சுதந்திர இந்தியாவில் கலாசாரக் குழிபறிப்பு

சுதந்திர இந்தியாவில் கலாசாரக் குழிபறிப்பு

'முன்னெல்லாம்' என்றால் நம்முடைய கலாசாரத்திற்கு நன்றாகக் குழி பறித்த வெள்ளைக்காரர்களின் காலத்தில் அவர்களுக்கும் மனஸ்ஸாக்ஷி உறுத்தி, அங்கே அங்கே, சில நல்லதும் பண்ணியதில் இப்படியன்று பாடத்திட்டத்தில் சேர்த்திருந்தார்கள். ஸ்வதந்திரம் என்பதாக நமக்கு வந்து தேச கலாசாரம் விருத்தி செய்யப்படுவதாகச் சொல்லப்படும் தற்காலத்திலோ, அங்கங்கே உள்ள சின்ன மாறுபாடுகளை ஊதிப் பெரிது பண்ணிப் பிரதேச கலாசாரம் என்று தாங்களாகவே ஸ்ருஷ்டி செய்திருக்கும் ஒரு குறுகின ஏற்பாட்டால், தேசம் முழுதற்குமே ஏற்பட்ட கலாசாரத்தை அமுக்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இதன் நிகர விளைவாக, கலாசாரக் குழிபறிப்பில் நம்மவர்களே வெள்ளைக்காரனை விட ஆழக் குழித்தோண்டி அவனையே நல்லவனாக்கியிருக் -கிறார்கள்!கடைசியில் நடைமுறையைப் பார்த்தாலே மத்த தேசம் முழுதற்குமான கலாசாரமோ, இட்டுக்கட்டி உண்டாக்கியுள்ள ப்ரதேச கலாசாரமோ எதுவும் ஜனங்களின் வாழ்முறையில் வராமல் அது வெள்ளைக்கார மோஸ்தரிலேயேதான் முன்னைவிட வேகமாக, ஆழமாக இறக்கிக் கொண்டிருக்கிறது. தேச கலாசாரத்திற்குப் பதில் பிரதேச கலாசரம் என்பதில் ஒரு அங்கமாக இந்தத் தமிழ்நாட்டில் ஸம்ஸ்க்ருதக் கல்வியின் மென்னியைத் திருகியிருப்பதில் வெள்ளைக்காரன் பண்ணியிருந்த கொஞ்சம் நல்லதும் போய்விட்டது!அவன் கொஞ்சம் பறித்து விட்டிருந்த குழியை இப்போது அகாதமாகவே தோண்டியிருக்கிறது!....

ச்ரேயஸான cF போதனையை ப்ரேயஸாகவும் ரஞ்ஜகமாக ஆக்கித் தருவது 'ஹிதோபதேசம்' என்று சொல்ல வந்தேன்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'புரோஹிதர்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வித்யாகுருவும் தீக்ஷ£குருவும்
Next