ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் பொங்கல் - மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்கொட்டிலில் உருட்டி வைக்கப்பட்ட மாட்டுச் சாணத்தி ¢ பேரில் அருகம்பு

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
பொங்கல் - மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்கொட்டிலில் உருட்டி வைக்கப்பட்ட மாட்டுச் சாணத்தி ¢ பேரில் அருகம்புல் செருகப்பட்டிருப்பதைக் காண்கிறோம்!அதன் முன்னிலையில் பொங்கலைப் பார்க்கிறோம். அதன் முன்னிலையில் பொங்கலைப் படைக்கிறோம். அந்தச் சாணியே கோவர்தன பர்வதம். அவ்வருகம் புல்லோ அம் மலையில் மேல் மிளிரும் மேய்ச்சல் தரை. நமது கொட்டிலிலுள்ள ஆனினங்களெல்லாம் கண்ணபிரானுடைய பசுக்கள். அன்று, பின்னர், நாம் பசுமஞ்சளில் ஆவாகனம் செய்து வழிபடும் பூஜை கண்ணபிரான் தேவேந்திரனை மன்னித்து அனுமதி கொடுத்த தேவேந்திர பூஜை.

மைதானத்தில் செந்நெல் அறுவடையாகப் போகிறது. செந்நெல்லுக்கும், எந்நெல்லுக்கும் எந் நலத்திற்கும் எல்லாம் வல்ல ஒன்றாம் இறைவனும் கண்ணனே காரணம். அவன் எவ்விதம் காரணமாகிறான்

உழவிற்கும், எருவிற்கும் காரணமாக ஆனின முலமாகவும், இந்திரனுடைய அதிகாரத்தில் விடப்பட்டிருக்கிற மழை பொழியும் மேகத்தின் மூலமாகவும் மேகத்துக்குக் காரணமான சூரியன் முலமாகவுமே. எந்தெந்த முறைகளில் எதனெதன் மூலமாக என்தெந்தக் காலங்களில் ஈசனது கருணை வாழ்விக்கிறதோ, அந்தெந்த முறைகளில் அதனதன் மூலமாக அந்தந்த காலங்களில் அவனுடைய நினைவை வருவித்துக்கொண்டு நமது நன்றியறிவை அவனுக்குச் செலுத்தத் தவறுமேயானால் நாம் மனிதத் தன்மையுடயவராகின்றோம். செய்ந் நன்றி மறவாமை உண்டு. சாணி உருண்டையும், அருகம் புல்லும் கோவர்தன கிரியை நினைவூட்டுவதின் மூலம் கண்ணனை நினைவூட்டுகின்றன.

வடதுருவமாம் மேருவின் சிகரத்திற்கு நேரேயுள்ள வானுலகத்திற்கு உத்தராயண தினமே உத்தராயனம். அன்று மனிதவர்க்கத்திற்குப் பொங்கல். முதல் நாள் ஆனினத்திற்குப் பொங்கல். முதல் நாள் "பால் பொங்கிற்று" என்ற அன்புக்

கேள்வி. பொங்கும் பாலைக் கொடுத்த ஆவிற்கு மறுநாள் பொங்கல். சூர்ய சங்க்ராந்தி தினம் பித்ருக்களை வழபடவேண்டிய முதல் நாள். திறந்த இடத்தில் பித்ருக்களுக்குறிய வட்டக் கோலமிட்டு அவ்விட்டத்திற்குள் ஸுர்ய மண்டலத்தை எழுதிப் பூசிக்கிறோம். மறுநாள் சதுரமான கோலமிட்டு இந்திரனைப் பூசிக்கிறோம். ஆணினங்களைப் பூசிக்கும்போது ஆயர்கோன கண்ணனது நினைவு வராமலிருக்க முடியாது.

மூலப்பழ மறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்கு (பசுவிற்கு) ப் பின்னேயும் காணலாம்

மால்யானை, முந்தருளும் வேதமுதலே

என அழைப்ப வநந்தனருளும் செந்தாமரை.

இரவு கழிந்த பின்னர் உடை மாற்றுகின்றோம். தக்ஷிணாயனமாம் பேரிரவு கழிந்த பின்னர். உடை, மட்கலம், பாய் இவைகளை யெல்லாம் பழையன கழித்துப் புதியன மாற்றுகின்றோம். பீடை கழித்துவிடுகின்னோம். பீடையை அரஹரிக்கும் பீடாஹாரி தெய்வத்திற்கு, முதல் நாள் பொங்கல் சேஷத்தால் கனுப்பிடி எனும் பலியிடுகிறோம். பெண்மணிகள் (சுமங்களிகள்) அன்று மாலை சித்திரன்னங்கள் சமைக்கிறார்கள். அநேக குலங்களில் கன்யாப் பெண்கள் அன்று பகல் முழுவதும் நோன்பிருந்து கொப்பி யெனப்படும் கும்மி யடிக்கிறார்கள்.

மார்கழி முப்பது நாளும் வீட்டு வாசலில் சாணியிலிட்ட பரங்கிப்பூக்களை முப்பது எரிமுட்டைகளாக தட்டி ரக்ஷித்து, அவைகளை, சூரியனுக்காம் பொங்கலைப் பக்குவப் படுத்தும் அக்னிக்குச் சிலரும் அர்பணம் செய்கின்றனர். இப் பின்வழக்கத்தைப் பற்றியே குரவஞ்சியில் கீழ்வரும் வரி காணப்படுகிறது. அதில்,

எரு விட்டரிந்ததற்கோ வெண்ணிலாவே

என்று நாயகி சந்திரனைப் பார்த்து சொல்லுகிறாள்.

நம் நாட்டில் எல்லாப் பெண்களும் தம் உடன் பிறந்தாரின் க்ஷேமத்தைக் கருதி நோற்கும் நோன்பு. அன்று எல்லாப் பெண்களும் உடன் பிறந்தார் பொருளனுப்பித் தங்களுக்காக அவர்கள் செய்யும் நோம்பைத் தங்கள் பொருளாளேயே நடத்தி வைப்பது நம் தமிழ்நாட்டுத் தொன்று தொட்டு நடந்து வரும் பழக்கம்.

ஆறு ருதுக்களில் மார்கழியும் தையும் ஹேமந்தருது எனும் முன் பனிக்காலம், இயற்கை நிறங்களுக்கும் அக்காலத்துக் குரியது மஞ்சள் நிறம். சாமந்தி என்னும் சவந்திப்பூ நிறைந்த காலம். பரங்கிப்பூவும் இக்காலத்தே. ஹேமம் என்னும் சொல்லுக்கு பொன் என்பது பொருள். பொன்னிறமே மஞ்சள் நிறம். மஞ்சளும் இக்காலத்தே. மஞ்சள் நிறம் மங்களச் சின்னம். அமங்ளமாம் பீடைகளை யெல்லாம் ஒழித்து, வீடு, ஆடை, காலம் எல்லாவற்றையும் புதுப்பித்து, மேகங்களிலும் ஆணினங்களிலும் கதிரவனின் இவற்றின் பயனாம் செந்நெல்லிலும் விளக்கும் இறைவனது சக்தியை நன்றியறிவுடன் நினைத்துப் பூரித்துப் பாலைப்போல் தூயமனம் பொங்கிப் பொங்கிப் மங்களப்

பொருட்களையெல்லாம் அவனுக்குக் காட்சிப் பொருளாகக் கொடுத்து அடுத்த சங்க்ராந்தி வரை இன்று பொங்கிய இத்தூய்மையின் சீர்குன்றது நன்மை ரக்ஷிக்குமாறு இறைவனை இறைஞ்சுவோமாக சுபம்.