ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ஸ்ரீஆசார்யர்கள் அருள்வாக்கு
வேதத்துக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் வேதத்தை நன்கு அத்யயனம் செய்திருக்க வேண்டும். மேலும், அதன் பொருள் அறிந்து கொள்ள, ஆழ்கடலிலே முத்துக் குளிப்பதுபோல, சமஸ்கிருத மொழியிலே ஆழ்ந்த ஞானம் செய்யவேண்டும். சாஸ்திரத்திலே சிறிதளவாவது பரிச்சயமும் இருக்கவேண்டும். இவ்வளவு இருந்தால்தான் வேதத்தை நன்கு உணரமுடியும்.
இப்போது வெறுமனே பி.ஏ, வரை சிலர் வாசிக்கிறார்கள். ஒரு கடிதம் வந்தால்கூட அவர்களுக்கு அதைச்சரியாக வாசிக்கத் தெரியவதில்லை.இந்தப் படிப்பிற்க்குப் பதினைந்து பதினாறு வருஷங்களாகின்றன என்று செல்லிக்கொள்கிறார்கள். இப்படி பதினைந்து பதினாறு வருஷங்களாயினும் மாணவர்களுக்கு ஒரு வித்தையும் வருவதில்லை. இவ்வறு நாட்கள் வீணாகப் போவதைக் காட்டிலும், பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் அத்யாயனம் செய்தால், வேதம், சாஸ்திரம் இரண்டையும் கற்றுக் கொண்டுவிடலாம்.
நாம் செய்த பாப புண்யம் பயனாகக் கடவுள் நமக்கு உடம்பை அளித்து அதையே நான் என்று நினைக்கச் செய்து தண்டிக்கிறார். ஒரு சிறுவன் ஒரு குற்றம் பண்ணினால் அதற்குத் கசையடி கொடுக்கிறார்கள். பக்கத்தில் டாக்டர் இருக்கிறார். அந்தச் சிறுவன் பொருக்க முடியாமல் மூர்ச்சையானால் சிகிச்சை செய்து மறுபடியும் அடிக்கிறார்கள். நல்ல போதனை செய்து மறுபடியும் அடிக்கிறார்கள். நாம் செய்த பாபத்திற்காக ஈச்வரன் நம்மைச் சி¬க்ஷ செய்கிறார். போதாவிட்டால் மறுபடியும் உடம்பைக் கொடுத்து நம்மைச் சிக்ஷிக்கிறார். ஆகையால் நாம் பண்ணுகிற பாபம் உடம்புக்குக் காரணம்.இனிமேல் பாபம் பண்ணாமல் இருந்தால் உடம்புவராது. பாபம் பண்ணக்கூடாது என்ற நினைவு தினமும் இருக்கவேண்டும்.
ஈச்வரன் இருக்கிறான். இருந்து தான் ஆகவேண்டும். ஒரு சின்ன அநுமானத்தை இப்பொழுது பார்க்கலாம். இந்த ஆஸனம் ஒருவன் பண்ணித்தான் ஆகியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பண்ணினவன் தெரியாவிட்டால் பண்ணினது பொய் என்று சொல்லலாமா. வேறு ஆஸனங்களைப் பண்ணுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதைக் கொண்டு இதையும் பண்ணினவன் ஒருவன் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அவனுக்கு இதைப்பண்ணுகிற சக்தி உண்டு என்பதையும் அறிந்து கொள்கிறோம். அதைப்போல் எல்லாவற்றையும் பண்ணுகிறவன் ஒருவன் இருக்கிறான். அவன் சர்வக்கிஞன்.
இக்காலத்தில் நவீன சாஸ்திரங்களைக் கற்றவர்கள் அநேக விசித்திரமான வஸ்துக்களைச் செய்கிறார்கள். ஆனால் சிருஷ்டியில் உள்ள வஸ்துக்களைக் கொண்டுதான் அவர்கள் வேறு வஸ்துக்களை செய்யமுடிகிறது. ஈஸ்வரன் சிருஷ்டித்த இந்த வாழை இலையை அவர்கள் செய்யமுடியாது. ஈச்வரனுடைய வல்லமையை இந்த ஒரு விஷயமே காட்டுகிறது.
வாக்கினார் புண்ணியம் செய்யவேண்டும். நித்தியம் ஆயிரம் பகவான் நாமாவையாவது சொல்லவேண்டும். அது நமக்கு உபயோகப்படும். அன்றியும் உபத்திரவமும் இல்லை. மேலும் புண்ணிமும் உண்டாகிறது. பகவானுக்குப் பல நாமாக்கள் இருக்கின்றன. பேராயிரம் பரவி வானோரத்தும் பெம்மானே என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவனுடைய ஒருநாமாவை ஆயிரம் தடவை சொல்லவேண்டும்.