ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் ராமனின் உறைவிடம் அழகிய வனங்கள், குளங்கள், உன்னதமான பர்வதங்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டே ஸ்ரீ ராமச்சந்திரர் ஸீதாலக்ஷ்மண ஸமேத

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ராமனின் உறைவிடம்

அழகிய வனங்கள், குளங்கள், உன்னதமான பர்வதங்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டே ஸ்ரீ ராமச்சந்திரர் ஸீதாலக்ஷ்மண ஸமேதராக வால்மீகி முனிவரின் ஆச்ரமத்திற்கு வந்தார். முனிச்ரேஷ்டரின் ஆச்ரமம் அழகிய மலை, வனம், தெள்ளிய நீரோடை, தடாகங்களில் தாமரையும், தருக்களில் பூக்களும் மகரந்தங்களை சொரிந்து கொண்டிருக்கின்றன. வண்டினங்கள் அதைச்சுற்றி ரீங்காரம் செய்கின்றன. பலவித புள்ளினங்களும், மிருகங்களும் தங்கள் தங்கள் விரோதத்தைவிட்டு, கோலாகலத்துடன் களிநடம்புரிகின்றன.

பரிசுத்தமான KS ஆச்ரமத்தைக்கொண்டு கமல நயனனான ஸ்ரீராமச்சந்திரர் புளகாங்கித மடைந்தார். ஸ்ரீஸீதாராமரின் வருகையைக்கேட்ட முனிபுங்கவர் வால்மீகி அவர்களை எதிர்கொண்டழைத்தார். ஸ்ரீராகவன் முனிவரை நமஸ்கரித்தார். முனிவர் ஸ்ரீரகுநாதரை நன்கு ஆசீர்வதித்தார். ஸ்ரீராமசந்திரரின் அழகைக் கண்டு முனிவர்களின் கண்கள் குளிர்ந்தன. முனிவர் அவர்களை ஆச்சிரமத்திற்கு அழைத்துச்சென்றார்.

முனிஷ்ரோஷ்டரான வால்மிகி அதிதிகளுக்கு கந்தமூல பலங்களை வரவழைத்து உண்ணுபடி உச்சரித்தார். ஸ்ரீகாகுஸ்தன் ஸீதாலஷ்மணருடன் பழங்களை உண்ண ஆரம்பித்தார். முனிபுங்கவர் ஸ்ரீராமரின் அருகில் அமர்ந்து அவரது அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தார். அச்சமயம் ஸ்ரீ ரகுநாதர் இருகைகளையும் கூப்பி சாதுக்களுக்கு ப்ரியமான வார்த்தைகளைச் சொன்னார்.

ஹே முனிபுங்கவ தாங்கள் மூஉலகங்களையும் நன்கு அறிந்தவர். எல்லா உலகமும் தங்களுக்கு உள்ளங்கை இலந்தைபழத்துக்குச்சமானம் ப்ரபு ராமச்சந்திரர் தான் வன வாசம் செய்ய நேர்ந்த வரலாற்றை தெளிவாகச் சொன்னார். ஹே பிரபுவே பிதுரிவாக்கிய பரிபாலனம். அன்னையின் பிரியம், பரதன் அரச பதவியேற்றல், தங்களைப்போன்ற பெரியோர்களின் திவ்யதரிசனம் இவை எல்லாம் எனது புண்னியத்தின் ப்ரபாவம். ஹே முனிராஜ், தங்களின் திருவடிகளை ஸேவித்தால் எங்களுக்கு ஸகலவிதபுண்ய பலன்களும் கிட்டிவிட்டது.

எல்லா முனிவர்களும் துன்பப்படாமலிருப் பாராக. எங்கு முனிவர்களும் தபஸ்விக்களும் கஷ்டப்படுகிறார்களோ, அங்கு அத்தேசத்து அரசன் அக்னி அல்லாமலேயே எரிந்து சாம்பலாகிறான். ஹே முனிபுங்கவ ஸீதாலக்ஷ்மண சகிதமாய் நான் தங்கக் கூடிய தங்கக்கூடிய தகுதியான இடத்தைச் சொல்லுங்கள். அவ்விடத்தில் நான் குடிசையிட்டு சிறிது காலம் தங்குகிறேன்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட வால்மீகி முனிவர் சொன்னார். ஹே இராம தாங்களோ வேத ரக்ஷகனாகிய ஜகதீச்வரன். ஜானகியோ தங்களின் ஸ்வரூப பூதமாகிய மாயை, ஆயிரம் தலைகளால் பூமியைத் தாங்குபவரான ஆதிசேஷனே இலக்ஷ்மணன். தேவர்களின் கார்யத்திற்காகவே தாங்கள் அரசனின் சரீரத்தை ஏற்று துஷ்ட

அரக்கர்களை நாசம் செய்வதற்காகவே வந்திருக்கிறீர். ஹேராம தங்களின் ஸாவரூபம் வார்த்தைகளுக்கு எட்டாதது. புத்திற்கு அப்பாற்பட்டது. வேதம் தங்களை நிரந்தரமாக நேதி, நேதி என்று சொல்லி துதிக்கிறது. மும்மூர்த்திகளாளும் தங்களின் மர்மத்தை அறிய முடியவில்லை. வேறு யார்தான் தங்களின் மர்மத்தை அறிய முடியும். தாங்கள் எவர்களுக்கு அறியும் சக்தியை அளிக்கிறீர்களோ, அவர்கள் தான் தங்களை அறிகிறார்கள். தங்களை அறிந்ததும் தங்கள் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறார்கள். ஹே ரகுநந்தன. பக்தர்களின் ஹ்ருதயத்தை சீதளமாக்கும் செஞ்சந்தனமே. தங்களின் கிருபையினால் தான் பக்தன் தங்களை அறிந்து கொள்கிறான். தங்களின் திருமேனி சின்மயமானது (அதாவது கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டது. உற்பத்தி, நாசம், விருத்தி, க்ஷயம் முதலான விகாரங்கள் அற்றது)

தங்களின் சரித்திரத்தைக் கேட்டு மூட ஜனங்களும் மோகத்தை அடைகிறார்கள். தாங்கள் எதைச்செய்கிறீர்களோ, அவைகளெல்லாம் ஸத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டது உசுதமானது. மனித வேடம் பூண்டு ஆட்டம் ஆடுகிறீர். நாங்கள் வசிக்க தகுதிவாய்ந்த உரைவிடம் எது என்று எந்னை வினவுகிறீர். மிக நன்று. முதலில் தாங்கள் இல்லாத இடத்தைச் சொல்லுங்கள். பிறகு நான் உங்களுக்கு உகந்த உறைவிடத்தைக் கூறுகிறேன்.

முனிவரின் அன்பு மொழிகளாக் கோட்டு ஸ்ரீராமர் எங்கே தனது ரகசியம் வெளிப்பட்டுவிடபமோ என்று புன்சிரிப்பு சிரித்தார். வால்மிகி சிரித்துக்கொண்டே அமிழ்தினுமினிய வார்த்தைகளைக் அமுழ்தினுமினிய வார்த்தைகளைக் கூறுகிறார்.ஹே ராமா.கேட்பீராக, தாங்கள் பிராட்டியுடனும், தம்பியுடனும் தங்குவதற்குத் தக்க உரைவிடம் சொல்கிறேன்.

எவர்களின் செவிகளாம் சமுத்திரத்தில் தங்களது கல்யாண குணங்களாகிய அநேக ஆறுகள் நிரந்தரமாக பெருகி நிரம்பியும், திருப்தியுராமல் இருக்கின்றனவோ அவர்களின் உள்ளம் உங்கள் எழில் நிறம்பிய உறைவிடம்.

சாதகபட்சி பெரிய பெரிய சமுத்திரங்களையும், நதிகளையும் நீரோடைகளையும், அலட்சியம் செய்துவிட்டு கார்கால மேகத்தின் சிறுதுளித் தண்ணீரினால் எல்லையில்லா இன்பத்தை அடைகிறது. ஹே ரகுராமா அவ்விதமே சாதகப்பக்ஷிகளைப் போன்ற உமது பக்தர்கள் கார்மேக வண்ணனாகிய உமது அழகைக் காண்பதிலேயே இன்புற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெரியோர்களின் ஹிருதயத்தில் லக்ஷ்மணனுடனும், பிராட்டியுடனும் வாஸம் செய்யுங்கள்.

தங்களுடைய கீர்த்தியே பரிசுத்தமான மானஸ ஸரோவரம். அதில் வசிக்கும் அன்னப் பறவைகள் முத்துக்களைப் பொருக்கித்தின்கின்றன. அவ்விதமே தங்கள் புகழாகிற மானஸப் பொய்கையில் உமது பக்தர்களின் நாவாகிற அன்னப் பக்ஷியானது குணங்களாகிய முத்துக்களைப் பொருக்கி எடுத்துக் கொண்டிருக்கிறதோ அப்படிப்பட்ட பக்தர்களின் ஹ்ருதயத்தில் வசியுங்கள். எவர்களின் மூக்கு, ஈச்வரனின் பரிசுத்தமான நறுமணம் கமழும் அழகிய ப்ரஸாதத்தை தினமும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறதோ, எவர்கள் தங்களுடைய உணவுகளை ராமார்பணம் செய்துவிட்டு உண்கிறார்களோ, தங்களின் பிரசாத ரூபமான வஸ்திராபரணங்களை அணிகிறார்களோ, எவர்களின் தலைத்தேவர்கள், குரு, வேதியர் இவர்களைக் கண்டு மிகவும் வணக்கத்துடனும், அன்புடனும் வளைகிறதோ, எவர்களின் கைகள் தினமும் ஈசனது திருவடிகளைப் பூஜிக்கிறதோ, எவர்களின் உள்ளம் ஸ்ரீராமனையே நம்பியிருக்கிறதோ, எவர்களுடைய பாதங்கள் ஸ்ரீ ராகவனுடைய புண்ய ஸ்தலங்களை நோக்கிச் செல்கிறதோ, எவர்களுடைய பாதங்கள் ஸ்ரீராகவனுடைய புண்ய ஸ்தலங்களை நோக்கிச் செல்கிறதோ, ஹே காகுஸ்த தாங்கள் அவர்களின் மனசில் நிவாசம் செய்யுங்கள்.

எவர்கள் தினந்தோரும் தாரக மந்திரமான ஸ்ரீராம மந்திரத்தை இடைவிடாமல் ஜபிக்கிறார்களோ, எவர்கள் பலவித தர்ப்பண, ஹோமங்களைச் செய்கிறார்களோ, எவர்கள் பிறருக்கு உணவு அளித்து, அனேகவித தானங்களைச் செய்கிறார்களோ, எவர்கள் குருவை உங்களைக் காட்டிலும் மிகப் பெரியவராக மதித்து எல்லாவிதத்திலும், மரியாதையுடன் அவர்களுக்கு ஸேவை புரிகிறார்களோ, எவர்கள் நற்கர்மங்களையே செய்து ஸ்ரீராமபிரானின் சரணகமல பக்தியையே யாசிக்கின்றார்களோ அவ்விதமஹான்களின் மனக்கோயிலில் தாங்கள் ஸீதாலக்ஷ்மண ஸமேதராய் வாஸம் செய்யுங்கள்.

காமம், க்ரோதம், மதம், கர்வம், மோஹம், லோபம், கோபம், ராகத்வேஷம், கபடம், தம்பம், மாய்கை முதலியவைகள் எவர்களிடம் சிறிதும் இல்லையோ அவர்களின் மனதில் தாங்கள் வாசம் செய்யுங்கள். எவர்கள் எல்லோருக்கும் பிரியமுள்ளவர்களாகவும், நன்மையையே செய்பவர்களாகவும், சுகம், துக்கம், மானம், அவமானம் எல்லாவற்றையும் ஒன்றாய் மதித்து சத்தியத்துடன் இன் சொல்லையே பேசுகிறார்களோ, எவர்கள் தூக்கத்திலும், விழிப்பிலும் தங்கள் சரணங்களையே எண்ணுகிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உள்ளத்தில் நீங்கள் வசியுங்கள்.

எவர்கள் பிறஸ்திரீகளை பெற்றெடுத்த தாய்போல் கருதுகிறார்களோ, எவர்கள் பிறரின் செல்வத்தை விஷத்திலும் கொடூரமாகக் கருதுகிறார்களோ, எவர்கள் பிறரின் சம்பத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார்களோ, பிறரின் தூக்கத்தையும், விபத்தையும் கண்டு தான் அதிக துக்கத்தை அடைகிறார்களோ,உங்களைத் தங்கள் பிராணனைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கிறார்களோ, ஹே ராம அவர்களின் உள்ளமே தாங்கள் உறைவதற்க்கு ஏற்ற எழில் மண்டபம்.

எவர்களுக்கு எஜமானன், தோழன், பிதா, மாதா, குரு எல்லாம் தாங்களோ அவர்களின் மனரூபமான கோயிலில் ஸீதாஸமேதராக தாங்கள் வாசம் செய்யுங்கள்.எவர்கள் அவகுணங்களை விட்டு ஸத்வகுணங்களை மட்டும் கைக்கொள்ளுகிறார்களோ, வேதியர்களின் பொருட்டும், பசுக்களின் பொருட்டும் துன்பங்களைப் பொருத்துக் கொள்கின்றார்களோ, எவர்கள் நீதியினாலும், ஒழுக்கத்தினாலும், உலகில் உயர்வை அடைகிறார்களோ அவர்களின் அழகான உள்ளமே உங்கள் உறைவிடம்.

எவர்கள் குற்றங்களைத் தன்னுடையதாகவும் குணங்களை உம்முடையதாகவும் கருதுகிறார்களோ, எல்லா விதத்திலும் உங்களையே நம்பியிருக்கிறார்களோ அவர்களின் ஹ்ருதயத்தில் நீங்கள் இருவரும் ஸீதாபிராட்டியுடன் நிவாஸம் செய்யுங்கள். ஜாதி, குலம், தனம், தர்மம், பெருமை, அன்புள்ள பரிவாரங்கள், இன்பத்தை அளிக்கும் இல்லம், எல்லாவற்றையும் துறந்து தங்களையே உள்ளக் கோயிலில் வைத்து பூஜித்து வருகிறார்களோ அவர்களின் தூய உள்ளமே தங்களுக்கு ஏற்ற உறைவிடம்.

எவ்ரகளுக்கு ஸ்வர்க்கமும், நகரமும் ஸமமோ, (ஏனெனில் ஸ்வர்க்கத்திலும் நரகத்திலும் கோதன்டபாணியாகிய தங்களையே காண்கிறார்கள்.)

எவர்கள் மனேவரக்கு, காயங்களினால் தங்களுக்கு அடிமையானவர்களோ, அவர்களின் ஹ்ருதயத்தில் கூடாரமடித்துக்கொண்டு வஸியுங்கள்.

எவர்கள் இயற்க்கையாகவே தங்களை நேசிக்கிறார்களோ, எவர்களுக்கு எப்பொதும் யாதொன்றும் தேவையில்லையோ, அவர்களின் மனதில் நிரந்தரமாக நிவாசம் செய்யுங்கள்.

இவ்விதமாக முனிபுங்கவரான வால்மீகி ஸ்ரீராமச்சந்திரன் வசிக்கத் தகுந்த யோக்கியமான இடத்தைச் சொன்னார்.

இறைவன் மனக்கோயிலையே கோயிலாகக் கொண்டவன். மனதைப் பரிசுத்தமாக்க வேண்டும். எவர்கள் தன்னலம் பேணாது அறவழியில் நின்று தன்

கடைமைகளைச் செய்கின்றார்களோ அவர்களே ஈசனுடன் ஒன்றி வாழ்கிறார்கள். அவர்களது உள்ளமே ஈசனது உறைவிடம்.