ஸுவர்ணமாலாஸ்துதி 1 அத கதமயி மத்ரஸநாம் த்வத்குண லேசை:விசேதயாமி விபோ ! ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர சரணம் மே தவ சரணயுகம் !! இதோ ஒவ்வாறு உமது குணங்களை

ஸுவர்ணமாலாஸ்துதி

1.அத கதமயி மத்ரஸநாம் த்வத்குண

லேசை:விசேதயாமி விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

இதோ ஒவ்வாறு உமது குணங்களை ஒரு சிவலற்றையாவது சொல்லி என் நாக்கை சுத்தப்படுத்துகிறேன். ஹேஸாம்ப!சதாசிவ, சம்போ, சங்கர!உமது இரு திருவடிகள்தான் எனக்குப் புகலிடமாகின்றன.

2.ஆகண்டலமத கண்டன பண்டித

தண்டுப்ரிய சண்டீச விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

இந்திரனின் செருக்கை நொறுக்கும் திறமைசாலியே!தண்டுமஹர்ஷிக்கு ஆப்தரே!சண்டீச! விபுவ!ஸாம்ப, ஸதாசிவ சம்போ, சங்கர உமது திருவடிகளே சரணம் எனக்கு!

3.இப சர்மாம்பர சம்பரரிபுவபு-

ரபஹரணோஜ்வல நயன விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

யானைத்தோலையே ஆடையாகக் கொண்டவரே. மன்மதனை பொசுக்கும் அக்னியாய் எரியும் கண்ணனே! விபோ!ஸாம்ப ஸதாசிவ!சம்போ!உமது திருவடிகளே எனக்கு சரணம்.

4.ஈச கிரீச நரேச பரேச

மஹேச பிலேசய பூஷண விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

மலை வாழும் ஈசனே!நரேசனே! பரேசனே!மஹேசனே!புத்தில் உறையும் நாகத்தை அணிபவனே! விபோ! ஸாம்ப ஸதாசிவ! சம்போ! உமது திருவடிகளே எனக்கு சரணம்.

5.உமயா திவ்ய ஸுமங்கல விக்ரஹ-

யாலிங்கித வாமாங்க விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

திவ்யமான மங்கல ஸ்வரூபிணியான பார்வதீ தவழும் இடது பாகனே!விபோ! ஸாம்ப ஸதாசிவ! சம்போ! உமது திருவடிகளே எனக்கு சரணம்.

6.ஊரீகுரு மாமஜ்ஞ மநாதம்

தூரீகுரு மே துரிதம் போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

அறிவிலுயும் அநாதனுமான என்னை ஏற்றுக்கொள். எனது பாபத்தைப் போக்கிவிடு ஹே ஸாம்ப!விபோ! ஸாம்ப ஸதாசிவ! சம்போ! உமது திருவடிகளே எனக்குபுகலிடம்.

7.ரிஷிவரமானஸஹம்ஸ சராசர

ஜனனஸ்திதி-லயகாரண போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

சிறந்த ரிஷிகளின் மனதில் தவழும் அன்னமே! சராசர ஜகத்தின் தோற்றம், வாழ்க்கை, முடிவு இவற்றின் காரணகர்த்தாவே ஹே ஸாம்ப, விபோ! ஸாம்ப ஸதாசிவ! சம்போ! உமது திருவடிகளே எனக்கு சரணம்.

8.ருக்ஷ£தீசகிரீட மஹோக்ஷ£

ரூட வித்ருத ருத்ராக்ஷவிபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

சந்திரனை க்ரீடமாக அணிந்தவரே! ரிஷபாரூடரே!ருத்ராக்ஷம் தரித்தவரே விபோ! ஸாம்ப ஸதாசிவ! சம்போ! உமது திருவடிகளே எனக்கு புகலிடம்.

9.லுவர்ணத்வந்த்வ மவ்ருந்தஸுகுஸும

மிவாங்க்ரௌ தவார்பயாமி விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

நெட்டி களைத்த நல்ல புஷ்பங்களைப் போல் 'லு'என்ற இரு எழுத்துக்களை உமது காலடியில் இட்டுப் பூஜிக்கிறேன். ஹே ஸாம்ப, விபோ! ஸாம்ப ஸதாசிவ! சம்போ! உமது திருவடிகளே எனக்கு சரணம்.

10.ஏகம் ஸதிதி ச்ருத்யா த்வமேவ

ஸதஸீத்யுபாஸ்மஹே ம்ருட போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

எல்லாம் தாங்கும் திறன் கொண்ட ஹே ஸாம்ப!ஸதாசிவ!சம்போ சங்கர! உள்ளது ஒன்றே என்ற வேத முழக்கப்படி நீரே உள்ளவர் என்று உம்மை உபாஸனை செய்கிறேம்!எனக்கு உமது திருவடியே சரணம்.

11.ஜக்யம் நிஜபக்தேபேயோ விரதஸி

விச்வம்பரோsத்ர ஸாக்ஷீபோ: !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

தனது பக்தர்களுக்கு ஆத்ம பாவத்தையளிக்கிறீர் என்பதற்கு சாக்ஷியாக விஷ்ணு உள்ளார். ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

12.ஓமிதி தவ நிர்தேஷ்ட்ரீ மாயா

sஸ்மாகம் ம்ருடோபகர்த்தீ போ: !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஒம் என்ற ப்ரணவம் தான் உம்மை அடையாளம் காட்டக்கூடியது. உமது மாயை எங்களுக்கு உபகாரம் செய்கிறது. ஹே ஸாம்ப!ஸதாசிவ!சம்போ சங்கர!உமது திருவடி எனக்கு சரணம்.

13.ஓளதாஸ்யம் ஸ்புடயதி விஷயேஷ§

திக்-அம்பரதா சங்கர மடம் தவைவ விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

நீர் திகம்பரர் என்பதற்கென்றே உமக்கு உலக விஷயங்களில் பற்றில்லை என்பதை தெளிவுபடுத்தும், ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

14.அந்த:கரண விசுத்திம் பக்திம்

ச த்வயி ஸதீம் ப்ரதேஹிவிபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! விபோ!எனக்கு அந்த:கரணதூய்மையையும் உம்மிடம் நல்ல பக்தியையும் கொடுத்தருள வேண்டும்.

15.அஸ்தோபாதி:ஸமஸ்த வ்யஸ்தை

ரூபைர்ஜகன்மயோsஸி விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

காரண கார்யம் என்றில்லாமல் முழுமையாயும், தனித் தனியாயும் உள்ள வடிவங்களால் உலகமே உருவாயுள்ளீர். ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

16.கருணா வருணாலய மயி தாஸ-

உதாஸஸ்தவோசிதோ நஹி போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

கருணைக்கடலே ஸாம்ப!ஸதாசிவ!சம்போ!சங்கர!உமது தாஸனாகிய என்மேல் பாராமலிருப்பது உமக்குத் தகாதன்றோ! உமது திருவடிகளே எனக்கு சரணம்.

17.கலஸஹவாஸம் விகடய கடய

ஸதாசிவ ஸங்கமநிசம் போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

கெட்டவர்கள் ஸஹவாஸத்தை நீக்கி நல்லோர் இணைக்கத்தையே எப்பொழுதும் எனக்கு கூட்டி வைக்க வேணும். ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடிகளே எனக்குப்புகல்.

18.கரலம் ஜகதுபக்ருதயே கிலிதம்

பவதா ஸமோsஸ்தி கோத்ர போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உலக க்ஷேமத்திற்காக உம்மால் விஷமே விழுங்கப்பட்டதே. உமக்கு நிகர் யார் உளர்?நீர்தான் (உமது திருவடிகளே) எனக்கு சரணம்.

19.கனஸார கௌரகாத்ரப்சுர

ஜடாஜூட பத்தகங்க விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

சந்தனம் பூசியதால் வெளிரிய மேனியனே! ஜடைக் கத்தையில் கங்கையை கட்டி வைத்துள்ள ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம். விபோ!ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

20.ஜ்ஞப்தி:ஸர்வ சரீசேஷ்வகண்டிதா

யா விபாதி ஸா த்வம் போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே விபோ! ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உலகோர் உடல் முழுவதும் பரவியுள்ள ஜ்ஞானமே நீர் நுமது திருவடிகளே எனக்கு சரணம்.

21.சபலம் மம ஹ்ருதய கபிம் விஷய-

த்ருசரம் த்ருடம் பதாந விபோ!

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம். பரமேச்வர!உலக விஷயங்களாகிய மரத்தை பற்றிக் கொள்ளும் என் மனமாகிய குரங்கை கெட்டியாகக்கட்டிபோடும். ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடிகளே புகல்.

22.சாயா ஸ்தாணோரபி தவ தாபம்

நமதாம் ஹரத்யஹோ சிவ போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேசிவ! ஹேஸ்தாணுவே! ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது, ஸ்தாணு (தூண்) வாகிய உமது நிழல் கூட வணங்கிய பக்தர்களின் தாபத்தைப் போக்கி விடுகிறது. இது உண்மை!உமது திருவடிகளே சரணம்.

23.ஜய கைலாஸ நிவாஸ ப்ரமத

கணாதீச பூஸுரார்சித போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! கைலாஸத்தில் வசிப்பவரே!ப்ரமத கணங்களுக்குத் தலைவரே!பூஸுரர்கள் பூஜிக்கும் ப்ரபோ!உமது திருவடிகளே எனக்கு சரணம்.

24.ஜணுதக ஜங்கிணு ஜணுதத்கிட தக

சப்தைர்நடஸி மஹாநட போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஜணுதக ஜங்கிணு ஜணுதத்கிட தக என்ற ஒளியுடன் நடனம் புரியும் மஹா நடேச்வர!ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

25.ஜ்ஞானம் விக்ஷேபாவ்ருதிரஹிதம்

குரு மே குருஸ்த்வமேவ விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேவிபோ!ஜ்ஞானம் முழுதும் விளங்க அஜ்ஞான திரையை நீக்குவீராக! எனக்கு நீரே குரு. உமக்கு திருவடிகளே எனக்குப் புகலிடம்.

26.டங்காரஸ்தவ தனுஷோ தலயதி

ஹ்ருதயம் த்விஷாமசனி ரிவ போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! உமது வில்லின் 'டங்'என்ற ஒலிபகைவர்களின் ஹ்ருதயத்தைபிளக்கிறது. அது வஜ்ராயுதம் போன்றது. நும் திருவடிகளே சரணம்.

27.டாக்ருதிரிவ தவ தவ மாயா பஹி

ரந்த:சூன்ய ரூபிணீ கலு போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது மாயை 'டா'என்ற எழுத்தின் வடிவிலானது. அதுவெளியும், உள்ளும் வெற்றிடம் கொண்டது. உமது திருவடிகளே எனக்கு சரணம்.

28.டம்பரமம்புருஹாமபி தலயதி

அநகம் த்வத் அங்க்ரியுகலம் போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! பாபமற்ற உமது திருவடிகள், தாமரைகளின் அழகையும் உடைத்தெறிகிறது. அவ்வரிய நும் திருவடிகளே எனக்கு சரணம்.

29.டக்கா க்ஷஸ¨த்ரசூல த்ருஹிண

கரோடீ ஸமுல்லஸத்கர போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உம்கையில் உடுக்கை, ஜபமாலை, சூலம், ஈட்டி, மண்டையோடு முதலிய விளங்குகின்றனவே. உமது திருவடிகள் எனக்கு சரணம்.

30.ணாகாரகர்பிணீ சேத் சுபதா

தே சரகதிர்ந்ருணாமிஹ போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

'ணா'என்ற ஒலியெழுப்பும் உமது பாண வீச்சு மனிதர்களுக்கு சுபத்தைக் கொடுப்பது, ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

31.தவ மன்வதிஸஞ்ஜபத:ஸத்ய:

தரதி நரோ U பவாப்திம் போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது மூலமந்த்ரத்தை வெகுவாக மனிதன் ஸம்ஸாரக்கடலைகடக்கிறான். உமது திருவடிகள் எனக்கு புகலிடம்.

32.தூத்காரஸ்தஸ்ய முகே பூயாத்

தே நாம நாஸ்தி யஸ்ய விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது நாமாக்களை வாய் விட்டு உச்சரிக்காதவன் அவமானப்படுவானே. ஹேவிபோ! ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

33.தயனீயஸ்ச தயாலு:கோsஸ்தி

மதன்ய ஸ்த்வதன்ய இஹ வத போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! நானின்றி இரக்கம் காட்டத்தக்கவன் வேறேவருமில்லை. இரக்கம் கொள்பவரும் நீரன்றி வேறெவருமில்லை. உமது திருவடிகள்தான் எனக்கு புகலிடம்.

34.தர்மஸ்தாபனதக்ஷ த்ர்யக்ஷ குரோ

தக்ஷ யஜ்ஞ சிக்ஷக போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! தர்மத்தை நிலைநிருத்தும் திறன் மிக்கவரே!முக்கண்ணரே!குருவே!தக்ஷயாகத்தை கண்டவரே!உமது திருவடி எனக்கு சரணம்.

35.நநு தாடிதோsஸி தனுஷா லுப்த

தியா த்வம் புரா நரேண விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! நீர் முன்னொரு சமயம் வேடன் என்ற எண்ணத்தால் ஒரு மனிதரால் வில்லினால் அடிக்கப்பட்டவரே!ஹேவிபோ! உமது திருவடிகளே எனக்கு சரணம்.

36.பரிமாதும் தவ மூர்த்திம் நாலமஜ-

ஸ்தஸ் பாராத் பரோsஸிவிபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேவிபோ!உமது மூர்த்தியை கண்டறிய பிரம்ம தேவனே முயன்றும் முடியவில்லை. ஆகவே, உயர்ந்தவரிலும் உயர்ந்தவராயுள்ளீர். உமது திருவடிகளே சரணம்.

37.பலமிஹ ந்ருதயா ஜனுஷஸ்த்வத்-

பதஸேவா ஸநாதனேச விபோ

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேபழமைக்கும் பழமையானவரே விபோ!மனிதராய் பிறப்பதற்கு உமது திருவடிஸேவை தான் பயன். உமது திருவடிகளே எனக்கு சரணம்.

38.பல மாரோக்ய மாயு:ஸ்த்வத்குண-

ருசிதாம் சிரம் ப்ரதேஹி விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேஸாம்ப!விபோ!பலம், ஆரோக்யம், ஆயுள், உமது குணங்களில் பற்று ஆகியவற்றை வெகுகாலம் தந்தருள்வீராக!உமது திருவடிகள் தான் எனக்கு சரணம்.

39.பகவன் பர்க பயாபஹ பூத

பதே பூதிபூஷிதாங்க விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேபகவான்!பர்க!பயத்தைப் போக்குபவரே!பூதங்களின் தலைவரே!விபூதிவிளங்கும் மேனியரே!விபோ!ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

40.மஹிமா தவ நமஸ்காரம் U மாதி ஸ்ரீருதிஷ§

ஹிமானீதராத்மஜா தவ விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேமலையரசன் மகள் மணாளனே! விபோ! உமது பெருமை வேதங்களின் அடங்கவில்லையே!எத்தனையோ பேசப்பட்டும். ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம்.

41.யம நியமாதிபி ரங்கை:யமினோ

ஹ்ருதயே பஜந்தி ஸ த்வம் போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! முனிவர்கள் யமம் நியமம் முதலிய எட்டு அங்கங்களுடன் உம்மை ஹ்ருதயத்தில் தியானித்து ஸேவிக்கிறார்கள். உமது திருவடி எனக்கு சரணம்.

42.ரஜ்ஜாவஹிரிவ சுக்தௌ ரஜத

மிவ த்வயி ஜகந்தி பாந்தி விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! கயிற்றில் பாம்பு தோற்றம் போலும், சிப்பியில் வெள்ளித் தோற்றம் போலும் உம்மிடம் உலக மெல்லாம் தோற்றமளிக்கின்றன. உமது திருவடி எனக்கு சரணம்.

43.லப்த்வா பவத்ப்ரஸாதாத் சக்ரம்

விது ரவதி லோகமகிலம் போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேஸாம்ப!ஸதாசிவ!உமது இருளைப்பெற்று ஸ்தானத்தையும் பெற்று சந்திரன் (விஷ்ணு) உலகமனைத்தையும் காக்கிறார். உமது திருவடிகள் என்னை சரணளித்து காக்க வேணும்.

44.வஸுதா-தத்தர-தத்சய-ரத-

மௌர்வீ-சர பராக்ருதாஸுர போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேஸாம்ப!ஸதாசிவ!பூமியையும், அதைதரிக்கும் ஆதிசேஷனையும், அதில் உறங்கும் விஷ்ணுவையும் முறையே தேராகவும் ஞாண கயிறாகவும், பாணமாகவும் பெற்று அசுரர்களையழித்த ஸாம்ப! ஸதாசிவ! சம்போ சங்கர! உமது திருவடி எனக்கு சரணம். விபோ!உமது திருவடிகளே சரணம்.

45.சர்வ தேவ ஸர்வோத்தம ஸர்வத

துர்வ்ருத்த கர்வ ஹரண விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேசர்வ!எல்லோரிடத்திலும் உத்தம தேவரே!வேண்டியவை எல்லாம் கொடுப்பவரே!தீயதையெல்லாம் போக்குபவரே!விபோ!ஸாம்ப, ஸதாசிவ, சம்போ சங்கர!எனக்கு உமது திருவடிகளே சரணம்.

46.ஷட்ரிபு-ஷடூர்மி-ஷட்விகாரஹர

ஸன்முக ஷண்முக ஜனகவிபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

காமக்ரோதாதி ஆறு பகைவரையும், ஆறு நோய்களையும், ஆறுபாவவிகாரங்களையும் நீக்குபவரே!நல்ல முகமுடையவரே! ஷண்முகரின் தந்தையே!விபோ!ஸாம்ப!ஸதாசிவ!சம்போ!சங்கர!உமதுபாதங்களே சரணம்.

47.ஸத்யம் ஜ்ஞான மனந்தம் ப்ரஹ்மே

த்யேதத் லக்ஷண லக்ஷித போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹே ஸாம்ப! ஸதாசிவ! ஸத்யம், ஜ்ஞானம், அனந்தம், ப்ரஹ்ம என்று இலக்கணங்கொண்டு குறிக்கப்படுபவரே!உமது திருவடி எனக்கு சரணம்.

48.ஹாஹா ஹ¨ஹ¨ முகஸீரகாயக-

கீதாபதான பத்ய விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹாஹாஹ¨ஹ¨முதலிய தேவலோகப் பாடகர்கள் பாடிய சீர்பாடல் கொண்டவரே! விபோ!ஸாம்ப! ஸதாசிவ!சம்போ!சங்கர!உமது திருவடிகளே சரணம்.

49.ளாதிர்நஹி ப்ரயோக ஸ்ததந்த-

மிஹ மங்களம் ஸதாஸ்து விபோ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

'ள'வில் தொடங்கும் பதம் ப்ரயோகத்தில் இல்லையாதலால் 'ள'வில் முடியும் மங்களம் எப்பொழுதும் ஸம்பவிக்கட்டும். ஹேஸாம்ப!உமது திருவடிகளே சரணம்.

50.க்ஷணமிவ திவஸான் நேஷ்யதி த்வத்பத-

ஸேவா க்ஷணோத்ஸுக:சிவ போ !

ஸாம்ப ஸதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம் !!

ஹேஸாம்ப!ஸதாசிவ!உமது திருவடி ஸேவையாகிய உத்ஸவத்தில் உவகை கொண்டவன் பலநாட்களை ஒரு நொடியாகக்கழித்துவிடுவான். உமது திருவடிகளே சரணம்.

ஸுவர்ணமாலாஸ்துதி முற்றிற்று.