநாம்ப்ரபு:
தேஜோநாத உமாபதிஸ்சமருதாமீசஸ்ததாசேச்வர :
ஆகாசாதிபதி : ஸதாசிவஇதிப்ரேதாபிதாமாகதாந்
ஏதாந்சக்ரபஹிஸ்திதான்ஸுரகணான் வந்தாமஹே ஸாதரம்
ஸ்ரீசக்ரத்தின் வெளியேயுள்ளவரும், ப்ரேதம் என்ற பெயருள்ளவரும் ஆகிய விஷ்ணு முதல் ஸதாசிவர் வரையிலுள்ள தேவர்களை வணங்குகிறேன்.
85. தாராநாத கலாப்ரவேசநிகம வாயஜாத்கதாஸுப்ரதம்
த்ரைலோக்யே திதிஷ§ப்ரவர்தித கலாகாஷ்டாதிகாலக்ரமம்
ரத்னாலங்க்ருத சித்ரவஸ்த்ரலலிதம் காமேச்வரீபூர்வகம்
நித்யாஷோடசகம் நமா லஸிதம் சக்ராத்மநோரந்தரே
ஸ்ரீசக்ரம், ஆத்மா இதனிடையில் விளங்கும் நித்யா ஷோடசகம் என்ற கலை, காஷ்டை என்பனவாகிய கால கணிப்பை வணங்குகிறேன். இவை சந்திரனின் கலை தோன்றி மறையும் வியாஜமாக ஏற்பட்டுள்ள தே சம்பந்தமான உண்மை படைப்புகள்.
86. ஹ்ருதி பாவித தைவதம் ப்ரயத்னா-
ப்யுரதேசானுக்ருஹீத பக்தஸங்கம்
ஸ்வகுருக்ரமஸம்ஜ்ஞ் சக்ர ராஜ-
ஸ்திதமோகத்ரய மாநதோsஸ் மூர்த்நா
தம் மனதிற்குள்ளே தேவதைகளை எண்ணியவாறு அக்கரையுடன் பக்தசமூகத்தை உபதேசத்தருளும் மூன்று கூட்டத்தாரை தலை வணங்கி
நமஸ்கரிக்கிறேன். அவர் நம் குருபரம்பரையின் பெயர் வரிசையில் பட்டவராவர். ஸ்ரீசகரத்தில் உள்ளவரும் ஆவர்.
87. ஹ்ருதயமத சிர : சிகாகிலாத்யே
கவசமதோ நயநத்ரிதயம் ச தேவி
முனிஜநபரிசிந்திதம் ததாஸ்தரம்
ஸ்புரது ஸதா ஹ்ருதயே ஷடங்கமேதத்
ஹேதேவி! முனி ஜனங்கள் ஜபகாலத்தில் ஸ்மரிக்கும் இந்த ஆறு அங்கங்கள் என் மனதில் தோன்றட்டும், அவை ஹ்ருதயம், தலை, கேசம், ஸர்வாவயவம், கவசம், நயனத்ரயம் என்பன.
88. த்ரைலோக்யமோஹனதிப்ரதிதே து சக்ரே
சஞ்சத் விபூஷணகணத்ரிபுராதிவாஸே
ரேகாத்ரயே ஸ்திதவதீரணிமாதிஸித்தீ :
முத்ரா நமா ஸததம் ப்ரகடாபிதாஸ்தாs :
ஹேதேவி! பளபளக்கும் ஆபரணங்கள் கொண்ட திரிபுரையின் வாஸஸாதலமாகிய தாரைலேக்ய மோஹனம் என்ற சக்ரத்தில் முக்கோண கோடுகளிலுள்ள அணிமா முதலிய அட்டு சித்திகளையும், பிரசித்தமான முத்ரைகளையும் நமஸ்கரிக்கிறேன்.
89.. ஸர்வாசாபரிபூரகே வஸுதலத்வந்த்வேந விப்ராஜிதே
விஸ்பூர்ஜத் த்ரிபுரேச்வரீ நிவஸதௌ சக்ரே ஸ்திதா நித்யச :
காமாகர்ஷணிகாதயோ மணிகணப்ராஜிஷணு திவ்யாம்பரா
யோகிந்ய : ப்ரதிசந்துகாங்க்ஷிதபலம் விக்யாதகுப்தாபிதா :
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவனவும் பதினெட்டு தளங்களில் விளங்கும் த்ரிபுரேச்வரீவாஸ ஸ்தலமாகிய ஸ்ரீசக்ரத்தில் எப்பொழுதும் இருந்துவரும் காமாகர்க்ஷிணீ முதலிய யோகிநிகள் எங்கள் விருப்பத்தை தந்து அருளட்டும்.
90. மஹேசி வஸுபிர்தலைர்லஸதி ஸர்வஸம்க்ஷே£பணே
விபூஷணகணஸ்புரத் த்ரிபுரஸுந்தரி ஸ்த்மநி
அனங்ககுஸுமாதயோ விவிதபூஷணோத் பாஸிதா
திசந்து மம காங்க்ஷிதம் தனுதராஸ்ச குப்தாபிதா :
ஹே மகேச்வரி ! எட்டு தளங்களுடன் எல்லோரையும் ஆட்டு வைக்கிற ஸ்ரீத்ரிபுரஸுந்தரியின் சக்ரத்தில் பற்பல ஆபரணவைபவங்களுடன் விளங்கும் காமராஜபீஜம் முதலிய அதிசூக்ஷ்மமான மந்த்ரங்கள் எனது விருப்பங்களை கொடுக்கட்டும்.
91. பஹிர்தசாரே ஸர்வார்த்தஸாதகே த்ரிபுராச்ரயா :
குலகௌலாபிதா : பாந்து ஸர்வஸித்திப்ரதாயிகா :
எல்லாவறறையும் ஸாதிக்கும் வெளிப்பத்து தலங்களில் ஸ்ரீத்ரிபுரஸுந்தரியின் ஆட்சியிலுள்ள குல-கௌலாதிகளான ஸித்திகள் எங்களைக் காக்கட்டும்.
92. அந்த: சோபிதசாரகேsதிலலிதே ஸர்வாதிரக்ஷ£கரே
மாலின்யா தாரிபுராத்யயாவிரசிதா வாஸே ஸ்திதம் நித்யச:
நாநாரத்னவிபூணம் மணிகண ப்ராஜிஷ்ணு திவ்யாம்பரம்
ஸர்வஜ்ஞாதிக சக்திப்ருந்தமநிசம் வந்தே நிகர்பாபிதம்
ஸ்ரீ த்ரிபுரஸுந்தரி சக்ரத்தின் உட்பத்து தலங்களில் எப்பொழுதும் பற்பல ரத்னாபரணங்களும், திவ்யாம்பரமும் துலங்க விளங்கும் ஸர்வஞ்ஞ சக்தி முதலிய (நிகர்பம் என்ற பெயருடன்) சக்திகளை நான் வணங்குகிறேன்.
93. ஸர்வரோகஹரேsஷ்டாரே த்ரிபுராஸித்தயான்விதே
ரஹஸ்யயோகிநீர்நித்யம் வசிந்யாத்யா நமாம்யஹம்
ஸ்ரீ த்ரிபுரஸுந்தரியுடன் கூடியவரும், எல்லா ரோகங்களையும் போக்கும் எட்டு தலங்களில் உள்ளவருமான வசிநீ முதலிய ரஹஸ்யயோகிநீதிகளை வணங்குகிறேன்.
94. சூதாசோக விகாஸிகேதகரஜ : பரோத்பாஸி நீலாம்புஜ
ப்ர,¢பூர்ஜந்நவமல்லிகா ஸமுதிதை : புஷ்பை :சரான் நிர்தாந்
ரம்யம் புண்ய்ர சராரனம் ஸுலலிதம்பாசம் ததாசாங்குசம்
வந்தே தாவகமாயுதம் பரசிவே சக்ராந்தராலேஸ்திதம்
ஹே பரசிவே! ஒட்டு மாம்பூ , அசோகம், தாழம்பூ , கருநெய்தல், நவமல்லிகை ஆகிய புஷ்பங்களான அம்புகள், அழகிய கரும்புவில், மெல்லிய பாசம், அங்குசம்
இவை உனது சக்ரத்தின் நடுவே உள்ளன. அவற்றை வணங்குகிறேன்.
95. த்ரிகோண உதிதப்ரபே ஜகதி ஸர்வ ஸித்திப்ரதே
யுதேத்ரிபுராம்பயா ஸ்திதவதீ ச காமேச்வரீ
தநோது மங்கலம் ஸகலசர்ம வஜ்ரேஸ்வரீ
கரோது பகமாலிநீ ஸ்புரதுமாமகே சேதஸி
உலகில் அனைத்து ஸித்திகளையும் அருளும் த்ரிகோணத்தில் ஸ்ரீத்ரிபுரஸுந்தரியுடன் கூடிய காமேச்வரீ எனக்கு எல்லா க்ஷேமங்களையும் செய்யட்டும், பகமாலினீ என் மனதில் பிரகாசிக்கட்டும்.
96. ஸர்வாநந்தமயே ஸமஸ்தஜகதாம்காங்க்ஷிதே பைந்தவே
பைரவ்யா த்ரிபுராத்யயா விரசிதாவாஸே ஸ்திதாஸுந்தரீ
ஆநந்தோல்லஸிக்ஷேணாமணிகண ப்ராஜிஷணு திவ்யாம்பரா
விஸ்பூஜத்வதநா பராபரரஹ: ஸாபாதுமாம் யோகிநீ
அகில உலகும் வேண்டி நிற்கும் ஆனந்தமயமான பிந்துமத்யத்தில் த்ரிபுரையின் தமக்கை பைரவி வாஸம் செய்யுடத்தில் குடி கொண்டிருக்கும் ஸுந்தரி பராபர ரஹஸ்யமாக நிற்கும் யோகினீ என்னை ரக்ஷிப்பாளாக. அவள்
கண்கள் ஆனந்தத்தால் மலர்ந்துள்ளன. பற்பல மணிகளால், திவ்ய வஸ்த்திரத்தால் அவள் தளதளவென பிரகாசிக்கிறாள்.
97. உல்லஸத்நக காந்தி பாஸுரம் ஸெளரபஸ்புரணவாஸி தாம்பரம்
தூரத : பரிஹ்ருதம் மதுவ்ரதை : அர்பயா தவதேவி சம்பகம்
ஹே தேவி! பளபளக்கும் தங்கம்போல் ளிர்வதும், வாசனை குதியால் ஆகாயத்தையும் வாசனையுடையதாக்குவதும், தேனீக்கள் மொய்க்காததுமான சம்பகத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன்.
98. வைரமுத்ததமபாஸ்ய சம்புநா
மஸ்தகே விநிஹிதம் கலாச்சலாத்
கந்தலுப்தமதுபாச்ரிதம் வதா
கேதகீகுஸுமமர்பயா தே
முரட்டு வெறுப்பை விட்டு சம்புவே சந்திரக்கலை என்ற சாக்கில் தலையில் சூய்யிக் கொண்டதும், வாசனையால் கவர்ந்த தேனீக்கள் மொய்ப்பதுமான தாழம்பூவை உனக்கு ஸமர்ப்பிக்கிறேன்.
99.. சூர்ணிக்ருதம் த்ராகிவ பத்மஜேந
த்வதாநநஸ்பர்திஸுதாம்சு பிம்பம்
ஸமர்பயா ஸ்புடமஞ்ஜலிஸ்தம்
விகாஸிஜாதீகுஸுமோத்கரம்தே
ஹேதேவி! உனது முகத்துடன் போட்டியிடும் சந்திர பிம்பத்தை சட்டென பிரம்மதேவன் பொடியாக்கிவிட்டானே என நினைக்கத் தோன்றுமந்த மலர்ந்த ஜாதிமுல்லைப் புஷ்பத்தை கைநிறைய வாரி உனக்கு அர்பிக்கிறேனே !
100.. அகருபஹலதூபாஜஸ்ரஸெளரப்யரம்யாம்
மரகதமணிராஜீராஜிஹாரி ஸ்ரகாபாம்
FCவிதிC விஸர்பத்கந்தலுப்தாலிமாலாம்
வகுலகுஸுமமாலாம் கண்டபீடேsர்பயா
அகரு (அகில்) புகை போல் எப்பொழுதும் மணம் கமழும் மகிழம்பூ மாலையை, ஹேதேவி! உனது கழுத்தில் அர்பணம் செய்கிறேனே! அந்தமாலை மரகதமணிமாலை போல் க அழகானாது. பல திசைகளிலும் வாசனையால் தேனீக்களை கவர்வது.
101. ஈகாரோர்த்வகபிந்துராநநமதோ பிந்துத்வயம் சஸ்தனௌ
த்ரைலோக்யே குருகம்யமேததகிலம் ஹார்தம் சரேகாத்மகம்
இத்தம் காமகலாத்காம் பகவதீமந்த : ஸமாராதயன்
ஆனந்தாம்புஜிமஜ்ஜநே ப்ரலபதாமானந்ததும் ஸஜ்ஜந:
ஈகாரத்தின் மேலே இருக்கும் பிந்துதான் முகமாகும். அதனடியில் இருக்கும் இரண்டு பிந்துக்கள்தான் ஸ்தனங்கள், உலகில் குருவின் அருளால் மட்டும்
உணரக்கூடியது இதெல்லாம் ஹ்ருதயம் என்பது கோடு. இவ்விதம் காமகலை ஸ்வரூபிணியான அம்பிகையை அந்த:கரணத்தில் பூஜிப்பவர் ஆனந்தக் கடலில் மூழ்கி ஆனந்தம் பெறுவர்.
102. தூபம்தேகருஸம்பவம் பகவதி ப்ரோல்லாஸிகந்தோத்துரம்
தீபம் சைவ நிவேதயா மஹஸா ஹார்தாந்த காரச்சிதம்
ரத்னஸ்வர்ண விநிர்தேஷ§பரித : பாத்ரேஷ§ஸம்ஸ்தாபிதம்
நைவேத்யம் விநிவேதயா பரமானந்தாத்கே ஸுந்தரி
பரமானந்த ஸ்வரூபியான ஹே ஸுந்தரி! உனக்கு அகருவின் தூபத்தையும், ஒளியால் ஹ்ருதயத்தில் அஜ்ஞான இருளைப் போக்கும் தீபத்தையும் நிவேதனம் செய்தபின், ரத்னஸ்வர்ண பாத்ரங்களில் வைத்துள்ள நைவேத்தையும் நிவேதனம் செய்கிறேனே!
103. ஜ்தீகோரகதுல்ய மோதநதம் ஸெளவர்ணபாத்ரே ஸ்திதம்
சுத்தான்னம் சுசி முத்கமாஷணகோத்தூதா ஸ்ததா ஸுபகா :
ப்ராஜ்யம் மாஹிஷமாஜ்யம் உத்தமதம் ஹைங்கனம்ப்ருதக்
பாத்ரேஷ§ப்ரதிபாதிதம் பரசிவே தத்ஸர்வமங்கீகுரு
ஹே பரமேச்வரி! ஜாதிமுல்லை மொக்கு போன்ற இந்த ஓதனம் தங்கத் தட்டில் வைக்கப்பட்டுள்ளது. பயறு, உளுந்து, கடலை இவற்றுடன் கலந்த சூபங்கள், எருமை நெய், உயர்ந்த புத்துருக்குப் பசுநெய் இவை தனித்தனிப் பாத்திரத்தில் வைத்துள்ளது. இவையனைத்தையும் ஏற்றுக் கொள்!
104. சிம்பீஸுரணசாகபிம்ப ப்ருஹதீ கூச்மாண்டகோசாதகீ
வ்ருந்தாகாநி படோலிகாநி ம்ருதுநா ஸம்ஸாதிதான்யக்னிநா
ஸம்பந்நாநிச வேஸவாரவிஸரைர் திவ்யாநி பக்த்யா க்ருதா
ந்யக்ரே தே விநிவேதயா கிரிஜே ஸெளவர்ணபாத்ரவ்ரஜே
பருப்புள்ள காய், சேனைக்கிழங்கு, சாகம், கோவை, பலா, பூஷணி, சுரைக்காய், கத்தரிக்காய், புடல் இவற்றை மெதுவான சூட்டில் பக்குவம் செய்து, சுக்குப்பொடி, ளகுபொடி கலந்து, பக்தியால் திவ்யமாகச் செய்து, ஹே கிரிஜே! உனது முன்னலையில் சுவர்ண பாத்திரத்தில் பரிமாறி வைத்துள்ளேன் நிவேதனமாக.
105. நிம்பூகார்த்ரக சூதகந்த கதலீகௌசாதகீகர்கடீ
தாத்ரீ பில்வ கரீரகைர்விரசிதான்யாநந்த சித்விக்ரஹே
ராஜீபி: கடுதைல ஸைந்தவ ஹரித்ராபி : ஸ்திதான் யாதபே
ஸந்தாநாநி நிவேதயா கிரிஜே பூரிப்ரகாரணிதே
நிம்பூகம், இஞ்சி, மா, கந்தம், கதலி, சுரை, வெள்ளரி, நெல்லி, பில்வம், கரீரகம் இவற்றால் பலவித கூட்டுகளை கடுகு, காரமான எண்ணை, உப்பு, மஞ்சள்பொடி இவற்றுடன் கலந்து தயாரித்து, வெயிலில் காயவைத்தவற்றை, ஹேகிரிஜே! உனக்கு நிவேதனம் செய்கிறேன்.
106. ஸிதயாஞ்சிதலட்டுக வ்ரஜான்ம்ருதுபூபான் ம்ருதுலாஸ்சபூரிகா :
பரமான்னதம்ச பார்வதி ப்ரணயேந ப்ரதிபாதயாதே
சர்க்கரை கலந்த லட்டுகள், மென்மையான அப்பங்கள், மெதுவான பூரிகள், பாயாஸம் இவற்றை, ஹே பார்வதி! அன்புடன் உனக்கு ஸமர்பிக்கிறேன்.
107. துக்தமேததநலே ஸுஸாதிதம்
சந்த்ரமண்டலநிபம் ததா ததி
பாணிதம் சிகரிணீம் ஸிதாஸிதாம்
ஸர்வமம்ப விநிவேதயாதே
நெருப்பில் நன்கு காய்ச்சிய பாலும், சந்திர மண்டலம் போல் க வெண்மையான தயிரும், பாணிதமும் (Molasses) சர்க்கரை கலந்த தயிரும் இவையெல்லாம் ஹே தாயே! உனக்கு ஸமர்ப்பிக்கிறேன்.
108. அக்ரே தே விநிவேத்ய ஸர்வமதம் நைவேத்யமங்கீக்ருதம்
ஜ்ஞாத்வா பக்தசதுஷ்டயம் ப்ரதமதோ மன்யே ஸுத்ருப்தாம் தத:
தேம் த்வாம் பரிசிஷ்யமம்ப கநகாமத்ரேஷ§ஸம் ஸ்தாபிதம்
சக்திப்ய : ஸமுபாஹரா ஸகலம் தேவேசி சம்புப்ரியே
ஹேதேவேசி! சம்புவின் ப்ரியையே! முதலில் இவையெல்லாவற்றையும் உன்முன்னால் நிவேதனம் செய்து, நான்குவித அன்னமும் c ஏற்று, அதனால் நன்கு
திருப்தியடைந்தாய் என்றும் தெரிந்துகொண்டபின் எஞ்சியுள்ள தங்க பாத்திரத்திலுள்ள அவற்றை சக்திகளுக்கு ஸமர்ப்பிக்கிறேன்.
109. வாமேந ஸ்வர்ணபாத்ரீ மனுபம பரமாந்நேன பூர்ணாம் ததாநாம்
அன்யேந ஸ்வர்ணதர்ம் நிஜஜநஹ்ருதயா பீஷ்டதாம் தாரயந்தீம்
கிந்தூரா ரக்தவஸ்த்ராம் விவிதமணி லஸத்பூஷணாம் மேசகாங்கீம்
திஷ்டந்தீமக்ரதஸ்தே மதுமதமுதிதா மந்நபூர்ணாம் நமா
பாயாஸம் நிரம்பிய தங்கப் பாத்ரத்தை இடது கையிலும், வலக்கையில் பக்த ஜனங்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தங்கக் கரண்டியையும் வைத்துக்கொண்டு செம்பட்டு அணிந்து, பறபல மணிகளயங்கிய நகைகளைப் பூண்டு அழகிய திருமேனியுடன் உனது முன்னால் நிற்கும் அந்த அன்ன பூர்ணேச்வரியை நமஸ்கரிக்கிறேன்.
110. பங்க்த்யோபவிஷ்டாந் பரிதஸ்துசக்ரம்
சக்தயாஸ்வயாலிங்கிததவாமபகான்
ஸர்வோபசாரை: பரிபூஜ்ய பக்த்யா
தவாம்பிகே பாரிஷதாந் நமா
ஸ்ரீ சக்ரத்தின் நான்கு புறமும் வரிசையாக உட்கார்ந்திருக்கும் தத்தம் சக்தி பரிவாரங்களுடனுருக்கும் பாரிஷதர்களை, ஹே அம்பிகே, பக்தியுடன் எல்லா உபசாரங்களையும் செய்து நமஸ்கரிக்கிறேன்.
111. பரமாம்ருத மத்தஸுந்தரீகணமத்ய ஸ்திதமர்கபாஸுரம்
பரமாம்ருதகூர்ணி தேக்ஷணம் கிமபி ஜ்யோதி ரு பாஸ்மஹே பரம்
பாயாஸம் சாப்பிட்டு மயக்கம் கொண்ட ஸுந்தரிகளின் நடுவில் சூர்ய மண்டலம் போல் பிரகாசிக்கும் சொல்லிற்கடங்காத ஒரு பேரொளியை உபாஸிக்கிறேன்.
112. த்ருச்யதே தவமுகாம்புஜம் சிவே ச்ருயதே ஸ்புட மநாஹதத்வநி:
அர்சனேதவ கிராமகோசரே நப்ரயாதிவிஷயாந்தரம் மதி:
ஹே சிவையே! உனது முககமலம் தெரிவதன்றி, உன்னை அர்ச்சிக்கும் பொழுது அநாஹதநாடியின் ஒலி கேட்பதன்றி வேறுவிஷயத்தில் என் மனம் செல்லவில்லை.
113. த்வன்முகாம்புஜ விலோகநோல்லஸத்
ப்ரேமநிஸ்சலவிலோசனத்வயீம்
உன்மநீமுபகதாம் ஸபாமாம்
பாவயா பரமேசி தாவகீம்
ஹே பரமேச்வரி! உனது முககமலத்தைப் பார்த்து மலர்ந்த அன்பு ளிரும் கண்களையுடைய உனது உன்மநீ நிலையை மட்டுமே இந்த ஸபையை வந்துள்ளதாக பாவிக்கிறேன்.
114. சக்ஷ§: பச்யது நேஹ கிஞ்சனபரம் க்ராணம் நவாஜிக்ரது
ச்ரோத்ரம் ஹந்த ச்ருணோது ந த்வகபி நஸ்பர்சம் ஸமாலம்பதாம்
ஜிஹ்வா வேத்து ந வா ரஸம் மம பரம் யுஷ்மத்ஸ்வரூ பாம்ருதே
நியானந்தவிகூர்ணமாநநநயநே நித்யம் மநோ மஜ்ஜது
நித்யானந்தத்தில் திளைத்து சுழலும் கண்களையுடைய உமது ஸ்வரூபாம்ருதத்தில் என் மனம் நித்யம் மூழ்கட்டும்; ஹே தேவி! என் கண் வேறு எதையும் பார்க்க வேண்டாம், என் மூக்கும் வேறு எதையும் முகர வேண்டாம், காதும் வேறு எதையும் கேட்க வேண்டாம், எனது உடல் வேறு எந்த ஸ்பர்சத்தையும் நாட வேண்டாம், நாக்கு வேறு எந்த ரசத்தையும் ருசிக்க வேண்டாம்.
115. யஸ்த்வாம் பச்யதி பார்வதி ப்ரதிதினம் த்யாநேந தேஜோமயீம்
மன்யேஸுந்தரிதத்வமேத தகிலம் வேதேஷ§நிஷ்டாம் கதம்
யஸ்தஸ்ந்ஸமயே தவார்சனவிதாவானந்த ஸாந்த்ராசயோ
யாதோsஹம் ததபின்னதாம் பரசிவே ஸோsயம் ப்ராஸதஸ்தவ
ஹே பார்வதி! எவரொருவர் தினந்தோறும் தியானத்தின் மூலம் ஒளிமயமான உன்னைப் பார்க்கிறானோ, அதுவேதான் வேதத்தில் நிலைத்த தத்வமாகும். எவர் உமது அர்ச்சனையில் ஈடுபட்டு ஆனந்தமக்னநாக இருக்கிறாரோ அவரோடு ஒன்றிவிடுகிறேனே அதுவே உனது கருணையால் கிடைத்த பிரசாதமாகும்.
116. கணாதிநாதம் வடுகம் ச யோகிநீ:
க்ஷேத்ராதிநாதம்ச விதிக்சதுஷ்டயே
ஸர்வோபசாரை: பரிபூஜ்ய பக்திதோ
நிவேதயாமோ பலிமுக்தயுக்திப் :
ஸ்ரீ கணபதியையும், வடுகரையும், யோகினிகளையும், நான்கு விதிக்குளிலும் க்ஷேத்ரபாலரையும் பக்தியுடன் எல்லா உபசாரஙகளுடன் பூஜித்து பின் சாஸ்த்ர முறையில் பலியையும் நிவேதனம் செய்கிறேன்.
117. ணாமுபாந்தே கலு வாதயந்த்யை
நிவேத்ய சேஷம் கலுசேஷிகாயை
ஸெளவர்ணப்ருங்கார விநிர்கதேந
ஜலேந சுத்தாசமதம் விதேஹி
அருகில் ணை வாசிக்கும் சேஷிகைக்கு எஞ்சியதை நிவேதனம் செய்தபின் தங்கக் கிண்டியிலிருந்து சுத்த ஜலம் விட்டு சுத்த-ஆசமனம் செய்யலாமே.
118. தாம்பூலம் விநிவேதயா விலஸத்கர்பூரகஸ்தூரிகா
ஜாதீபூக லவங்க சூர்ணகதிரை:பக்த்யாஸமுல்லா ஸிதம்
ஸ்பூர்ஜத்ரத்ன ஸமுத்கக ப்ரணிஹிதம் ஸெளவர்ணபாத்ரே ஸ்திதை :
தீபைருஜ்வல மன்னசூர்ணரசிதைராராத்திகம் க்ருஹ்யதாம்
ஹே தேவி! கற்பூரம், கஸ்தூரி, ஜாதிக்காய், பாக்கு, லவங்கசூர்ணம், கதிரம் இவற்றாலானதும் பக்தியுடன் ஸமர்பித்ததுமான தாம்பூலம் நிவேதனம் செய்கிறேன். தங்கத்தட்டில் உள்ள தீபங்களால் மாப்பொடி கலந்த ஆரத்தியை ஏற்கலாமே!
119. காசித் காயதி கிந்நரீ கலபதம் வாத்யம் ததாநோர்வசீ
ரம்பாந்ருத்யதி கேலிமஞ் ஜுலபதம் மாத : புரஸ்தாத்வ
க்ருத்யம் ப்ரோஜ்ய ஸுரஸ்த்ரியோ மதுமதவ்யாகூர்ண மனேக்ஷணம்
நித்யானந்தஸுதாம்புதிம் தவமுகம் பச்யந்தி ஹ்ருஷ்யந்திச
ஊர்வசி என்ற கிந்நர vFg வாத்யம் தாங்கி இனிய பதமுள்ள கானத்தைப் பாடுகிறாள். ஹே தாயே! உன்முன்னால் ரம்பை கேலியாக கால்களை வைத்து நடனமாடுகிறாள், மற்ற தேவலோக மங்கையரும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு, மதுமதம் காரணமாக கண் சுழல உனது நித்யானந்த-அம்ருதக் கடலாகிய முகத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்களே !
120. தாம்பூ லோத்பாஸிவக்த்ரைஸ்த்வதமலவதநா லோகநோல்லாஸி நேத்ரை:
சக்ரஸ்தை:சக்திஸங்கை:பரிஹ்ருதவிஷயா ஸங்கமாகர்ண்யமாநம்
கீதஜ்ஞாபி: ப்ரகாமம் மதுரஸமதுரம் வாதிதம் கிந்நரீபி :
ணாஜங்காரநாதம் கலய பரசிவாநந்தஸந்தான ஹேதோ :
தாம்பூலம் தரித்ததால் அழகான முகத்தையும், உனது தூய வதனத்தைக் கண்டு மலர்ந்த கண்களையும் உடைய ஸ்ரீசக்ரத்திலுள்ள சக்திகள், வேறு விஷயங்களை நீக்கி மகிழ்கிறார்கள். கேட்டு மகிழத்தக்க ஸங்கீதம் நன்கறிந்த கிந்நரிகள் மதுவென இனிய ணை வாசிப்பதை கேளேன் அது பரசிவையின் ஆனந்தத்தைக்
கூட்டுவிக்குமே !
121. அர்சாவிதௌ ஜ்ஞானலவோsபிதூரே
தூரே ததாபாதகவஸ்து ஜாதம்
ப்ரதக்ஷிணீக்ருத்ய ததோsர்சனம்தே
பஞ்சோபசாராத்மக மர்பயா
தேவி! பூஜை செய்யும் விதம் பற்றி சிறிதேனுல்லை ஜ்ஞானம். அந்தபூஜைக்குரிய வஸ்துக்களும் என்னிடம் இல்லை. அதனால், பஞ்சோபசார முன்னடக்கிய ப்ரக்ஷிணம் செய்து, அர்சனத்தை உனக்கு ஸமர்ப்பிக்கிறேன்.
122. யதேப்ஸிதமனோகத்ப்ரகடிதோபசாரார்சிதாம்
ந்ஜாவரணதேவதாகண விருதாம்ஸுரேசஸ்திதாம்
க்ருதாஞ்ஜவி புடோ முஹ§: கலிதபூரஷ்டாங்கை :
நமா பகவத்யஹம் த்ரிபுரஸுந்தரி த்ராஹிமாம்
ஹே பகவதி! த்ரிபுரஸுந்தரி! விரும்பியபடி, மனம் போன போக்கில் உபசாரங்களைக் காட்டி அர்சித்து, ஆவரண தேவதைகளையும் சேர்த்து, கைகூப்பிய வண்ணம் பூயில் எட்டு அங்கங்களும் பதியும்படியாக நமஸ்கரிக்கிறேன். c என்னைக் காக்கவேணும் அம்மா!
123. விஜ்ஞப்தீரவதேஹிமேஸுமஹதாயநேந தேஸந்நிதிம்
ப்ராப்தம் மாஹ காந்திசீகமதுநா மாதர் ந தூரீகுரு
சித்தம் த்வத்பதபாவநே வ்யபிசரேத்த்ருக்வாக்சமேஜாதுசேத்
தத்ஸெளம்யே ஸ்வகுணைர் பதாந நயதா பூயோவிநிர்கச்சதி
தேவி! எனது விண்ணப்பத்தையும் கேளேன்! கப்பிரயாசையுடன் உனது ஸந்நிதிக்கு வந்துள்ளேன். எங்கு போவதெனத்தெரியாத என்னை, ஹே தாயே! தள்ளி ஒதுக்கிவிடாதே! உன்னை சரியாகப் புரிந்துகொள்ள, என் கணணோ, வாக்கோ ஒருவேளைத்தப்பிவிட்டால், ஹே சௌம்யே, உனது குணங்களால் அவற்றைக் கட்டி விடு. பிறகு வேறெங்கும் போகாதபடிச் செய்துவிடு!
124. க்வாஹம் மந்தமதி:க்வசேதமகிலைரேகாந்தபக்தை: ஸ்துதம்
த்யாதம் தேவி ததாபி தே ஸ்வமநஸா ஸ்ரீபாதுகாபூஜநம்
காதாசித்கமதீய சிந்தநவிதௌ ஸந்துஷ்ட.யா சர்மதம்
ஸ்தோத்ரம் தேவதயா னாதயா ப்ரகடிதம்மந்யே மதீயாநநே
தேவி! நான் மந்தமதிதானே! ஏகாந்த பக்தியுடையவர் செய்யும் ஸ்தோத்ரம் நான் எப்படி செய்ய முடியும்? எனினும் என் மனப்போக்கில் தங்கள் திருவடி பூஜை செய்ய எண்ணினேன். எப்பொழுதாவது என் எண்ணத்தை மெச்சி அந்த தேவதை சந்தோஷித்திருக்க வேண்டும். அதனாலன்றோ என் வாக்கில் க்ஷேமத்தையளிக்கும் ஸ்தோத்ரத்தை வெளியிடச் செய்திருக்கிறது அந்த தேவதை!
125. நித்யார்சனதம் சித்தே பாவ்யமாநம்ஸதாமயா
நிபத்தம் விவிதை:பத்யை: அனுக்ருஹ்ணாதுஸுந்தரீ
இந்த நித்யபூஜை எப்பொழுதும் எனது மனதில் தோன்றி வந்தது. இப்பொழுது பற்பல பத்யங்களில் அது உருவாக்கப்பட்டது. ஸ்ரீத்ரிபுரசுந்தரீ என்னை மன்னித்து அருள் பாளிப்பாயாக !
த்ரிபுரஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்ரம் முற்றிற்று