மன அழுத்தம்/ மன உளைச்சல் பெண்களுக்குத்தான் ஆண்களை விட மன அழுத்தம் இன்றைய கால கட்டத்தில் அதிகம் தென்படுவதாக ஒரு Survey கூறுகிறது ஆனால் நாம் இவ்விஷயத்தை முன்பே அறிந்துள

மன அழுத்தம்/ மன உளைச்சல்

பெண்களுக்குத்தான் ஆண்களை விட மன அழுத்தம் இன்றைய கால கட்டத்தில் அதிகம் தென்படுவதாக ஒரு Survey கூறுகிறது. ஆனால் நாம் இவ்விஷயத்தை முன்பே அறிந்துள்ளோம். ஏனென்றால் அவர்கள் செய்யும் வேலை, கணவர், குழந்தைகள், பணவரவு செலவு, சூழ்நிலை மற்றும் குடும்ப எதிர்காலம் ஆகியவற்றால் பெண்களுக்கு மன உளைச்சல் ஆண்களைவிட அதிகம் இருப்பதாக தெரிகிறது, வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்முடைய பொறுப்புகள் அதிகமாவதை உணறும்போது உடல்மட்டுமின்றி மன அளவிலும் மிகுந்த தளர்ச்சியைஅந்த எண்ணமே ஏற்படுத்துகின்றது.

மன உளைச்சல் சில சமயங்களில் நாம் அறியாமலேயே நம்மேல் திணிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு வேலையை இழத்தல் அல்லது நோய் வாய்ப்படுதல் முதலியன, சில விஷயங்களை நாம் அறிந்தே துன்புறுகிறோம். உதாரணத்திற்கு நாம் செய்யும் வியாபாரம் நஷ்டம் ஏற்படும் போது இன்னும் சிறிது காலம் செய்து பார்க்கலாம் என்று நினைத்து கடன் வாங்கியும் வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியாமல் கடனாளியானவர் ஏராளம். மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் நம்மால் நிச்சயமாக அடக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்திய மன அழுத்த விஷயங்களைக் கூட மனவலிமையினால் அமைதியைப் பெறமுடியும் என்பதே!உதாரணத்திற்கு வேலை போய் விட்டது, ஆனால் செலவுகளை சரிவர திட்டமிட்டு செய்தவருக்கு வங்கிக் கணக்கில் கணிசமான அளவு சேமிப்பு இருக்குமானால், வேறு ஒரு புதிய வேலை கிடைக்கும் வரை இந்த சேமிப்பை உபயோகப்படுத்தி குடும்பத்தை காப்பாற்றினால் மன அழுத்தம் ஏற்படாது. உணவுப் பழக்கம் சீரான வகையில் வைத்துக்கொள்ளுதல். உடற்பயிற்சி, வேண்டிய அளவு உறக்கம் ஆகியவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மன அழுத்தம் ஏற்படாமலும் நோய் வராமல் தடுப்பதற்கும் மிக அவசியமாகும். நம்மால் மன அழுத்தத்தை முழுவதுமான நீக்க முடியாவிட்டாலும் அதனுடைய பாதிப்பால் ஏற்படும் உடல் மற்றும் மன உபாதைகளை குறைக்க முடியும்.

கீழ் காணும் சில பழக்கங்கள் நம் மனம், உடல் ஆகியவற்றிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் மன உளைச்சல் சமாளிக்க முடியாமல் போகக்கூடும். அது போலுள்ள சமய சந்தர்ப்பத்தில் உடல் மற்றும் மனவலிமையை ஒன்று திரட்டுவது. மறுபடியும் புத்துணர்ச்சி ஊட்டி எவ்வாறு பாதிப்புகளை சமாளிப்பது போன்றவற்றை காண்போம்.

மன அழுத்தத்திற்கு அவசர சிகித்ஸை

திடீரென்று மன உளைச்சலை ஏற்படும் நிகழ்ச்சிகள் சம்பவிக்கும் போது அவசர சிகித்ஸை தேவைப்படுகிறது. சில வேதியல் மாற்றங்கள் உடலில் ஏற்படும் போது மன அழுத்தம் உண்டாகிறது. அதற்கு காரணம் -

தன் நிலை இழத்தல்

உணர்ச்சிப் பெறுக்கு

தன்னைத் தானே குறை கூறுதல்

நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப்பற்றி நினைத்து அதிக கவலையுறுதல்

அச்சம், கோபம், சோர்வு மற்றும் கவலைகள் அதிகமாய் ஏற்படும் போது.

வேண்டத்தகாத ஒரு விஷயம் நடக்கும்போது, சில விநாடிகளிலேயே சங்கிலித் தொடராக மன அழுத்தத்தின் விளைவாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளையில் முக்கிய நரம்புகள் தூண்டப்பட்டு அவ்விஷயத்திற்கு எதிரான செயல்களை செய்ய மூளையில் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. செய்திகளை சுமந்து செல்லும் மூளை நரம்பு மண்டல வேதியல் கூறுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு நம்மை அவ்விஷயத்தினை எதிர்க்கச் சொல்லியோ அல்லது தப்பிப்பதற்கோ ஆணைகள் பிறக்கின்றன. இதை தடுப்பதற்கு அல்லது எதிர்த்தல், ஓடிவிடுதல் ஆகிய நிலைகள் மாறி அமைதி ஏற்படுவதற்கு சம்பவம் நடக்கும் இடத்திலேயே மனோதத்துவ நிபுணர்கள் கூறும் வழிகள்.

மூச்சை நன்கு இழுத்துவிடங்கள்.

மனம் மற்றும் உடலை அமைதியுறச் செய்யுங்கள்.

கேளுங்கள், சாந்தமாக மனதை இருக்கச் சொல்லி.

நாம் முன்பு அமைதியுடன் இருந்த நேரங்களை நினைவாற்றலில் கொண்டுவரவும்.

அமைதியான எண்ண அலைகள் மனதில் ஏற்படுவதினால் உண்டாகும் வித்தியாசத்தை உணருங்கள்.

மன உளைச்சல் நம்மை மீறும்போது, மூன்று அல்லது ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுங்கள். இப்படிச் செய்வதால் நமக்கு இரு நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக படபடப்பான நிலைகளில் சிறிது நேரம் மூச்சுவிடுவதற்காக எடுத்துக் கொள்வதால் அந்த கால அவகாசமே நமக்கு படபடப்பு குறைய வழி வகுக்கிறது. இரண்டாவதாக Neo Cortex என்ற சிந்தனா சக்தியை உடைய மூளைபாகமானது, வசப்படவும், அதிக பிராண வாயு கிடைப்பதன் பயனாக நல்லுணர்வை வெளிப்படத்தும் dopamine மற்றும் Serotonin என்ற வேதியல் செயல் கூறுகளை அனுப்புகின்றது. இதன் மூலமாக நம்முடைய தீர்மானங்கள் மிக்கவாறும் சரியாக அமைவதால் பின்நாளில் அதிகம் வருந்தும் நிலை ஏற்படுவதில்லை.

மன அழுத்தத்தினால் தசைகள் உடலில் இறுகுகின்றன. சிறிது நேரத்திலேயே உடல் தளர்ச்சி அடைவதை உணர்கிறோம். தசைகள் இறுகுவதால் உடல் சக்தி வீணாகிறது, மூச்சை சீராக இழுத்துவிட்டுக் கொண்டே அமைதியாக 'relax' அல்லது ஒரு பிடித்த வார்த்தையையோ மந்திரம் போல சொல்லவேண்டும். ஒரு கட்டளையாக மனம் வழியாக உடலுக்குச் செல்வதால் உடல் மறுபடியும் அமைதியான நிலைக்கு திரும்புகிறது.

மன உளைச்சலுக்கு எப்போதும் ஒரு காரணமாயிருப்பது நம் எண்ண அலைகளே, 'எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவன் ஏன் இவ்வாறு தவறு செய்கிறான்? போன்ற எண்ணங்கள் நம்முள் ஆரோக்யமில்லாத தன்மையும் அதன் மூலம் மேலும் மன அழுத்தம் அதிகமாவதை அறியலாம். இப்டி தவறான எண்ணத்தை நிறுத்தி நான் இந்த படபடப்பான நிலையில் என்ன எண்ண வேண்டும்?' அமைதி, நம்பிக்கை, தெய்வத்தினருகாமை, உணர்வுகளை கட்டுப்படுத்தல் போன்றவை நல்ல பலனைத்தரம், நம்முடைய எண்ணங்களே நாமாகிறோம் என்று பெரியோர் கூறுவர்.

படபடப்பான நேரங்களில் அமைதியை விரும்பும்போது நாம் முன்னொரு சமயத்தில் இந்த இடத்தில் எவ்வளவு அமைதியுடனிருந்தோம் என்ற எண்ணமே படபடப்பைக் குறைத்து மன அழுத்தம் நீங்க உதவுகிறது, மூளையில் புதைந்துள்ள இந்த ஞாபக சக்தி தூண்டப்படுவதால் மனதிற்கு அமைதிதானே வந்துவிடும்.

இறுதியாக சிந்தனை செயல்திறன் வழியாக நாம் மேற்கொள்ளும் மன உழைப்பின் பயனாக ஏற்படும் மாற்றங்களை சிறுது நேரம் எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள். சரியான சிந்தனை, மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்திய விஷயத்திலிருந்து படபடப்பான நிலை விலகி மனம் சாந்த நிலையை அடைய உதவுகிறது. மட்டுமின்றி அடுத்த நமது நிலையான தீர்மானத்தை அமைதியான மனதினால் எடுக்கமுடிகிறது. மேல்குறிப்பிட்ட வழிமுறைகள் நினைவில் சுலபமாக வைத்துக் கொள்ளவும். மன உளைச்சலில் சரியாக உபயோகத்தில் கொண்டுவரவும் எளிமையான வழிகள், உடல் மற்றும் மனம் இரண்டும் நெருங்கிய தொடர்பு உள்ளதை பல ஆராய்சிசாயளர்கள் நிரூபித்துள்ளதால், அவகைளை கட்டுப்பாட்டில் வைக்க மேலுள்ள வரிகள் உதவுகின்றன.

மனவலிமை குன்ற காரணங்கள் -

அதிகமாகவும் கட்டுப்பாடில்லாமலும் T.V. பார்ப்பது

T.V. news, ரேடியோ மற்றும் பத்திரிக்கைகள் அதிகமாக பார்ப்பது, கேட்பது, படிப்பது.

குறை கூறுபவரிடையே, வேலை அதிகம் வாங்குபவர்களிடையே மற்றும் வீட்டிலும் அதே நிலை.

தன்னைத்தானே குறைகூறிக் கொள்வது

அதிக கவலை

பிடிக்காத சூழ்நிலையில் வாழ்க்கை

பணப்பிரச்சனை மற்றும் ஊதாரித்தனம்.

கொடுத்த வேலையை முடிக்காமலிருத்தல்

சண்டை. சச்சரவுகளை தீர்க்காமலிருப்பது.

உடல் வலிமை காரணங்கள்

சிகரெட் குடித்தல்

மது அருந்துதல்

கஞ்சா, அபின் உபயோகம்

சத்தில்லாத உணவு

சர்க்கரை வியாதி

அதிக காபி, டீ.

உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்.

உடல் பருமன்

போதிய உறக்கம் இல்லாமலிருத்தல்

எப்போதும் படபடப்பு, அவசர செயல்கள்.

ஆன்மீக வலிமை குன்ற காரணங்கள்

வெளியே சொல்வதற்கு பயந்து விஷயங்களை மனதிலேயே பூட்டி வைத்தல். செய்ய விருப்பமில்லாத செயலை வலுக்கட்டாயமாக செய்தல் விருப்பமில்லாத தொழிலை வேறு வழி தெரியாமல் அதையே செய்து கொண்டிருத்தல் சுமுஹமில்லாத நட்பும்,உறவும் வளமிக்க வாழ்க்கையை அடைந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆரோக்யமான வாழ்க்கை முறையை கூறுபவர்கள், தியானம் மற்றும் அதுபோலுள்ள மனதை அமைதியுறச் செய்யும் வழிகள் மட்டுமே நலமிக்க வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் வசதிக்கும், மருத்துவச் செலவுகளை குறைக்கவும் உன்னதமான முறை என்று அறிந்துள்ளனர், மிக முக்கியமாக, தியானப்பயிற்சி இன்றைய மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கு காரணமாகவுள்ள காலகட்டத்தில், வாழ்க்கையை எப்பபடி சிறப்பாக அமைத்துக் கொள்வது என்ற படிப்பினையும்.அது மூலம் நலமான வாழ்கைகைக்கும் பெரிதும் உதவுகிறது.

நமது அன்றாட அலுவல்களாகிய - வேலை, குழந்தை பாதுகாப்பு, சமையல் போன்றவை அவசர கதியில் உள்ளதால் நம்முள் கவலை என்னும் சங்கிலியால் பிணைக்கப்படுவது போல் உணர்கிறோம். கவலை சங்கிலியை அவிழ்த்து விட மிகச்சிறந்த வழி உடற்பயிற்சிதான்.

உடற்பயிற்சியின் மூலமாக மூளையில் உள்ள நரம்பு மண்டலம் வேகமாக செயல்படத்தொடங்குகிறது, CORTISOL என்ற HORMONE உடல் முழுவதும் நிரம்புகிறது, இதயத்துடிப்பு அதிகமாகிறது, மூச்சு வேகமாக செயல்படுகிறது. ரத்த அழுத்தம் உயர்கிறது. தசைகள் முறுக்கேறுகின்றது. சிரத்தை விஷயங்களில் கூர்மையாகிறது. மன அழுத்த நிலைகளில் பெண்களுக்கு இவை அனைத்தும் ஏற்படுகின்றன. ஆனால் உடறப்யிற்சியிலும் இவ்வாறு ஏற்படுவதால் மன அழுத்தத்தை அது நன்கு நீக்கிவிடுகிறது. மனம் அமைதியடைவதை காணலாம், சைக்கள் மிதிப்பது. ஒரே இடத்தில் குதிப்பது போன்ற தொடர்ந்து ஒரே மாதிரியான அங்க அசைவுகளை கொண்ட உடற்பயிற்சிகள், தியானத்தினால் மூளையில் ஏற்படும் நன்மைகளை இவ் உடற்பயிற்சியினாலும் கிடைக்கப் பெறுகிறோம், உடற்பயிற்சியின் பலனை ஜெர்மன் அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார், "மலை ஏறுதல் என்ற உடற்பயிற்சியை சில மணி நேரங்கள் செய்யும் ஓரு மூடன், தியானத்தால் உயர்வைடந்த ஒரு ஞானியும் ஒரே நிலையிலுள்ளவர்களர்வார்கள்!" (மூளையில் ஒரேவித மாற்றங்கள் நடைபெறுவதால்)

மன அழுத்தம் தவிர்த்திட நல்ல உறக்கம் இரவில் தேவை. ஆழ்ந்த உறக்கம் நமது நரம்பு மண்டலங்களை நன்கு வேலை செய்ய உதவுகிறது. நரம்புகளில் ஒத்துழையாமையினால் கவனம் சிதறுதல், ஞாபக சக்திமற்றும் விவேகம் ஆகியவை குறைந்து விடுகின்றன, ஆழ்ந்து உறக்கத்தினால், உடல் அணுக்கள் நிறைய புரதங்களை உற்பத்தி செய்கின்றன, அணுக்களின் வளர்ச்சி, மன அழுத்தம் மற்றும் புற ஊதாக் கதிர்களினால் உடலில் ஏற்படும் உடல் அழிவு ஆகியவை இந்த புரத உற்பத்தியினால் காக்கப்படுகின்றன. மூளையில் ஞாபக சக்தியை கொண்டுள்ள இடத்தில் நாம் புதிதாக கற்றுக் கொண்ட விஷயத்தை நன்கு பதிய வைப்பதற்கு ஆழ்ந்த உறக்கம் பெரிதும் உதவகிறது, உறக்கமின்மையினால் ஆரோக்யம் கெடுதல், நெஞ்சுவலி, மூட்டுகளில் வலி, மனசோர்வு, தினப்படி வேளைகளில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன, தற்காலிகமாக உறக்கம் குறைந்தாலும் கூட Carbohydrates உடலால் உடைப்பது, Harmone வேலைகளில் மாற்றங்கள், சர்க்கரைவியாதி- ரத்தக் கொதிப்பு ஆகியவை மிக மோசமான நிலைகளை அடைதல் என்பவை ஏற்படுகின்றன. சீரான உடற்பயிற்சி. எண்ணைக்குளியல் யோகாசனம், தியானம் வாசனைப் பொருட்களால் குளியல் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை நாம் பெற்றிட விடாது முயற்சிகள் செய்ய வேண்டும்.

மனவலிமை அதிகம் பெற வழிகள் -

பிடித்த புத்தகங்கள் அல்லது ஒலிநாடாக்களை படித்தல் (அ) கேட்பது மனதிற்கு இன்பம் தரக்கூடிய நண்பர்கள் (அ) பந்துக்கள் ஆகியோருடன் நேரத்தைக் கழிப்பது.

வேண்டுமளவு வங்கிக் கணக்கில் பணம் வைத்திருத்தல், அத்யாவசியமான செலவுகளை மட்டுமே செய்தல்.

தங்குமிடம் சுத்தமாகவும், பொருட்களை சரியான இடங்களில் வைத்தல் பழைய சண்டை சச்சரவுகளை எதிர்கொண்டு அவைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.

உடல் வலிமை பெற வழிகள் -

சத்துள்ள உணவுகள்

குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர்

வெளிச்சம்

உடற்பயிற்சி

நிறைய உறக்கம்

மற்றவரின் அதிகாரம் இல்லாமல் வேலைகளை நம்மால் முடிந்த வேகத்தில் செய்தல்

யோகா, எண்ணைக் குளியல்

வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தல்

பாராட்டுக்களும், அரவணைப்பும்.

நாமும், பிறரும், என்றென்றும் மன உளைச்சலை தவிர்க்க, செய்யும் வேலைகள் சிறப்பாக இருப்பின் அவர்களை மனதாரப் பாராட்டுவது, ஊக்குவிப்பது, வேண்டிய உதவிகைள செய்வது என்பதே. நம்மைப் பற்றி பிறர் எண்ணும் போது மனதில் சந்தோஷத்தை நீங்கள் ஏற்படுவீர்களானால் மன உளைச்சல் என்ற பிரச்சனை எப்போதும் இராது என்பது நிச்சயம்.

- எஸ். சுவாமிநாதன்,பேராசிரியர்,ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஆயுர்வதே கல்லூரி.