1
ஸெளராஷ்ட்ர தேசே வஸுதாவகாசே
ஜ்யோதிர்மயம் சந்த்ரகலாவதம்ஸம்!
பக்திப்ரதானாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே !!
ஜ்யோதிர்மயம் சந்த்ரகலாவதம்ஸம்!
பக்திப்ரதானாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே !!
பொருள்: பூமியின் துண்டுபரப்பான ஸெளராஷ்டிரத்தில் மக்களுக்கு பக்தியை தோற்றுவிக்க ஜ்யோதிரூபமாய் தோன்றி சந்திரக்கலையுடன் விளங்கும் அந்த சோமநாதரை சரணடைகிறேன்
2
ஸ்ரீசைவச்ருங்கே விவிதப்ரஸங்கே
சேஷாத்ரிச்ருங்கேsபி ஸதா வஸந்தம் !
தமர்ஜுனம் மல்லிகபூர்வ மேநம்
நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும் !!
சேஷாத்ரிச்ருங்கேsபி ஸதா வஸந்தம் !
தமர்ஜுனம் மல்லிகபூர்வ மேநம்
நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும் !!
பொருள்: பற்பல தொடர்களைக் கொண்ட ஸ்ரீசைலம், அல்லது சேஷமலையின் உச்சியில் எப்பொழுதும் குடி கொண்ட, ஸம்ஸாரக்கடலைக் கடக்கப்பாலமாக அமைந்த அந்த ஸ்ரீமல்லிகார்ஜுனலிங்கத்தை நமஸ்கரிக்கிறேன்
3
அவந்திகாயாம் விஹிதாவதாரம்
முக்திப்ரதானாய ச ஸஜ்ஜநானாம் !
அகாலம்ருத்யோ:பரிரக்ஷணார்த்ம்
வந்தே மஹாகால மஹம் ஸுரேசம்!!
முக்திப்ரதானாய ச ஸஜ்ஜநானாம் !
அகாலம்ருத்யோ:பரிரக்ஷணார்த்ம்
வந்தே மஹாகால மஹம் ஸுரேசம்!!
பொருள்: ஸத் ஜனங்களை கடைத்தேற வைக்க அவந்திநாட்டில் தோன்றிய மஹாகால லிங்கத்தை, அகால மரணத்தைப் போக்க வேண்டி நமஸ்கரிக்கிறேன்
4
காவேரிகா நர்மதயோ:பவித்ரே
ஸமாகமே ஸத்ஜனதாரணாய !
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஒங்காரமீசம் சிவமேகமீடே !!
ஸமாகமே ஸத்ஜனதாரணாய !
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஒங்காரமீசம் சிவமேகமீடே !!
பொருள்: காவேரி, நர்மதை ஆகிய நதிகளின் புண்யமான கூடல் க்ஷேத்திரத்தில், ஸத்ஜனங்களைத் கடைத்தேருவிக்க, எப்பொழுது மாந்தாத்ருபுரம் என்ற ஒங்காரேச்வர் என்ற இடத்தில் விளங்கிவரும் ஒங்கார - ஈச்வர லிங்கத்தை ஸ்தோத்திரம் செய்கிறேன்
5
பூர்வோத்தரே பாரலிகாபிதானே
ஸதாசிவம் தம் கிரிஜாஸமேதம் !
ஸுராஸுராராதிதபாத பத்மம்
ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் ஸ்மராமி !!
ஸதாசிவம் தம் கிரிஜாஸமேதம் !
ஸுராஸுராராதிதபாத பத்மம்
ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் ஸ்மராமி !!
பொருள்: பாரதத்தின் வடகிழக்கில் பறளி க்ஷேத்திரத்தில் ஸ்ரீகிரிஜா ஸமேதரான வைத்யநாதேச்வரலிங்கத்தை- தேவாஸுரர்களால் போற்றி பூஜிக்கப்பட்ட லிங்கத்தை எப்பொழுதும் தியானிக்கிறேன்
6
ஆமர்தஸம்ஞே நகரே ச ரம்யே
விபூஷிதாங்கம் விவிதை:ச போகை:
ஸத்புக்தி முக்திப்ரத மீசமேகம்
ஸ்ரீநாக நாதம் சரணம் ப்ரபத்யே !!
விபூஷிதாங்கம் விவிதை:ச போகை:
ஸத்புக்தி முக்திப்ரத மீசமேகம்
ஸ்ரீநாக நாதம் சரணம் ப்ரபத்யே !!
பொருள்: ஆமர்தம் என்ற அழகான ஊரில் பலவித ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், நல்லோருக்கு நல்வாழ்க்கை, மோக்ஷம் முதலியவற்றைத் தருபவளுமாகிய ஸ்ரீநாகநாதசுவாமியை சரணமடைகிறேன்
7
ஸானந்த மானந்தவனே வஸந்தம்
ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம் !
வாராணஸீநாத மானத நாதம்
ஸ்ரீவிச்வ நாதம் சரணம் ப்ரபத்யே !!
ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம் !
வாராணஸீநாத மானத நாதம்
ஸ்ரீவிச்வ நாதம் சரணம் ப்ரபத்யே !!
பொருள்: வாராணஸீ என்ற க்ஷேத்ரத்தில் ஆனந்தவனத்தில் ஆனந்தமாக வீற்றிருப்பவளும், ஆனந்தத்திற்கு மூலக்கருவாகவும், பாபங்களைக் களைபவராகவும், எளியோருக்குப் பங்காளனாகவும், இருக்கிற ஸ்ரீவிச்வநாதரை சரணமடைகிறேன்
8
யோ டாகினீசாகிநிகாஸமாஜே
நிஷேவ்யமாண:பிசிதாசனை:ச !
ஸதைவ பீமாதிபதப்ரஸித்தம்
தம் சங்கரம் பக்தஹிதம் நமாமி !!
நிஷேவ்யமாண:பிசிதாசனை:ச !
ஸதைவ பீமாதிபதப்ரஸித்தம்
தம் சங்கரம் பக்தஹிதம் நமாமி !!
பொருள்: டாகினீ, சாகினீ, முதலியவர்களால் சோவிக்கப்பட்ட பீமா என்ற பெயருடன் விளங்கும் பக்த சங்கரனை வணங்குகின்றேன்
9
ஸ்ரீதாம்ர பர்ணீஜல ராசியோகே
நிபத்ய ஸேதும் GC பில்வபத்ரை:!
ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேச்வராக்யம் ஸததம் நமாமி !!
நிபத்ய ஸேதும் GC பில்வபத்ரை:!
ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேச்வராக்யம் ஸததம் நமாமி !!
பொருள்: தாமிரபரணீநதியும், கடலும் சேருமிடத்தில் சேது பந்தம் செய்தபின் இரவில் ஸ்ரீராமர் பில்வதலங்களால் அர்ச்சித்த ஸ்ரீராமேச்வரலிங்கத்தை எப்பொழுதும் வணங்குகின்றேன்
10
ஸிம்ஹாத்ரிபார்ச்வேsபி தடே ரமந்தம்
கோதாவரீதீர பவித்ரதேசே !
யத் தர்சனாத் பாதக ஜாத நாச :
ப்ரஜாயதே த்ர்யம்பகமீசமீடே !!
கோதாவரீதீர பவித்ரதேசே !
யத் தர்சனாத் பாதக ஜாத நாச :
ப்ரஜாயதே த்ர்யம்பகமீசமீடே !!
பொருள்: ஸிம்ஹாசல க்ஷேத்திரத்தின் அருகில் சமவெளியில் கோதாவரீக்கரையில் களித்து நிற்கும் த்ர்யம்பகரை ஸ்தோத்திரம் செய்கிறேன். அவரை தர்சனம் செய்தாலே பாபமெல்லாம் நீங்கும் !!
11
ஹிமாத்ரி பார்ச்வேsபி தடே ரமந்தம்
ஸம்பூஜ்யமானம் ஸததம் முனீந்த்ரை: !
ஸுராஸுரை:யக்ஷமஹோரகத்யை:
கேதாரஸம்ஞம் சிவமீச மீடே !!
ஸம்பூஜ்யமானம் ஸததம் முனீந்த்ரை: !
ஸுராஸுரை:யக்ஷமஹோரகத்யை:
கேதாரஸம்ஞம் சிவமீச மீடே !!
பொருள்: ஹிமயமலையின் பக்கத்தில், முனிவர்களாலும், தேவஸுரர்களாலும் பூஜிக்கப்பட்ட கேதாரநாதரை ஸ்தோத்திரம் செய்கிறேன்
12
ஏலாபூரீ ரம்ய சிவாலயேsஸ்மின்
ஸமுல்லஸந்தம் த்ரிஜகத்வரேண்யம் !
வந்தே மஹோதாரதர ஸ்வபாவம்
ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம் !!
ஸமுல்லஸந்தம் த்ரிஜகத்வரேண்யம் !
வந்தே மஹோதாரதர ஸ்வபாவம்
ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம் !!
பொருள்: ஏலாபுரியிலுள்ள அழகிய சிவன் கோயிலில் விளங்கும் மூவுலகுக்கும் சிறந்தவரும், மிகவும் இளகிய சுபாவமுடையவருமான திஷணேச்வரர் என்ற ஸதாசிவனை வணங்குகின்றேன்
13
ஏதாநி லிங்காதி ஸதைவ மார்த்யா:
ப்ராத:படந்தோsமல மானஸா:ச !
தே புத்ரபௌத்ரைஸ்ச தனைருதாரை:
ஸத்கீர்திபாஜ:ஸுகினோ பவந்தி !!
ப்ராத:படந்தோsமல மானஸா:ச !
தே புத்ரபௌத்ரைஸ்ச தனைருதாரை:
ஸத்கீர்திபாஜ:ஸுகினோ பவந்தி !!
பொருள்: தெளிந்த மனதுடன் காலையில் இந்த த்வாதஸலிங்க ஸ்தோத்திரத்தைப் படிக்கும் மனிதர் புத்ர - பௌத்ரர்களுடனும் ஏராளமான தனதான்யத்துடனும், புகழுடனும் சுகமாக வாழ்வீர்