1
ரணத்க்ஷுத்ரகண்டாநிநாதாபிராமம்
சலத்தாண்தவோத்த்ண்டபத்மதாலம்
லஸத்துந்திலாங்கோபரிவ்யாலஹாரம்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
சலத்தாண்தவோத்த்ண்டபத்மதாலம்
லஸத்துந்திலாங்கோபரிவ்யாலஹாரம்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
பொருள்: பரமேச்வரனின் மைந்தன் ஸ்ரீ கணபதியை துதிக்கிறேன். அவர் அருமையான சிறு மணிமாலையில் மணி ஒலிக்கே தாண்டவம் ஆடுகிறார். தாளம் ஒத்த காலடியின் ஒலி கேட்கிறது. பளிச்சென்று, தொந்தியின் மேல் மிளிரும் கண்ணைக் கவர்கிறது
2
த்வநித்வம்ஸவீணாலயோல்லாஸிவக்த்ரம்
ஸ்புரச்சுண்டதண்டோல்லஸத்பீஜபூரம்
கலத்தர்பஸெளதந்த்யலோலாலிமாலம்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
ஸ்புரச்சுண்டதண்டோல்லஸத்பீஜபூரம்
கலத்தர்பஸெளதந்த்யலோலாலிமாலம்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
பொருள்: மற்ற ஒளி நீங்கி, வீணை ஒளியிலேயே லயித்த அழகிய முகத்துடன், மாதுளைப் பழத்தை துதிக்கையில் வைத்துக்கொண்டு, காது ஒரம் பெருகும் மதஜலத்தின் வாஸனையால் தேனீக்களைக்கவரும் அவ் ஈசன் மகனைத்துதிக்கிறேன்
3
ப்ரகாசஞ்ஜபாரக்த்தரத்நப்ரஸூந
ப்ரவாலப்ரபாதாருணஜ்யோதிரேகம்
ப்ரலம்போதரம் வக்ரதுண்டைகதந்தம்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
ப்ரவாலப்ரபாதாருணஜ்யோதிரேகம்
ப்ரலம்போதரம் வக்ரதுண்டைகதந்தம்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
பொருள்: அவர் செம்பருத்திப்பூ போன்ற சிவந்த ரத்னமாலை, பவழ மாலைகளால் காலைக்கதிரவனின் ஒளிப்பிழம்பியானவர், தொங்கிய வயிறும், வளைந்த துதிக்கையும், ஒற்றைக்கொம்பும் விளங்காநின்ற ஸ்ரீ கணேசபிரானைத் துதிக்கிறேன்
4
விசித்ரஸ்புரத்ரத்நமாலாகிரீடம்
கிரீடோல்லஸச்சந்த்ரரேகாவிபூஷம்
விபூஷைகபூஷம் பவத்வம்ஸஹேதும்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
கிரீடோல்லஸச்சந்த்ரரேகாவிபூஷம்
விபூஷைகபூஷம் பவத்வம்ஸஹேதும்
கணாதீசமீசாநஸூநும் தமீடே
பொருள்: விசித்ரமாய் ஜ்வலிக்கும் இரத்னக்கற்கள் பதித்த க்ரீடம் சூடி, அந்த க்ரீடத்தின்மேல் சந்த்ரப்பிறையும் அணிந்து, உலக அழகுக்கெல்லாம் அழகாய், உலக வாழ்க்கை அறவே தீர்க்கும் கணபதியைத் துதிக்கிறேன்
5
உதஞ்சத்புஜாவல்லரீத்ருச்யமூலோ
ச்சலத்ப்ரூலதாவிப்ரமப்ராஜதக்ஷம்
மருத்ஸுந்தரீசாமரை:,ஸேவ்யமாநம்
கணாதீச மீசாநஸூநும் தமீடே
ச்சலத்ப்ரூலதாவிப்ரமப்ராஜதக்ஷம்
மருத்ஸுந்தரீசாமரை:,ஸேவ்யமாநம்
கணாதீச மீசாநஸூநும் தமீடே
பொருள்: துதிக்கை முனைப்பாகத் தோன்றும் இடத்தில் சின்னஞ்சிறு புருவக்கொடியழகுடன் மிளிரும் கண்கள் அவருக்கு அழகைக்கூட்டுகின்றன. தேவமங்கையர் சாமரம் iC சேவிக்கிறார்கள். அவ்விநாயகரை நான் துதிக்கிறேன்
6
ஸ்புரநிஷ்டுராலோலபிங்காக்ஷிதாரம்
க்ருபாகோமலோதாரலீலாவதாரம்
கலாபிந்துகம் கீதயே யோகிவர்யை-
ர்கணாதீசமீசாநஸூநும் தமீடே
க்ருபாகோமலோதாரலீலாவதாரம்
கலாபிந்துகம் கீதயே யோகிவர்யை-
ர்கணாதீசமீசாநஸூநும் தமீடே
பொருள்: சற்று கடுமையாத் தோன்ற அசைவும் செவ்வரிக் கண்கள், கருணைக் கசிவுடன் தானே ஏற, ஏற்றமிகு தோற்றம், யோகிகள் மனளவில் இசைக்கும் கலை, பிந்து இவற்றினிடையில் காட்சி ஆகியவற்றுடன் விளங்கும் ஸ்ரீ கணேசனைத் துதிக்கிறேன்
7
யமேகாக்ஷரம் நிர்மலம் நிர்விகல்பம்
குணாதீதமாநந்தமாகாரசூந்யம்
பரம் பாரமோங்காரமாம்நாயகர்பம்
வதந்தி ப்ரகல்பம் புராணம் தமீடே
குணாதீதமாநந்தமாகாரசூந்யம்
பரம் பாரமோங்காரமாம்நாயகர்பம்
வதந்தி ப்ரகல்பம் புராணம் தமீடே
பொருள்: ஒரெழுத்துக்குறியவராய், மாசற்றவராய், மருட்கையில்லாதவராய், வடிவங்கொள்ளாத ஆனந்தமாய், வேத விழுப்பொருள் ஒங்காரமாய் எவரை சான்றோர் கூறுகிறார்களோ அந்த பழம் பெரும் பெருமானைத் துதிக்கிறேன்
8
சிதநந்தஸாந்த்ராய சாந்தாய துப்யம்
நமோ விச்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்யம்
நமோsநந்தலீலாய கைல்யபாஸே
நமோ விச்வபீஜ ப்ரஸீதேசஸூநோ
நமோ விச்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்யம்
நமோsநந்தலீலாய கைல்யபாஸே
நமோ விச்வபீஜ ப்ரஸீதேசஸூநோ
பொருள்: சாந்தமான சிதானந்தப் பெருக்கான உமக்கு நமஸ்காரம், உலகைத்தைத் தோற்றுவித்தல், மறையச் செய்தல் போன்ற லீலைகள் பல செய்யும் உமக்கு நமஸ்காரம். நீரே கைவல்யம். நீரே உலக முதல்வர். தாங்கள் அருள்வீராக
9
இமம் ஸுஸ்தவம் ப்ராதருத்தாய ப்கத்யா
படேத்யஸ்து மர்த்யோ லபேத்ஸர்வகாமாந்
கணேசப்ரஸாதேந ஸித்யந்தி வாசோ
கணேசே விபௌ துர்லபம் கிம் ப்ரஸந்நே
படேத்யஸ்து மர்த்யோ லபேத்ஸர்வகாமாந்
கணேசப்ரஸாதேந ஸித்யந்தி வாசோ
கணேசே விபௌ துர்லபம் கிம் ப்ரஸந்நே
பொருள்: காலையில் எழுந்தவுடன் இந்த அறிய ஸ்தியைப் படிப்பவர் எல்லோரும் எல்லாவிருப்பமும் கைகூடப் பெறுவர். கணேசனின் அருளால் பேச்சுவன்மை பெருகும். அவர் மகிழ்ந்துவிட்டால் அடைய முடியாதது ஏது?