விஷ்ணு புஜங்கப்ரயாதஸ்தோத்ரம் 1 சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம் நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மி குணாதீத மவ்யக்த மேகம் துரீயம் பரம் ப்ரஹ்ம் ய

விஷ்ணு புஜங்கப்ரயாதஸ்தோத்ரம்

1.சிதம்சம் விபும் நிரமலம் நிர்விகல்பம்

நிரீஹம் நிராகார மோங்காரகம்யம்மி

குணாதீத மவ்யக்த மேகம் துரீயம்

பரம் ப்ரஹ்ம் யம் வேத தஸ்மை நமஸ்தே II

"சித்"ஸ்ரூபியாய் எங்கும் நிறைந்து மாசற்ற நிலையில், விகல்பம், விருப்பம், வடிவம் இவையற்றதாய் ஒங்காரப் பொருளாய் இருப்பதும், குணங்களுக்கப்பால் அவ்யக்தமாய் ஒன்றாய் துரீய நிலை கொண்டு விளங்கும் பரம் பொருளை நமஸ்கரிக்கிறேன்.

2.விசுத்தம் சிவம் சாந்த மாத்யந்த சூன்யம்

ஜகஜ்ஜீவநம் ஜ்யோதி ரானந்த ரூபம்மி

அதிக்தேச கால வ்யவச்சேத நீயம்

த்ரயீ வக்தி யம் வேத தஸ்மை நமஸ்தே II

தூய சிவமாய், ஆதியந்தமில்லாத சாந்தமேயுருவாய், உலகை உய்விக்கும் ஜ்யோதியாய், ஆனந்த ரூபியாய், தேசம், காலம் இவற்றால் பகுந்து அறிய முடியாதவராய் வேதம் கூறியபடி இருக்கும் எம்பெருமானுக்கு நமஸ்காரம்.

3.மஹாயோக பீடே பரிப்ராஜமாதே

தரண்யாதி தத்வாத்மகே சக்தியுக்தே I

குணாஹரஸ்கரே வஹ்நிபிம்பார்த்தமத்யே

ஸமாஸீன மோங்கர்ணிகேஷிஷ்டாக்ஷராப்ஜே II

பூ:, பவ:ஸுரேவதி த்வங்களாலானதும், சக்தி கொண்டதும், குணமாகிய சூர்யன் விளங்குவதும், அக்னி பிம்பத்தின் நடுப்பகுதியில், ப்ரணவமாகிய கர்ணிகையும், அஷ்டாக்ஷரமாகிய எட்டு இதழ்கள் கொண்ட தாமரையும் உள்ள மஹாயோக பீடத்தில் அமர்ந்திருப்பவருமான பரமனுக்கு நமஸ்காரம்.

4.ஸமாநோதிதாநேக ஸ¨ர்யேந்து கோடி-

ப்ரபாபூர துல்யத்யுதிம் துர்நிரீக்ஷம்மி

ந சீதம் நசோஷ்ணம் ஸுவர்ணாவதாத-

ப்ரஸன்னம் ஸதாநந்த ஸம்வித்ஸ்வரூபம் II

ஒரே ஸமயத்தில் உதித்த பல சூர்ய சந்திரர்களின் ஒளிக்கற்றை யத்த ஒளியை உடையவராதலால் கண்ணால் காணமுடியாதவராயும், குளிர்ச்சியும், சூடும் இல்லாதவராய் தங்கநிறமாய், எப்பொழுதும் ஆனந்த-பேரறிவு வடிவினராய் விளங்கும் பரமனுக்கு நமஸ்காரம்.

5.ஸுநாஸாபுடம் ஸுந்தரப்ரூலலாடம்

கிரீடோசிதாகுஞ்சிதஸ்நிக்த கேசம் I

ஸ்புரத் புண்டரீகாபி ராமாயதாக்ஷம்

ஸமுத்புல்ல ரத்னப்ரஸ¨நாவதம்ஸம் II

அழகிய மூக்கு, புருவம், நெற்றி இவைகளைக் கொண்டவரும், கிரீடத்திற்கு ஏற்றவாறு சற்று வளைந்த மினுமினுப்பானகேசம் கொண்டவரும், மலர்ந்தவெண்தாமரை போன்று அழகிய நீண்ட கண்களும், பளபளக்கும் ரத்ன மிழைத்த ஆபரணங்களும் உடையவரான, பரமனுக்கு நமஸ்காரம்.

6.லஸத் குண்டலாம்ருஷ்ட கண்டஸ்தலாந்தம்

ஜபாராக சோராதரம் சாருஹாஸம் I

அலிவ்யாகுலா மோதி மந்தாரமாலம்

மஹோர:ஸ்புரத் கௌஸ்து போதாரஹாரம் II

ஒளிரும் குண்டலங்கள் உராயும் கன்னங்களையுடையவரும், செம்பருத்திப்பூ நிறத்தை கொண்ட உதடும் அழகிய புன்முறுவலும், வண்டினங்கள் மொய்க்கும் மந்தாரமாலையும், பரந்த மார்பில் மின்னும் கௌஸ்துபமும், கொண்டை மாலையும் கொண்டவருமான அந்த பரமனுக்கு நமஸ்காரம்.

7.ஸுரத்னாங்கதை ரன்விதம் பாஹ§தண்டை :

சதுர்பிஸ்சலத் கங்கணாலங்க்ருதாக்ரை:மி

உதாரோதராலங்க்ருதம் பீதவஸ்த்ரம்

பதத்வந்த்வ நிர்தூத பத்மாபிராமம் II

ரதனமயமானதோள் வளைகளும், குலுங்கும் கங்கணங்களும் சேர்ந்து அழகுறச்செய்த நான்கு கைகளும், பாங்கான உதரமும், இடையில் பட்டுபீதாம்பரமும், தாமரையைப் பழிக்கும் கால்களுமாக விளங்கிய அந்த பரமனுக்கு நமஸ்காரம்.

8.ஸ்வபக்தேஷ§ஸந்தர்சிதாகாரமேவம்

ஸதா பாவயன் ஸந்நிருத்தேந்திரியாச்வ: I

துராபம் நரோ யாதி ஸம்ஸாரபாரம்

பரஸ்மை பரேப்யோஷிபி தஸ்மை நமஸ்தேமிமி

தனது பக்தர்களுக்கு இவ்வாறு காட்சி தரும் அப்பெருமானை, புறக்காரணங்களாகிய குதிரையை அடக்கி தியானம் செய்யும் மனிதர் எவரும் எட்டாத ஸம்ஸார எல்லையைக் கடந்து விடுவர். அத்தகைய பரம் பொருளுக்கு நமஸ்காரம்.

9.சரீரம் கலத்ரம் ஸுதம் பந்து வர்கம்

வயஸ்யம் தனம் ஸத்ம ப்ருத்யம் புவம் ச I

ஸமஸ்தம் பரித்யஜ்ய ஹா கஷ்டமேகோ

கமிஷ்யாமி து:கேந தூரம் கிலாஹம் II

உடலையும், மனைவி, மகன், உறவினர், நண்பன், சொத்து, வீடு, வேலையாள், இன்னும் இந்த மண்ணுலகம் அனைத்தையும் விட்டுவிட்டு வெகு தூரம் நான் தனியாகச் சொல்லப்போகிறேனே!கஷ்டம் இது.

11.ஜரேயம் பிசாசீவ ஹா ஜீவதோ மே

வஸா மத்தி ரக்தம் ச மாம்ஸம் பலம் ச I

அஹோ தேவ ஸீதாமி தீனானுகம்பின்

கிமத்யாபி ஹந்த த்வயோதாஸிதவ்யம் II

பெண்பிசாசு போன்றிருக்கிற இந்தமுதுமை, பிழைத்திருக்கும்போதே என் கொழுப்பையும், ரத்தத்தையும், மாம்ஸத்தையும், பலத்தையும் தின்றுவிடுகிறதே. நான் அல்லல் படுகிறேன். ஹே எளியவரை நேசிக்கும் கடவுளே. நான் இன்னுமா வாளா விருக்க வேண்டும்.

12.கபவ்யாஹதோஷ்ணோல்பணச்வாஸ வேக

வ்யதா விஸ்புரத்ஸர்வ மர்மாஸ்தி பந்தாம் I

விசிந்த்யா ஹமந்த்யா மஸங்க்யா மவஸ்தாம்

பிபேமி ப்ரபோ கிம் கரோமி ப்ரஸீதா II

கபத்தினால் கடைபடும் சூடான மூச்சுத்திணறல் வெடித்துவிடும் போலுள்ள எனது மர்மஸ்தான எலும்புகள். இத்தகைய கடைசீ கால அவஸ்தையை நினைத்து நன் பெரிதும் அச்சப்படுகிறேனே! என்ன செய்வேன். ஹே ப்ரபோ! கருணை புரிய வேண்டும்.

13.லபன் அச்யுதானந்த கோவிந்த விஷ்ணோ

முராரே ஹரே நாத நாராயணேதி I

யதாஷினு ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்தம்

ததா மே தயாசீல தேவ ப்ரஸீ II

நான் உமது நாமாக்களை-அச்யுத, அனந்த, கோவிந்த விஷ்ணோ, முராரே, ஹரே, நாத, நாராயண - என்றவாறு ஜபித்துக்கொண்டு பக்தியுடன் உம்மை நினைக்குமளவுக்கு என்னை கடாக்ஷித்து அருளவேணும். நீர் தயாபரரல்லவா?

14.புஜங்கப்ரயாதம் படேத்யஸ்து பக்த்யா

ஸமாதாய சித்தே பவந்தம் முராரே I

மோஹம் விஹாயாசு யுஷ்மத்ப்ரஸாதாத்

ஸமாச்ரித்ய யோகம் வ்ரஜத்யச்யுதம் த்வாம் II

ஹேமுராரே!உம்மை மனதில் தியானித்து இந்த புஜங்கப்ரயாதஸ் தோத்திரத்தைப் படிப்பவர், தங்களது பேரருளால் மோஹம் நீங்கப் பெற்று, யோகத்தை கைக்கொண்டு அச்யுதனான உம்மையடைவர்.

விஷ்ணு புஜங்கப்ரயாதஸ்தோத்ரம் முற்றிற்று.