திரு ஆவினங்குடி, பழனி, தமிழ்நாடு இது மூன்றாவது அறுபடை வீடு இங்கு சுப்ரமண்யர் ஆண்டியின் கோலத்தில் மொட்டையடித்த

திரு ஆவினங்குடி, பழனி, தமிழ்நாடு


இது மூன்றாவது அறுபடை வீடு. இங்கு சுப்ரமண்யர் ஆண்டியின் கோலத்தில் மொட்டையடித்து கோவணம் கட்டி கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணி என்ற பெயருடன் விளங்குகிறார். தன்னுடைய அண்ணணாகிய விநாயகர் போட்டியில் வென்று தான் தோற்றதால் கோபமுற்று விரக்தியுற்று தனிமையை நாடி இங்கு வந்தார் என்பது வரலாறு. தெற்கத்திய ரெயில்வேயின் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 25 மைல் தூரத்தில் பக்தி பூர்வமான சூழ்நிலையில் இயற்கை காட்சிகளுடன் கிழக்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் சித்தி பெற்று இறை அருள் பெற்றனர்.

ஒன்பது வகையான மருத்துவ மூலிகைகளால் உருவாக்கப்பட்ட சிலை இங்கு உள்ளது என்று நம்பப்படுகிறது. இங்கு அளிக்கப்படும் அபிஷேகப்ரஸாதம் பல நோய்களை தீர்க்கும் அபூர்வ மருந்து எனவும் நம்பப்படுகிறது. மார்ச் மாதத்தில் இங்கு நிகழும் பங்குனி உத்திர திருவிழாவில் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக வந்து கலந்து இறை அருள் பெறுகின்றனர். பழனி மலையின் அடிவாரத்தில் திரு ஆவினன்குடி கோயில் உள்ளது.