ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் பகவந் நாமஸங்கீர்த்தன மஹிமை இந்தக் கலியுகத்தில் ப்ராணிகளிடம் பாபாசாரங்கள் பெரும்பாலும் காணப்படுகிறபடியால் தன் தன் வர்ணத

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
பகவந் நாமஸங்கீர்த்தன மஹிமை

இந்தக் கலியுகத்தில் ப்ராணிகளிடம் பாபாசாரங்கள் பெரும்பாலும் காணப்படுகிறபடியால் தன் தன் வர்ணத்திற்கும், ஆச்ரமத்திற்கும் ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மத்தை அனுஷ்டிப்பது என்பதே அரிதாகிவிட்டது. ஒவ்வொரு க்ருஹத்திலும் தன் வர்ணத்திற்கும், ஆச்ரமத்திற்கும் ஏற்பட்ட தர்மத்தின் அட்டவணையைக் கூட மறந்துவிட்டார்கள். இந்த ஸந்தர்ப்பத்தால், இஹத்திலும், பரத்திலும் ச்ரேயஸை அடைவதற்குப் பகவானுடைய நாம ஸங்கீர்த்தனமே ஸுலபமான உபாயமாகிறது. பகவானுடைய திருநாமாக்களை ஸங்கீர்த்தனம் செய்வதினால் ஏற்படும் புன்னியத்தை அளவிடமுடியாது. அதிலும் வைகுண்ட வாசியான மஹாவிஷ்ணு இந்தப் பூலோகத்தில் தசரத சக்கரவர்த்தியுடைய திருக்குமாரனாக அவதரித்து அமானுஷமான லீலைகளை செய்து, பூலோகத்தை அலங்கரித்த அந்த மஹானுபாவனுக்கு ஏற்பட்ட ராமா என்ற நாமாவே ஸகல பிராணிகளுக்கும் புக்தி முக்தியைக் கொடுக்கக்கூடியது. அந்த நாமாவினுடைய ருசியோ அதைவிடத் தகுந்ததல்ல. (ஜநாதி ராம தவ நாமருசிம் மஹேச) என்ற வாக்கியத்தால் அவிமுக்த க்ஷேத்திரமாகிய ஸ்ரீ காசியில் விளங்கிவரும் மஹா

கைலாசத்திற்கு அதிபதியான பரமசிவன் ஒருவனுக்குத்தான் ராம நாமத்தின் ரஸம் தெரியுமென்று ஏற்படுகிறது. காசீ க்ஷேத்திரத்தில் தாரக மந்த்ரமான ராம ஜெபத்தை ஜபம் செய்துகொண்டே பரமசிவன் பூர்ண ஸாந்ந்யத்துடன் விளங்கி வருகிறார். அந்த க்ஷேத்திரத்தில் மரித்த எல்லா பிராணிகளுடைய வலது காதிலும் மரண காலத்தில் பரமேச்வரனே ராம நாமாவை உபதேசிக்கின்றார் என்று இதிஹாச புராண மூலமாக தெரியவருகிறது. அந்த நாமாவைத் தினந்தோறும் ஸங்கீர்த்தனம் செய்துகொண்டு, வருகிற மனிதன் ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு மிகவும் பிரியனாக ஆகிறான். ஸகல பாபங்களிலிருந்தும் விடுபட்டவனாகவும் ஆகிறான்.

விஷ்ணோர்நாமேவ பும்ஸாம் சமலமபநுதத் புண்யமுத் பாதயச்ச

ப்ரஹ்மாதி ஸ்தாந போகாத் விரதி மதகுரோ. ஸ்ரீபதத்வந்த்வ பக்திம்

தத்வஞானம் ச விஷ்ணோ. இஹ ம்ருதி ப்ராந்தி பீஜம் ச தக்த்வா

ப்ரஹ்மாநந்தைக போதே மஹதி ச புருஷ ஸ்தாபயித்வா நிவ்ருத்தம்.

என்ற சாஸ்த்ரத்தால் விஷ்ணுவினுடைய, அதிலும் ஸ்ரீ ராமனுடைய நாமாவானது ஸங்கீர்த்தனம் செய்த பெரிய புண்ணியத்தையும் கொடுத்து, ப்ரம்ப பட்டம் வரையிலுமுள்ள ஸம்ஸ்த போகாதிகளிலும் வைராக்கியத்தை உண்டுபண்ணி, இந்த ஸம்ஸாரத்தில் ஜன்ம மரண ரூபமான துக்கத்திற்குக் காரணமான மூலாஞானத்தையும் நாசம் செய்து, பரமானந்தத்தை அனுபவிக்கக் கூடிய மோஷ பதவியில் அந்த புருஷனை ஸ்திரமாக ஸ்தாபனம் செய்துவிட்டு, பிறகு பூலோகத்தில் வேறு யாராவது தன்னை ஆச்ரயிக்கிறவன் உண்டா. என்ற எண்ணத்துடன் திரும்பி வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. மேற்சொன்ன சாஸ்த்திரத்தின் அர்த்தத்தைக் கவனித்தால் ஸ்ரீ ராமநாமாவின் பெருமையை யாரும்

நன்றாக உணர்ந்துகொள்ளலாம்.

ஸ்புடாயாம் த்வாரி ஈசேதரம் இதரயா ஸாது நயதே

யதா ப்ராப்யஸ்தாநம் ஸுஹ்ருதிஹ மனோஜத்ருகபிதே

ஸ்வகர்மாதௌ ஈசேதரம் இமம் அகேதம் சிவபதம்

ததா கல்யாணி த்வம் நநு கலயசி த்வத் கலநயா

என்ற சாஸ்திரத்தின் அர்த்தத்தைக் கவனித்தால் ராம நாமத்தின் பெருமையை பிரகாசிக்கும், அதாவது ஒரு மனிதனுக்கு ஒரு பெரிய ராஜ ஸ்தானத்தில் சென்று, அரசனிடத்தில் பெரிய ஸம்மானங்கள் வாங்கவேண்டுமென்ற

ஆவல் மாத்திரம் வெகு நாளாக இருந்து வருகிறது. ஆனால், அந்த அரசனிடத்தில் போகும்படியான கல்வி, ஒன்றுமே அவனிடத்தில் இல்லை. மிகவும் மூடன். ஆகிலும் நாளுக்குநாள் அரசனைக்காண ஆவல் அதிகரித்து வருகிறது. அவன் ரொம்பவும் இளம் பருவத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அவனோடு கூடிப்படித்த ஒரு ஸ்னேஹிதன் அதிர்ஷ்டவசத்தால், கல்வியில் மேன்மேலும் அபிவிருத்தியடைந்து, அந்த ராஜாங்கத்தில் மந்திரி ஸ்தானத்தில் அமர்ந்து வந்தான். அவன் மிகவும் கருணையுள்ளவன். அவனது ஞாபகம் மேற்சொன்ன

மூடனுக்கு ஏற்பட்டது. உடன் நாம் எப்படியாவது அந்த நகரம் சென்று நமது ஸ்னேகிதன் அங்கு மந்திரியாக இருக்கிறானல்லவா. அவனைப் பார்த்தால் நமது கோரிக்கையைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். என்று நினைத்து உடனே அந்த நகரம் சென்றான். அத்ருஷ்ட காலமும் பரிபக்குவத்தை அடைந்தது. அந்த மாந்திரியானவன், தனது ஸ்நேஹிதனான இந்த மனிதனைப் பார்த்து எங்கு வந்தாய் என்று கேட்க, இவன் நீயும் நானும் சேர்த்து படித்தோ மல்லவா. c பெரிய ஸ்தானத்தில் இருந்து வருகிறாய். எனக்கு ஒரு விதமான பதவியும் கிடைக்கவில்லை. அதோடு பால்யத்தில் நான் படித்த கல்வியும் மறந்து போய்விட்டது. எனது பந்துக்கள் எல்லோரும் என்னை பரிகஸிக்கிறார்கள். எப்படியாவது எனக்கு ராஜபெட்டியைச் செய்துவைத்து பெரிய ஸம்மானங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்றான். அதைக் கேட்ட மந்திரியும் பரிகாசத்துடன் ஸரி என்று அங்கீகாரம் செய்துவிட்டு, கருணையுள்ளவனாதலால், அவனுடைய பால்ய ஸ்னேகத்தையும் நினைத்து, அவனுக்கு ராஜஸ்னானத்தில் ஒரு பெரிய மரியாதையைச்செய்ய வேண்டுமென்று தீர்மானித்து விட்டான். உடன், இந்த மூடன் அதற்கு லாயக்கு இல்லாதவனாயிருந்தாலும், அந்த மாதிரியானவன் தன் சாதூர்யத்தால் ராஜனிடம் அவனைப்பற்றி ஒரு பெரிய ஈச்வரனுக்கும் மேலானவன்போல் வர்ணித்து, அரன்மனை வாசலில், விசித்திரமான அலங்காரங்கள் செய்து மஹாராஜன் பூர்ணகும்பத்துடன் இந்த மூடனை எதிர்கொண்டு அழைக்கும்படி செய்து, ராஜாசனத்திலும் அமரச்செய்து, அளவற்ற பொருளையும் அனேக வெகுமான திரவியங்களையும் ஸம்மானமாக வாங்கிக்கொடுத்து, அவனுடைய மனத்தை பரிபூரணமாகச் செய்தான்.

இந்தக் கதை எவ்விதமோ, பகவானுடைய நாமாவானது. பகவானான அரசனுடைய அருகில் ஒரு பெரிய மந்திரி பதவியையடைந்த ஒரு பெரிய பரம புருஷனாவான். நாம ப்ரம்மம் என்று சாஸ்திரத்தில் பகவானுடைய நாமாவையே ப்ரம்மம் என்று வர்ணித்திருக்கின்றது. பூலோகத்திலுள்ள புருஷனுக்குப் பகவானுடைய அருகில் சென்று, பகவானை நேரில் பார்த்து மோக்ஷ ஸுகத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்துதான் வருகிறது. ஆகிலும், அவ்விதம் அடைய தன்னிடத்தில் ஒருவிதமான தபஸ் சக்தியோ இல்லை. கர்மாணுஷ்டானங்களோ ரொம்பவும் மோசம். அவ்விதமே இந்த்ரிய நிக்ரஹம், உபாசனை மார்க்கம், த்யான யோகம், தபஸ், ப்ராணாயாமம், இவ்விதம் அனேகமாக மோஷ சாதனமென்று சாஸ்திரத்தில் உபதேசிக்கப்பட்டவைகள் எங்கேயோ போய்விட்டன. விவேகம், வைராக்கியம், சமாதிஷட்க ஸம்பந்தி, முமுக்ஷ§த்வம், என்று நாலு ஸாதனங்களை அடைந்த பின்பல்லவா ஞானயோகத்தில் அதிகாரம் சித்திக்கவேண்டும். ப்ராணிகளுக்கு வைராக்கியத்தில்தான் வைராக்கியம் கானப்படுகிறதேயழிய போகத்தில் வைராக்கியம் ஏது. ஆகினும் பகவானுடைய அருகில் சென்று, மோஷ சுகத்தையடைய வேண்டுமென்ற ஆவல் மட்டும் இருந்து வருகிறது. அதற்குள்ள உபயமோ அபாயத்தை அடைந்துவிட்டது. அதற்காக இந்தப் பகவானான பெரிய அரசனுடைய அருகில் மந்திரி ஸ்தானத்தை வஹித்து வருகிற, நாம ப்ரம்மத்தை நாம் தினமும், ஸங்கேதனம் செய்து, ஸ்நேகிதம் செய்து கொண்டுவிட்டால், அந்த

நாம ப்ரம்மாவானது மோஷத்திற்கு லாயக்கு இல்லாத இந்த புருஷனையும், பகவானிடத்தில் தன் சாதுர்யத்தால் ஒரு பெரிய பரம புருஷன் எனப் போதித்து, பகவானுக்கே இந்தப் புருஷனிடத்தில் ஒரு பெரிய ஆதரவு ஏற்படும் படியாகவும் செய்து, இந்தப் புருஷன் இருக்கும் இடத்திற்கே பகவானை ஸ்வயமாக வரும்படி செய்து, பகவான் இந்தப் புருஷனைப் பரம ஆதரவுடன் கூடத் தன்னுடைய ஸ்தானத்திற்கு அழைத்துக் கொண்டுபோய், தன் பத்ராசனத்தில் இவனுக்கும் ஸ்தானத்தைக் கொடுத்து, தன்னுடைய போகங்களுக்கு ஸமானமான போகங்களையும் அவன் அனுபவிக்கும்படி செய்து மோக்ஷ சுகத்திற்கும் அந்தப் புருஷனைப் பாத்திரமாகும்படி செய்து இந்த நாம பிரம்மமானது இவ்விதம் அன்பு புருஷனையும் கடைத்தேறிச் செய்துவிடும். இதனால் இந்தக் கலியில் பகவந்நாம ஸங்கீர்த்தனம் ரொம்பவும் அவசியமானது என்பதை அறியவும்.