ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் சிவவழிபாடு (சிவராத்திரி, சிவபெருமானுக்கு சிறப்பான நாள் தென்னாடுடைய சிவனே போற்றி என்று நாயன்மார்களும் அவரைப் போற்றி ஏத்தியுள

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
சிவவழிபாடு

(சிவராத்திரி, சிவபெருமானுக்கு சிறப்பான நாள். தென்னாடுடைய சிவனே போற்றி என்று நாயன்மார்களும் அவரைப் போற்றி ஏத்தியுள்ளனர்.)

சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள். அன்பாக-அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக-ஈசுவரனாக , மங்களமாக-மறைப்பொருளாக எங்கும் நீக்க மற நிறைந்திருக்கும் அந்தப் பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமை

மிக்கது இந்தப் புண்ணிய பூமி. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன். உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. புராணங்கள் பகருகின்றன.

வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சிவபெருமான் ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.

' எங்கள் குழந்தைகளைக் காப்பாற்று ' ' எங்கள் பெற்றோர்களைக் காப்பாற்று ' ' எங்கள் பசுக்களைக் காப்பாற்று ' என்று சிவபிரானை வேண்டும் ரிக்குகள் ரிக்வேத மந்திரங்களில் வருகின்றன.

பசுபதி, பூதபதி பூதநாதர் என்பன வேதங்கள் ருத்திரனுக்குச் சூட்டும் சிறப்புப் பெயர்கள், சிவன் உக்கிரவடிவினன் ; ஜடாமுடி கொண்டவன், என்று ரிக் வேதத்தின் பிற்கால சூக்தங்கள் வருணிக்கின்றன.

சிவ வழிபாட்டின் மகிமையை முதல் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா சுவேதர உபநிஷதமாகும். ருத்திரனின் பேராற்றல்களை வருணிக்கும் அந்நூல் ருத்திர சிவவழி பாட்டுக்கு ஒரு திறவுகோல் எனலாம், சுக்லயஜுர் வேதத்தில் சிவனின் நூறு நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன. யஜுர்வேதம், ' நம சிவாய என்று முழங்குகிறது ' நம : சிவாய சிவதராயச ' என்பது யஜுர்வேத வாக்கு, மகாபாரதம், சிவபிரானின் ஆயிரம் நாமங்களை-சிவசகஸ்ர நாமத்தைக் கூறுகிறது.

பதஞ்சலி முனிவரின் ' மகாபாஷ்யம் ' சிவனின் பெருமையையும் சிவநடியார் இயல்புகளையும் சுவைபடச் சித்திரிக்கிறது. வியாசர் அருளிய ' சிவபுராணம் ' ஆதிசங்கரரின் ' சிவாநந்தலகிரி, அப்பைய தீட்சதரின் சிவார்க்கமணி தீபிகா ' ஆகியவை ஓப்பற்ற சிவபக்தி நறுமலர்கள்,

" சைவ சமயமே மிகப்பழமையானது, இப்பொழது உயிருள்ளதுமான சமயம் ; சிந்துசமவெளி எங்கும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன " என்கிறார் தொல்பொருள் அறினர் ஜான் மார்ஷல்.

ஈராஸ் பாரதியார் சிந்து சமவெளியில் " எணான் ' என்று வருவது எண் குணத்தான் என்னும் சிவனே என்று கூறி, சிவ வழிபாட்டின் தொன்மைமைச் சிறப்புக்கு ஒரு கோடி காட்டுகிறார். கிறித்துவ சகாப்தத்துக்குப் பல நுறு ஆண்டுகள் முற்பட்ட மொகஞ்சதாரோவில் கண்டெடுத்த முத்திரைகள் பலவற்றில் சிவ வடிவங்கள் காண்கின்றன. அவற்றில், ஒரு முத்திரையில் இறைவன், தவம் புரியும் ஞானக்கோலத்தில் யோகமூர்த்தியாகச் சித்திரிக்கப்பட்டிருகிறார். கி.மு. இரண்டாயிரம் நுற்றாண்டளவில் சைவம் தனிச் சமயமாகச் செல்வாக்குப் பெற்றுவிட்டது. காந்தாரநாடு சைவத்தின் நிலைகளனாக விளங்கியது. சக வம்சத்து அரசன் மோஹன் வெளியிட்ட செப்பு நாணயங்களிள் நந்தி உருவங்கள் பொறிக்கப்பட்டன. சிவலிங்க வழிப்பாட்டை நாடெங்கும் பிரபலப்படுத்தியவர்கள் நாகவம்சத்து அரசர்களே. ஆர்யாவர்த்தத்துக்குத் தென்புறத்தே இருந்த பாரசிவர், சுட்டு நாகர், மகாநாகர் ஆகிய  ¢ரச மரபினரா வழிப்பட்டதால் சிவனை தட்சிணாபதி, தெற்கத்தியர் என்று ஆரியர்கள் வழங்கினர். ரிக்வேதமும் ' தட்சிணாபதம் ' என்றே தென்னாட்டை குறிப்பிடுகிறது. இதனாலேயே இறைவனைத் ' தென்னாடுடைய சிவனே போற்றி !' என்று போற்றினர் போலும் ! சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. திருமாலுக்கும் பிரமனுக்கும் தம் சக்த்தியை உணர்த்ப் பேரொளிப் பிழம்பாக, அண்ணாமலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம். தென்னகத்தில் சிவசக்தி ஐக்கிய வடிவே லிங்கமாகக் கருதப்படுகிறது. ஆலயங்களில் சிவப்பிரான் லிங்க வடிவிலே எழந்தருளியுள்ளார். ஆந்திரத்து குடிமல்லம் ஆலயத்திலுள்ள சிவ லிங்கமே மிகப் பழமையான லிங்கத் திருமேனி என்று கருதுவர். அந்தக் கோயிலின் காலம் கி.மு. இரண்டு அல்லது

மூன்றாம் நூற்றாண்டாகும். இலிங்க தத்துவம், அவற்றின் அமைப்பு, லட்சணங்கள் ஆகியவை பற்றி மகுடாகமம் என்ற நூல் விரிவாகச் சொல்கிறது. தெய்விகம், அர்ச்சா, காணபம், மானுஷ்யம், என்று லிங்கங்கள் நான்கு வகையானவை. தெய்வீகம், அர்ச்சா என்ற இரண்டும் தேவர்களாலும் ரிஷிகளாலும் ஸ்தாபிக்கப்பட்டவை. காணவம் கணங்களாலும் மானுஷம் மனிதர்களாலும் வணங்கத்தக்கவை. காமிகாகவம், அறுவகை லிங்கங்களை குறிப்பிடுகிறது. அவை சுயம்பு, தெய்விகம், காணபம், மானுஷ்யம், அர்ச்சா பாணலிங்கம் என்பது சாலக்கிராமம் போன்றக் ஸ்படிகக் கற்களால் ஆனது இவை இயற்கையாகக் கண்டகி, ரேவா, நர்மதா போன்ற நதி தீரங்களில் கிடைக்கின்றன. மானுஷ்ய லிங்கம் என்னும் மனிதர்களால் கல்லில் செதுக்கப்படும். லிங்கம் மூன்று பாகங்களாக உருவாக்கப்படவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. விஷ்ணுபாகம், ருத்திரபாகம் என்னும் மேற்பகுதியே பூஜாபாகம் எனப்படுகிறது. பூஜாபாகத்திலேயே அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவை செய்தல் வேண்டும் என்பது பொது விதி. பிற்காலத்தில் தோண்றிய சில ஆகம நூல்கள் லிங்கத்தின் ருத்திரபாதம் என்றும் மேற்பகுதியில் பிரம்ம சூத்திரம் என்றும் சில நுட்பமான கோடுகள் அமைப்பது பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களால் அமைக்கப்படும் மானுஷ லிங்கத்துக்கு மட்டும் அமைத்தால் போதும் என்று நூல் கூறுகிறது.

நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் முதல் கொழும்பில் உள்ள திரிகோணமலை வரையில் தவப்பெருமையும் மிக்க புராதனமான சிவாலயங்கள் பல உள்ளன. தேசம் முழுவதும் சைவம் கொடிகட்டிப் பறந்ததை நாட்டில் பரவலாக அமைந்து போற்றப்படும் கீர்த்திமிக்க பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களிலிருந்து அறியலாம். கொடியவன் கஜினிமுகம்மது அழித்த சோமநாதபுரத்துச் சிவலிங்கம் உஜ்ஜயினி மாநகரத்துச் சிவலிங்கம், நர்மதை நதிக்கரயில் உள்ள ஓங்காதநாதர், இமயமலைச் சாரலில்லுள்ள கேதாரீசுவரர், கர்நூல் மாவட்டத்துச் ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனர், இராமேசுவரத்தில்லுள்ள இராமநாத சுவாமி ஆகியவை. அவை சிவலிங்கங்கள், தமிழ் நூல்களில் அண்டலிங்கம், பிண்டலிங்கம், ஆன்மலிங்கம், ஞானலிங்கம் எனக் குறிப்பிடுகின்றன.

பஞ்சபூதத் தலங்கள் என்னும் ஐந்து தலங்கள் சிவபெருமானுக்கு சிறப்பாக உரியவை. அவ்விடங்களில் இறைவன் நீர், பூமி, வாயு, அக்கினி, ஆகாயம் ஆகிய ஐந்து

பூதங்களோடு தொடர்பு கொண்டு விளங்குகின்றான். திருவாரூரில் பிருதுவி (பூமி) வடிவமாகவும், ஜம்புகேஸ்வரத்தில் அப்பு (நீர்) வடிவாகவும், காளஹத்தியில் வாயு வடிவமாகவும், திருவண்ணாமலையில் அக்னி வடிவாகவும் சிதம்பரத்தில் ஆகாய வடிவிலும் சிவபெருமான் விளங்குவதாக ஐதீஹ்யம். இந்தப் பஞ்சபூதத் தலங்களுடன் சிவபெருமானின் தலங்களுடன் சிவபெருமானின் கருணைக்கும் கனிவுக்கும் சான்றாக விளங்கும் புனிதத் தலங்கள் எண்ணற்றவை உள்ளன.

தென்னாடுடைய சிவனே போற்றி என்று குறிப்பிடுமளவிற்க்கு அப்பெருமானை தென்னகத்தின் நாயகனாகிய பெருமை நாயன்மார்கள் என்ற சைவ அடியார்களுக்கே உரியது. அவர்கள் சொல்லோவியம் தீட்டித் தேவாரமும் திருவாசகமும் புனைந்தார்களென்றால், நாடாண்ட மன்னர்கள் கல்லோவியம் தீட்டி வானளாவும் ஆலயங்களை எழுப்பி மண்ணிலே விண்ணைக்கண்டனர்.

A.H. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ வேந்தன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தைச் சார்ந்திருந்து பிறகு திருநாவுக்கரசர் முயற்சியால் சைவரானதை வரலாறு கூறுகிறது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த தஞ்சை கண்டராதித்தினின் மனைவி செம்பியன் மாதேவி தம் கணவனையே சிவலிங்கமாகப் பூஜித்தாலாம்.

சிவ வழிபாடு பிற நாடுகளிலும் செல்வாக்குப் பெற்று விளங்கியதையும், கடல்

கடந்த நாடுகளில் சிவாலயங்கள் உள்ளதையும் வரலாறு கூறுகிறது. அமெரிக்காவில் கொலஹடே ஆற்றங்கரையில் பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சிவாலயம் இருந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பிலிப்பைன்ஸ் மக்கள் சிவனைச் சிவப்பன்

என்று வழங்குகின்றனர். ஆசியாவில் சிவாஸ் என்று ஒருநகர் இருக்கிறது. அங்கே சிவவழிபாடும் ரிஷப வழிபாடும் இருந்தன. இந்தோனேசியாவில் இப்போதும் சிவாலயங்கள் உள்ளன. இலங்கையில் சிவன் ஒளி பாதமலை இருக்கிறது. ஜப்பானியரின் புராதனத் தெய்வம் சிவோ என்பது. பின்லாந்து மக்களின் காவல் தெய்வம் சிவனே கொரியாவில் வீதிதோரும் சிவாலயம் அமைத்து வழிபட்டனர். பாபிலோனியாவின் களிமண் ஏடுகளில் சிவன் என்பது மாதப் பெயராகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அக்கேடிய மக்களின் ஏழுமுக்கிய நட்சத்திரப் பெயர்களில் சிவன் என்பதும் ஒன்று. எகிப்திய நதிக்கரையில் சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சயாம் மன்னரின் முடிசூட்டு வைபவத்தில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை லோரெம்பாவாய் என்று பாலிலிபியில் எழுதிப் படிக்கப்பட்டு வந்தது.

சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் பலவற்றைச் சிவ புரானங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஞான மார்கத்துக்கு வழி காட்டும் சைவம் நளினக் கலைகளையும் வளர்த்து வந்திருக்கிறது. சிற்ப எழில் மிக்க அற்புத ஆலையங்கள் வரிசையில் வடபுலத்தில் உள்ள குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாஜ்ரா மகாதேவர் ஆலையம், அல்மோராவை அடுத்த பீனேஷ்கர் ஆலயம், கேதாரிநாத் கஜுரஹோ மகாதேவர் கோயில்கள், உஜ்ஜைனி, புவனேசுரம், நாசிக் மகேசுவரர் திருக்கோயில்கள், தென்புலத்திய் கர்நாடகத்தில் சிருங்கேரி வித்யாரண்யர் ஆலையம், நஞ்சன்கூடு நஞ்சுண்டேசுவரர் கோயில், ஸ்ரீசைலம், காளஹத்திக் கோயில்கள், கேரளத்துவைக்கம், எட்டுமாணுர், வடக்குநாதர் ஆலயங்கள், தமிழகத்தில் சிதம்பரம், மதுரை, குடந்தை, தஞ்சை, காஞ்சி, திருவண்ணாமலை, இராமேசுவரம், மயிலை ஆலயங்கள் ஆகியவை தலப் பெருமையும், கலைப்பெருமையும் இணைந்தவை.

தமிழகத்தில் இந்தியர் சிற்பக் கலைக்குப் பெரும் பணிபுரிந்த பல்லவர், பாண்டியர், பல்லவர், சோழர், விஜயநகர அரசர்கள் கைவண்ணத்திலும், மெய்வண்ணத்திலும் மலர்ந்த ஆலயங்கள் பலவற்றில் ஆகமங்கள் வருணிக்கும் அரனின் அழகு வடிவங்களைக் காண்கிறோம். சிவபெருமானின் அர்த்தநாரீச்சரர், சோமாஸ்கநாதர், ஹரிஹரர், தட்சிணாமூர்த்தி கல்யாண சுந்தரர், கங்காதரர், பைரவர். சண்டேச அனுக்கிரகமூர்த்தி ரிஷபாருடர், உமாசதகர், சரபமூர்த்தி, சகாசனர் விருஷாபஹரணா ஆகிய திருக்கோலங்களைக் கல்லிலும், செம்பிலும் கண்ணாரக்காணலாம்.

சிவபெருமான் ஆடும் அழகன். தமிழகத்துக் கலைப்படைப்புகளில் ஆடல் தேவனின் அழகு வடிவங்கள் தனிஇடம் பெற்றவை. பிறை சூடிய பெருமான் கலைக்கு ஒரு தெய்வம் அல்லவா. அழகுக் கலைகள் அவனைச்சரணடைந்ததில் வியப்பில்லைதான். சிவதாண்டவத்தின் பேரெழிலை, தத்ரூபமான படப்பிடிப்பை, திருவெண்காடு, திருவாலங்காடு, நல்லூர், குடந்தை நாகேசுவர ஆலையப் படிமங்களில் காணலாம். சிவலீலைச் சிற்பங்களைச் சித்தரிக்கும் தமிழகத்துக் கோயில்களில் பல்லவர் படைத்த காஞ்சி கைலாயநாதர் ஆலயம், திருச்சி மலைக்கோயில், சோழர் சமைத்த தஞ்சை பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம் ஆலயங்கள் பாண்டியரின் கழுகுமலைக் குகைக்கோயில், பல மன்னர்கள் பாங்கோடு உருவாக்கியதில்லை. மதுரை ஆலயங்கள் சுசீந்தரம் தாணுமாலயப் பெருமாள் கோயில் ஆகியவை காலம் போற்றும் கற்காவியங்களாக விளங்குகின்றன.

சிவபெருமானுக்குச் சிறப்பாக உரிய திருநாட்கள் மூன்று. மஹா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை நாட்கள் சிவ மகிமையை உணர்த்துகின்றன.

இத்திருநாட்களின் பழமைச் சிறப்பை ஆலயக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆந்திரத்து ஸ்ரீ சைலத்திலுள்ள மல்லிகார்ஜுனர் ஆலய முகமண்டபத்தில் சிவராத்திரி நாளில் விஜய நகர வேந்தர் ஒருவர் அந்த மண்டபத்தை அக கோயிலுக்கு வழங்கியதாகக் கல்வெட்டுகள் உள்ளன. சிவராத்திரி வழிபாட்டுக்காகக் சோழ மன்னன் ஒருவன் திரவியதானம் அளித்ததாகக் திருச்சிக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. திருவள்ளுரை அடுத்த திருப்பாசூரில் உள்ள சிவாலயக் கல்வெட்டு அந்நாளில் ஆடும் அழகனுக்கு ஆதிரைவிழா எடுக்கப்பட்டதை அறிவிக்கிறது. தஞ்சை மாவட்டத்துத் திருக்கோடிக்காவலில் உள்ள மற்றொறு கலிவெட்டு சோழ வேந்தன் குலோத்துங்கனின் முப்பத்து நான்காம் ஆண்டில் தில்லையம்பல விழுப்பரையன என்பான் நடராஜப்பெருமானுக்கு ஆதிரை நாளன்று அபிஷேகம் செய்விப்பதற்காக நிலமளித்த செய்தியைச் சொல்கிறது. இக்கல்வெட்டுக்கள்யாவும் பன்னுறு ஆண்டுகளாகச் சிவனுக்கு உரிய திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வந்திருப்பதையும் சிவவழிபாட்டின் பழமைச் சிறப்பையும் பறைசாற்றுகின்றன.

சிவவழிபாடு காலத்தைவென்று ஞானத்தில் நிலை கொண்டது அவலங்களை விரட்டி அருள் ஒளிபெற அந்த ஞான மூர்த்தியைப் போற்றுவோம். ஹர ஹர மஹாதேவா.

சமய பயிற்சி எல்லோரும் பெற வேண்டும்.

இந்து மதம் என்பது அநாதியானது. எவ்வாறு நில இயல் வள்ளுநர்களாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்களாலும் உலகம் தோண்றியகாலத்தையும், மனிதன் தோன்றிய காலத்தையும் சரியாக நிர்ணயிக்க முடியவில்லையோ, அதுபோல இந்து மதமும் அநாதியானது. எவ்வாறு மற்ற மதங்களைத் தேதியிட்டுக் கூற முடியுமோ அது போல் இம்மதத்தைக் கூற முடியாது. உலகமும் மனிதனும் தோன்றியவுடன் பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பித்தன. அத்துடன் அதற்கான தீர்வும் தோன்ற ஆரம்பித்தன. இதுதான் இந்து சமயம். இம் மதம் அநாதியானது என்பதற்க்கு சூரிய சந்திரனை நாம் ஒப்பிடுகிறோம். நான் இந்து நாடான நேபாளம் சென்றிருந்தபோது, அந்நாட்டின் தேசியக் கொடியில் சூரியன் சந்திரன் இருந்திருந்தது. சூரிய சந்திரனுக்கு எவ்வாறு அழிவு என்பது இல்லையோ, எவ்வாறு அது பழமையானதோ, எவ்வாறு அது தோன்றிய காலம் நிர்ணயிக்கப்பட முடியாததாக உள்ளதோ, அவ்வாறே இந்து மதமும், சூரியன், உணர்ச்சி, வேகம், சுறுசுறுப்பு இவைகளுக்கு உதாரணமாகவும், சந்திரன், சாந்தம், அமைதி இவைகளுக்கு உதாரணமாகவும் இருக்கின்றன. இதுவே இந்த மதத்தின் சின்னங்களாக இருக்கின்றன சுரியனும் சந்திரனும் இந்த உலகத்தில் ஒரு பகுதியில் தோன்றும் பொழது மற்றொரு பகுதியில் மறைந்திருக்கிறது. அவைகளுக்கு அஸ்தமனம் என்பதே கிடையாது. சில சமயங்களில் சுரியனும், சந்திரனும் மேகங்களால் மறைக்கப்படலாம். அது போலவே சில சமயங்களில் இந்து மதமும் மறைக்கப்பட்டது போல் காணப்படுகிறது. மற்ர தெய்வங்கள் போல் அல்லாமல் சிவலிங்கம் தோன்றிய உடனே அதற்கு ஒரு கலை (சக்தி) சக்தி தோன்றுவது போல் அமாவாசை அன்று சந்திரனுக்கும் ஒரு கலை மறையாமல் இருக்கிறது. அது போலவே இந்து சமயம் மறைந்து இருந்தாற் போல் தோன்றிய காலத்திலும் சத்தியம், தர்மம் என்ற இவைகளினால் அது மறையாமல் இருக்கிறது. இவ்வாறு குழப்பங்களை அகற்றி தனி மனிதன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே இம்மதம் உள்ளது. இந்து சமய மாணவர் மன்றம் மதத்தின் அடிப்பக்கொள்கைகளை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதின் முலம் இப்பணியை செய்துவருகிறது. 480 கிளைகள் கொண்ட இதில் மதுரை இந்து சமய மாணவர் மன்றம் சிறப்பாகச்செய்து வருகிறது. இதில் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் பல பயிற்ச்சி வகுப்புகள் முலமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. மற்றும் தியானம், பஜனை போன்ற நல்வழிகள்

முலமாக மனிதனை நல்வனாக்குகிறது. தனி மனிதன் வாழ்வு தூய்மையாக இருந்தால் துன்பம் வராது. ஒரு குடும்பத்தில் ஒருவராவது இப்பயிற்சியைப் பெறவேண்டும். அதுவே அக்குடும்பத்திற்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். இவ்வாறு குடும்பம் தூய்மை அடையும். அதைத் தொடர்ந்து நகரம் தூய்மை அடையும். அதைத் தொடர்ந்து நாடு தூய்மை அடையும். இப் பயிற்சியின் மூலமாக மாணவர்களை தூய்மை அடயச்செய்வதின் மூலம் தாய், தந்தை, ஆசிரியர்கள் இவர்களுடைய பிரச்சனை நீங்குகிறது. நல்ல சூழ்நிலை ஏற்படுகிறது. மாணவன் தூய்மையடைய பெற்றோர்களும் மதத்தைப்பற்றி அறிந்து இருக்கவேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு இருப்பார்களோ அவ்வாறே புதல்வர்களும் இருப்பார்கள். நல்ல குடும்ப சூழ்நிலையுள்ள இடத்தில் புதல்வர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இந்த நல்லனவற்றை நமது பண்ராடு, கலாச்சாரம், தத்துவம், வேதம், சரித்திரம், புராணங்கள் இவைகள் தெரிவிக்கின்றன. நான் திண்டுக்கல்லில் பேசும் போது ஒரு சிருவன் எழுந்து தன்னால் கடவுளைக்காண முடியுமா எனக்கேட்டான். நான் பதில் அளிக்கையில், எவ்வாறு நாம் அத்தியாவஸ்யமான தேவைகளுக்கு முயற்சி செய்கிறோமோ அதுபோலவே கடவுளைக்காண முயற்ச்சிசெய்ய வேண்டும். துன்பம் இல்லாத ஒரு பொருள் ஒன்று கூற வேண்டுமானால் அதுவே கடவுளாகும். அக்கடவுளைக்காண சில அருகதைகள் வேண்டும். அதாவது இந்தத் தூய்மை, உடல், உடை இம்மூன்றிலும் வேண்டும். இம்மூன்று தூய்மைகளும் அமைந்து விட்டால், உள்ளத் தூய்மை தானாகவே வந்துவிடுகிறது. தூய்மை என்பது பனிதத்துவத்தைக் குறிக்கிறது. முதலில், உடலிலும், பிறகு உணவு உடைகளிலும் இபிபுனிதத்துவம் ஏற்பட வேண்டும் இம்மூன்றும் வரும்போது உள்ளம் தூய்மையடைந்து உள்ளளி பெருகுகிறது. கடவுளைக்காணவேண்டும் என்றால் அகத்தூய்மை என்ற அருகதை வேண்டும், இத்தூய்மை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதே இந்து சமய மாணவர்மன்றத்தின் பணியாகும்.