ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் அன்பு வள்ளுவர் பெருமான் அன்பின் உயர்நிலையை விளக்குங்கால், பிறர் துன்பங்கண்டுழி,அந்புடையார் பொழிகின்ற கண்ணீரே அ

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
அன்பு

வள்ளுவர் பெருமான் அன்பின் உயர்நிலையை விளக்குங்கால், பிறர் துன்பங்கண்டுழி,அந்புடையார் பொழிகின்ற கண்ணீரே அவரது அன்பை வெளிப்படுத்தும் என்கிறார். இதற்க்கு தகுந்த உவமையை அமைத்து துறைமங்களம் சிவப்பிரகாச சுவாமிகள் மற்ற உறுப்புகளுக்கேற்பட்ட கஷ்டங்களைக் கண்டு சகியாது கண்ணீர் பெருக்கும் கண்களைப்போல என்கிறார்.

நமது சரீரத்தில் உறுப்புகள் பல உண்டு. ஒவ்வொர் உறுப்புக்கும் HE நேரலாம். அவ்வுறுப்புகள் துன்பம் அனுபவிக்கும் போது நமக்கென்ன என்று சும்மாவாயிருக்கிறது. மற்ற உறுப்புகளுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் காணச்சகியாது கண்ணீர் பெருக்குகிறது. எதைப்போல பிறருடைய துன்பத்தைக் காணச்சகியாது ஆத்மார்த்தமாய் வருந்தும் பெரியோரது ஹிருதயம்போல, பாட்டைப் பார்ப்போமா.

பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்

எரியின் இழுது ஆவர் என்க-தெரியிழாய்

மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்

கண்டு கலுழுமே கண்

இத்தகைய அன்பை நிலைநாட்டிப் பேரும் புகழும் பெற்றவர் இருவரே. ஒருவன் கங்கைக் கரையின் வேடனாகிய குகன். மற்றவன் காளத்தி வேடனாகிய கண்ணப்பன். இருவரும் வேட்டுவ குலத்தவர். அன்பென்பது எது என்பதைச் சிறிதும் அறியாத குலத்திலே பிறந்தவர். ஆனால் அன்பின் நிலை எத்தகையது என்பதை உலகினோர்க்கு எடுத்துக்காட்டியவர்கள். வித்திராசுர வதத்திற்காகத் ததீசி கொண்டது போல உயிரையும் அன்புக்காக அர்பணம் செய்தவர்கள். அன்பற்ற நிலையில் இருந்தால் தமக்கே உரியராய் பிறர்க்குப் பயன்படுவார்களா உடல், பொருள்,ஆவி யாவையும் அன்பின் காரணமாகப் பிறர்க்கு உதவி, பயன்படுபவர் அல்லவா மேலோர் என்ற பெயரைத் தாங்கி வாழ்வர்.

மானிடப்பிறவியோ பெறுத்தற்கரியது. அப்பெருதற்கரிய பிறவியைப் பெற்ற மக்கள் உடலோடு தொடர்புபடுத்துவதற்கு காரணம், அவர்கள் உலகில் அன்புடன் ஒழுகி வாழுவதற்க்கே ஆகும். அவ்வாறு இருப்பின் உள்ளத்தினுள்ளேயே இருக்கிற அன்பின் நிலைக்களம் பிற உயிர்களிடத்தே பற்றுதலை உண்டுபண்ணி அவர்களுடன் ஒட்டிக்கொள்வதற்க்கு வழியாகும். இம்முறையிலே புகுவார் அன்பொடு பொருத்தி வாழ்வார். அவர்கள் வாழ்க்கை உலக இன்பத்துக்கும் பேரின்பத்திற்கும் வழியாகும் என்பது அறிஞர் கொள்கை.

உண்மை அறியாதவர்கள் அறம் ஒன்றினுக்குத்தான் அன்பு துனையாகிறது என்பது அவர்களது அறிவிற்க்கு எட்டுவதில்லை. அன்பில்லாத மக்கள் தின்பத்தினால் வருந்துதல் கண்கூடு. எலும்பில்லாத உயிர்கள் வெயிலில் வருந்துதல் போலத்தான் அவர்களது வாழ்க்கை இருக்கும். ஆகவே அவர்களது பயன்படா வாழ்க்கையை வறன்டபாலை நிலத்தில் பயிராகிய மரம் தளிராததுபோல என உவமிக்கலாம் அல்லவா.

உறுப்புகள் ஒன்று சேர்ந்தே உடலுக்கு அழகைத் தருகின்றன. ஒவ்வொர் உறுப்பும் தனக்குறிய வேலையைச் செய்து வளர்கிறது. ஏதேனும் ஒரு உருப்பும் தன் வேலையைச் சரிவர செய்யாவிடில் சரீரத்திற்க்கு அயர்வு ஏற்படுகிறது. ஆகவே மனத்தின் ஆக்ஞையை ஒட்டி உறுப்புகள் வேலைசெய்கின்றன. பட்டினத்தார் வாக்குப்படி கை ஒன்று செய்ய, MN ஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண, பொய் ஒன்று வஞ்சக நா வென்று பேச, ஆரம்பித்தால் உள்ளன்பற்ற அம்மனத்தவர்க்கு பிற உறுப்புகளினால் பயன் ஏதாவது உண்டா.

ஆகையால் முடிவாக நாம் பிறவி எடுத்ததால் கண்ட பயன்யாது. உடம்பிலே உயிர் நிற்பது அன்பினாலேயாகும். அன்பற்றவர் உயிரைப் பெற்றாலும் அது உயிருடைய உடம்பு ஆகாது.