மோஹமுத்கரம் (பஜகோவிந்தம்) 1 பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் முடமதே I ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே II ஏ மூடமதியே!விய

மோஹமுத்கரம் (பஜகோவிந்தம்)

1. பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

பஜகோவிந்தம் முடமதே I

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே II

ஏ மூடமதியே!வியாகரணம் படித்தது. உனக்குத் தேவையான அத்தகைய நேரத்தில் உபயோகப்படாது. ஆகவே இப்பொழுதே கோவிந்தனைத் சேவி. கோவிந்தனை சேவி.

2. மூட!ஜஹீஹி தனாகமத்ருஷ்ணாம்

குரு ஸத்புத்திம் மநஸி வித்ருஷ்ணாம் I

யத் லபஸே நிஜகர்மோபாத்தம்

வித்தம் தேந விநோதய சித்தம் II

மூடனே!பணவருவாயில் ஆசையை ஒழித்து நல்ல புத்தியுடன் ஆசையின்மையை வளர்த்துக்கொள். உன்தொழில் மூலம் வரும் பணத்தைக் கொண்டு மானதை உல்லாசப்படுத்திக்கொள்.

3. நாரீஸ்தனபர நாபீதேசம்

த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் I

ஏதத்-மாம்ஸவஸாதிவிகாசம்

மனஸி விசிந்தய வாரம் வாரம் II

மங்கையின் கவர்சியைக் கண்டு மயங்காதே அதெல்லாம் மாம்ஸம். கொழுப்பு ஆகியவற்றின் மாற்றுதான். இதை மனதில் அடிக்கடி நினைவில் கொள்.

4. நளினீ தலத ஜலமதிதரலம்

தத்வத் ஜீவிதமதி சய சபலம் I

வித்தி வ்யோத்யபிமானக்ரஸ்தம்

லோகம் சோக ஹதம் ச ஸமஸ்தம் II

தாமரையில் தண்ணீர் சலிப்பது போலவே இந்த உலக வாழ்க்கையும் மிகவும் சபலமானது. உலகத்தார் அனைவருமே வ்யாதியினாலோ, தற்பெருமையினாலோ துன்பப் படுவதை மனதிற்கொள்.

5. யாவத் வித்தோபார் ஜனஸக்த :

தாவத் - நிஜபரிவாரோ ரக்த: I

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜரதேஹே

வார்தாம் கோsபி நப்ருச்சதி கேஹே II

ஒருவன் பணம் ஸம்பாதிக்கும் வரைதான் அவனது உற்றர், உறவினர் அன்பு பாராட்டுவர். பிறகு சுண்டிய உடலுடன் வாழும்பொழுது ஒருவர் கூட சௌக்கியச் செய்தி கேட்கமாட்டார்கள்.

6. யாவத் பவநோ நிவஸதிதேஹே

தாவத் ப்ருச்சதி குசலம் தேஹே I

கதவதி வாயௌ தேஹாபாயே

பார்யா பிப்யதி தஸ்மின்காயே II

உடலில் பிராண வாயு இருக்குமளவுதான் வீட்டில் உள்ளோர் சௌக்கியம் விசாரிப்பார்கள். இந்த பிராண வாயு நீங்கி உடல் விழுந்து விட்டால் அந்த உடலைக்கண்டு மனைவியே பயப்படுகிறாள்.

7. பாலஸ்தாவத்க்ரீடாஸக்த:

தருணாஸ் தாவத் தருணீஸக்த: I

வ்ருத்தஸ்தாவத் சித்தாஸக்த:

பரே ப்ரஹ்மணி கோsபி நஸக்த: II

சிறுவன் விளையாட்டில் ஈடுபடுகிறான். வாலிப இளமங்கையை நாடுகிறான். கிழவர் கவலையில் தோய்கிறார். ஆனால் பரப்ஹ்மத்தில் ஒருவர் கூட ஈடுபடுவதில்லையே!

8. காதே காந்தா கஸ்தே புத்ர:

ஸம்ஸாரோsய மதீவ விசித்ர: I

கஸ்ய த்வம் க:குத ஆயாத:

தத்வம் சிந்சய யதிதம் ப்ராத: II

உனது மனைவி என்பவள் யார்?உனது மகன்தான் யார்?இந்த உலகியல் மிக விந்தையானது. c யாருக்கு உடைமையானவன்?நீ யார்?எங்கிருந்து வந்தாய்?இது மாதிரியான உண்மை நிலையை சற்று ஆராய்ந்து பாரேன்!

9. ஸத்ஸங்கத்வே நி:ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் I

நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்

நிஸ்சலிதத்வே ஜீவன் முக்தி : II

நல்லோரி இணக்கம் இருந்தால் உலக விஷயங்களில் பற்று இருக்காது. அவ்வாறு இருந்தால் மோஹமும் இராது. மோஹம் இல்லையேல் உறுதியான தத்வம் மேலிடும். அவ்வாறு உறுதியான கட்டுப்பாடு இருந்தால் ஜீவன் முக்தி கிடைக்கும்.

10. வயஸி கதே க:காமவிகார :

சுஷ்கே நீரே க:காஸார: I

க்ஷீணே வித்தே க:பரிவார:

ஜ்நாதே தத்வே க:ஸம்ஸார :II

வயது தாண்டிய பிறகு காமவிகாரமும், நீர் வற்றிய பிறகு குளமும், செல்வம் (பணம்) குறைந்து பிறகு குடும்ப வாழ்க்கையும், தத்வஜ்யானம் வந்த பிறகு உலக வாழ்க்கையும் இருக்க முடியாதே !

11. மா குரு தனஜன யௌவனகர்வம்

ஹரதி நிமேஷாத் கால:ஸர்வம் I

மாயா மய மித மகிலம் ஹித்வா

ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா II

பணம், உற்றார் உறவினர், வாலிப பருவம் இவற்றை வைத்து கர்வப்படாதே!இதெல்லாவற்றையும் காலம் ஒரே நொடியில் இல்லாமல் ஆக்கி விடும். பொய்யான இதெல்லாவற்றையும் விட்டு, நல்லறிவு பெற்று ப்ரம்மபதம் அடைவாயாக.

12. தினயாமிந்யௌஸாயம் ப்ராத :

சிசிரவஸந்தௌ புனராயாத: I

கால:க்ரீடதி கச்சத்யாயு :

ததபி ந முஞ்சதி ஆசாவாயு : II

பகலும் இரவும், மாலையும் காலையும், பின் பனிக்காலம் வஸந்த காலம் இப்படி காலம் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். காலம் விளையாட ஆயுளும் கழிந்து போகும். எனினும் ஆசைக்காற்று விடுவதாயில்லையே!

13. கா தே காந்தா தனகதசிந்தா

வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா I

த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதி ரேகா

பவதி பவார்ணவதரணே நௌகா II

மனைவி, பணம் இவற்றில் உனக்கு ஏன் இவ்வளவு ஆசை?பேராசைக்காரனே!உன்னை திருத்துவோரில்லையா?இந்த உலகில் நல்லோரைக் கூடி இருத்தல் ஒன்றுதான் ஸம்ஸாரக்கடலைக் கடக்க படகாக அமையும். தெரிந்து கொள்.

14. ஜடிலோ முண்டீலுஞ்சித கேச:

காஷாயாம்பர பகுக்ருத வேஷ:

பச்ய ந்நபி ச ந பச்யதி மூட:

ஹ்யுதர நிமித்தம் பகுக்ருதவேஷ: II

ஜடை தரித்தும், மொட்டை போட்டும் கேசத்தைப் பிடுங்கிக் களைத்தும், காவித்துணியை யுடுத்தியும் இவ்வாறு பல படியாகவே வேஷமிட்டுக்கொண்டு தெரிந்தும் தெரியாத மூடனாய் வயிற்றுக்காகப் பல மாற்றம் கொள்கிறானே!

15. அங்கம் கலிதம் பலிதம் முண்டம்

தசன விஹீநம் ஜாதம் துண்டம் I

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்

ததபி ந முஞ்சத்யாசா பிண்டம் II

உடல் தளர்ந்து, தலை நரைத்து, வாயில் பல் விழுந்துபோய் கிழவனாக கையில் கம்பு பிடித்து தானே தள்ளாடி நடக்கிறான். இருந்தாலும் ஆசைப்பிடி அவனை விடவில்லையே!

16. அக்ரேவஹ்நி:ப்ருஷ்டே பானு:

ராத்ரௌ சுபுகஸமர்பிதஜானு: I

கரதல பிக்ஷஸ்தருதல வாஸ:

ததபி ந முஞ்சத்யாசாபாச: II

தன் முன்னே தீயும், பின்புறம் சூர்யனும் எரிக்கிறார்கள். இரவில் முழங்காலை தாடையோடு இணைத்துப் படுக்கிறான். பாத்ரம் கூட இல்லாமல் கையிலேயே பிச்சைப் பெறுகிறான். மரத்தினடியில் தான் தங்குகிறான் எனினும் அவனை ஆசாபாசம் விடுவதில்லையே!

17. குருதே கங்காஸாகர கமநம்

வ்ரதபரிபாலன மதவா தானம் I

ஜ்ஞானவிஹீந:ஸர்வமதே ந

முக்திம் ந பஜதி ஜன்மசதேந II

கங்கை, கடல் என்று தீர்த்தாடனம் செய்கிறான். வ்ரதம், தானம் இவற்றையும்கூட செய்கிறான். ஆனால், எந்த மதத்திலும் ஆழ்ந்து அறிவில்லாதவன் அவன் நூறு பிறவி எடுத்தும் முக்திப் பேறை அடைவதில்லை.

18. ஸுரமந்திர தருமூலநிவாஸ:

சய்யா பூதலமஜினம் வாஸ: I

ஸர்வபரிக்ரஹ போக த்யாக:

கஸ்ய ஸுகம் நகரோதி விராக: II

தேவர் கோயில் மரத்தடியில் தங்கி, தரையில் படுத்து, மான் தோல் முதலியவற்றையே உடுத்தி, எல்லா அன்பளிப்பையும், சுகானுபவத்தையும் விட்டொழித்து வைராக்கியத்துடனிருப்பது அனைவருக்குமே சுகம்தானே!

19. யோக ரதோ வா போகரதோ வா

ஸங்கரதோ வா ஸங்கவிஹீந: I

யஸ்ய ப்ரஹ்ணி ரமதே சித்தம்

நந்ததி நந்ததி நந்தத்யேவ II

யோகத்தில் ஆழ்ந்தவனாயினும், சுகபோகங்களில் களித்திருப்பவனாயினும், ஸத்ஸங்கம் கொண்டவனாயினும், ஸத்ஸங்கமில்லதவனாயினும் எவன் மனம் பரம்பொருளில் களிப்படைகிறதோ அவனே மகிழ்வான் அவனே மகிழ்வான் மகிழ்ந்தே இருப்பான்.

20. பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்காஜல லவ கணிகா பீதா I

ஸக்ருதபியேந முராரி ஸமர்சா

க்ரியதே தஸ்ய யமேன நசர்சா II

கொஞ்சமேனும் பகவத்கீதை படித்திருந்தாலும், சொட்டு கங்கா ஜலம் குடித்திருந்தாலும், ஒரே தடவை நாராயணனை பூஜித்திருந்தாலும் போதும் அவன் விஷயத்தில் யமன் தீவிர சோதனை செய்வதில்லை.

21. புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீஜடரே சயனம் I

இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே

க்ருபயாsபாரே பாஹி முராரே II

பின்னும் பின்னும் பிறப்பும் இறப்பும் உண்டாகிறது. தாயின் வயிற்றில் பல தடவை படுத்து இந்த கடக்க முடியாத உலக வாழ்க்கையில் அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா கண்ணா?

22. ரத்யா கர்பட விரசித கந்த :

புண்யாபுண்ய விவர்ஜித பந்த: I

யோகீ யோக நியோஜித சித்த :

ரமதே பாலோன்மத்த வதேவ II

தெருவில் வீசியெறியப்பட்ட அழுக்குத் துணியை உடுத்தி, புண்யம், பாபம் ஏதுமில்லாத மார்கத்தைக் கொண்டிருந்தும், அஷ்டாங்க யோகம் வாயிலாக மனதை அடக்கிய யோகியாக இருந்தால், சிறுவன் போலவும், பைத்யம் போலவும், மனக்களிப்பை அடைந்தே விடுவான்.

23. கஸ்த்வம் கோsஹம் குத ஆயாத :

காமே ஜனனீ கோ மே தாத : I

இதி பரிபாவய ஸர்வ மஸாரம்

விச்வம் த்யக்த்வா ஸ்வப்னவிசாரம் II

c யாரோ?நான் யாரோ?எங்கிருந்து வந்தேனோ, தாய் தந்தையர் யாரோ?இன்று கனவுக்கு ஒப்பான உலகை விலக்கித் தள்ளி எதுவும் ஸாரமில்லாதது என நினைப்பாய்!

24. த்வயி மயி சாந்யத்ரைகோ விஷ்ணு:

வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: I

ஸர்வஸ்மின் அபி பச்யாத்மானம்

ஸர்வத்ரோத்ய்ருஜ பேத ஜ்யானம் II

உன்னுள்ளும் என்னுள்ளும் எங்கும் ஒரே விஷ்ணுவே உள்ளார். ஆகவே, பொறுமையின்றி என்மேல் ஏன் கோபம் கொள்ள வேண்டும். எல்லோருக்குள்ளும் ஆத்மாவை காண வேண்டும். எங்கும் எதிலும் வேற்றுமையை நீக்க வேண்டும்.

25. சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ

மா குரு யத்னம் விக்ரஹஸந்தௌ I

பவ ஸமசித்த:ஸர்வத்ர த்வம்

வாஞ்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம் II

பகைவனிடமும், நண்பனிடமும், பிள்ளையிடமும், உறவினரிடமும் பகைத்துப் பின் பரிவு கொள்ள முயற்ச்சிக்காதே. எல்லோரிடமும் நடுநிலைமை கொள்வாய். சீக்கிரம் விஷணுவாக ஆகிவிட விரும்பினால்!

26. காமம் க்ரோதம் லோபம் மோஹம்

த்யக்த்வாsத்மானம் பாவயகோsஹம் I

ஆத்மஜ்ஞான விஹீனா மூடா:

தே பச்யந்தே நரக நிகூடா: II

காமம், குரோதம், லோபம், மோஹம், இவற்றை நீக்கி நான் யார்?என்று ஆத்மாவை தேடு. ஆத்மஜ்ஞானம் இல்லாத மூடர்கள் தான் நரகத்தில் தள்ளப்பட்டு அவிக்கப்படுகிறார்கள்.

27. கேயம் கீதா நாமஸஹஸ்ரம்

த்யேயம் ஸ்ரீபதிரூபம ஜஸ்ரம் I

நேயம் ஸஜ்ஜனஸங்கே சித்தம்

தேயம் தீனஜநாய சவித்தம் II

பகவத்கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். எப்பொழுதும் ஸ்ரீபதியான நாராயணனை நினைக்க வேண்டும். ஸத்ஜனஸங்கத்தில் மனதை ஈடுபடுத்த வேண்டும். ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும்.

28. ஸுகத:க்ரியதே ராமாபோக:

பஸ்சாத் ஹந்த சரீரே ரோக: I

யத்யபி லோகே மரணம் சரணம்

ததபி ந முஞ்சதி பாபாசரணம் II

ஸுகத்தை நாடி பெண்டிரை அநுபவிக்க, பின்னர் உடல் நோய் வருத்துமே அது கஷ்டமல்லவா?உலகத்து நியதிப்படி மரணம்தான் தீர்வு எனினும், பாபம் தவிர்க்கப்படவில்லையே!

29. அர்த்த மனர்த்தம் பாவய நித்யம்

நாஸ்தி தத:ஸுகலேச:ஸத்யம் I

புத்ராதபி தனபாஜாம் dF:

ஸர்வத்ரைஷா விஹிதா gF: II

தேடும் பொருள் தீயது என நினை. அதனால் எள்ளளவும் சுகமில்லை. இது உண்மை. ஏனெனில் தனவந்தர்களுக்கு தன் மகனிடமிருந்தே அச்சம் உண்டாகிறது என்பது எங்கும் உறுதியான நடப்பு.

30. ப்ராணாயம் ப்ரத்யாஹாரம்

நித்யாநித்யவிவேக விசாரம் I

ஜாப்ய ஸமேத ஸமாதிவிதானம்

குர்வ வதானம் மஹதவதானம் II

நீண்ட நேரம் மூச்சையடக்கிவிட்டு பின் இழுத்து, இடையில் நித்ய வஸ்து அநித்ய வஸ்து ஆராய்ச்சியுடன் ஜபம் செய்வதும் ஸமாதி நிலையில் இருப்பதும் வருமுன் காக்கும் ஏற்பாடு என நினை.

31. குருசரணாம்புஜ நிர்பரபக்த:

ஸம்ஸாராத சிராத் பவமுக்த: I

ஸேந்த்ரியமானஸ நியமாதேவ

த்ரக்ஷ்யஸி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் II

குருவின் திருவடித் தாமரைகளில் கடும் ஈர்ப்பு வைத்து, விரைவில், இந்த ஸம்ஸாரச் சுழலினின்று விடுபடு. புறக்காரணங்களையும் மனதையும் அடக்கி விட்டால் ஹ்ருதயத்துக்குள் உறையும் ஈசனைக் கண்டுவிடலாம்.

மோஹமுத்கரம் முற்றுப் பெறுகிறது.