'சிஷ்ய'விளக்கம்

' சிஷ்ய' விளக்கம்

சிஷ்யனுக்கு ப்ரதம லக்ஷணம் விநயம் என்றால் அவனுடைய மற்ற லக்ஷணங்கள் என்ன? 'குரு', 'ஆசார்யன்' முதலான வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்த்தாற்போல் 'சிஷ்யன்' என்பதற்கு அர்த்தம் என்ன? - என்று பார்த்தால் பெரியவர்கள் மூன்று விதமாக டிஃபைன் பண்ணியிருக்கிறார்கள். 'சி¬க்ஷ' என்றால் 'கற்றுக்கொடுப்பது' என்பது தெரிந்ததுதானே? (சிரித்து) இந்த நாளில் தெரியாமலுமிருக்கலாம்!சி¬க்ஷ என்றால் 'ட்யூஷன்'. எவன் 'சி¬க்ஷ' பெறுகிறானோ அவன் 'சிஷ்யன்'. 'சிக்ஷ்யன்' என்பதே சிஷ்யன் என்றாயிருக்கிறது. 'சிக்ஷ்'தான் வேர்ச்சொல். அதற்குப் படிப்பது, அறிவு ஸம்பாதித்துக்கொள்வது என்று அர்த்தம். அப்படிப் பண்ணுபவன் சிஷ்யன். இது ஒரு அர்த்தம்.

இன்னொன்று - 'Cw' என்ற வேர்ச் சொல்லின் அடியாக 'சேஷம்' என்று வார்த்தை இருக்கிறது. மீந்துபோனதை 'சேஷம்' என்கிறோம். 'மிகுந்து' என்பதுதான் 'மீந்து' என்று ஆனது. தமிழில் 'மிக்கார்', 'மிக்கார்' என்று புலவர்கள் சொல்வது எவர்களை? ஸாதரணமான லோக ஜனங்களின் லெவலில் இல்லாமல் அதிலிருந்து 'மிகுந்து', 'மீந்து', 'சேஷ'மாகி உயர்ந்த லெவலில் இருக்கிறவர்கள்தானே? 'சேஷர்' என்று அவர்களைச் சொல்லலாம். 'சிஷ்டர்' என்று சொல்கிறோமே, அது இதே வேர்ச்சொல்லை வைத்துத்தான். 'சேஷம்', 'மீந்துபோனது' என்னும்போது ஒரு வஸ்துவுக்கு உயர்வு தெரியாவிட்டாலும், அதற்கு முன்னே 'M' சேர்த்து 'விசேஷம்' என்றால் ரொம்ப உயர்வு, ரொம்பச் சிறப்பு என்றுதானே எடுத்துக்கொள்கிறோம்?

'M' என்ற முன்னடைக்கு எதிரர்த்தம் தருவது, இருக்கிற அர்த்தத்திற்கு ஏற்றம் கொடுப்பது என்று இரண்டு குணமுண்டு. இங்கே 'சேஷ'த்திற்கு ஏற்றம் கொடுத்தே 'விசேஷம்'.

இப்படி, சிறப்பு இல்லாமல் ஸாதாரணப் பேர்வழியாயிருந்த ஒருவன் குருவின் சி¬க்ஷயால் 'சேஷ'னாக சிஷ்டனாக உருவெடுக்கும்போதே 'சிஷ்யன்' என்று சொல்லப்படுகிறான் - இது இரண்டாவது அர்த்தம்.

'சி¬க்ஷ' என்று தண்டிப்பதையும் சொல்வது. 'ராஜ தண்டனை' என்பதை 'ராஜ சி¬க்ஷ' என்பார்கள். ராஜா ர¬க்ஷ, சி¬க்ஷ இரண்டும் தரவேண்டும் என்று சாஸ்திரம். அந்த மாதிரி தன்னுடைய இந்த்ரியங்கள் கண்டபடி போகாமல் சிக்ஷித்துக் கொள்கிறவனே 'சிஷ்யன்' என்று மூன்றாவது அர்த்தம்.

இந்த்ரியத்தை அடக்குவது ஒரு (சிஷ்ய) லக்ஷணமென்றால் 'அடக்கமாயிருக்கான்' என்கிறோமே, அப்படி humble -ஆக, 'விநய'மாக இருக்க வேண்டியது அவனுடைய இன்னொரு லக்ஷணம். அதனால்தான் சிஷ்யனுக்கு 'விநீதன்' என்றே இன்னொரு பெயர்.

குருவோடு கூடவே வஸிப்பவன் என்பதால் 'அந்தேவாஸி' என்றும் அவனுக்கு இன்னொரு பெயர். அப்பா, அம்மாவோடு வீட்டிலில்லாமல் குருகுல வாஸத்தில்தானே முற்கால சிஷ்யர்கள் படித்தது? அதனால் அதற்கு முக்யத்வம் தந்து இந்த 'அந்தேவாஸி' என்ற பேர் ஏற்பட்டிருக்கிறது. எனக்குத் தோன்றவதுண்டு - 'அந்தே' என்பதற்குக் 'கூட', 'உடன்' என்று அர்த்தம் பண்ணுவதை விட 'உள்ளே' என்றே அர்த்தம் பண்ணலாமென்று குருவின் கூட

இவன் வஸிப்பது மட்டுமில்லை, அவருக்கு உள்ளேயே, அவருடைய ஹ்ருதயத்திலேயே இடம் பிடித்து வஸிக்க வேண்டியவன். அதுதான் ஸரியான அந்தேவாஸி.

சிஷ்யனின் ப்ரதம லக்ஷணம் விநயம். அவனுக்கு மட்டுமில்லாமல், அவன் யாரிடம் அதி விநயமாயிருக்கிறானோ அந்த ஆசார்யனுக்குமே விநய ஸம்பத் அவச்யம் என்று நம் பூர்வ சாஸ்த்ரங்கள் காட்டுகின்றன.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குரு-சிஷ்யர் பற்றி மேலும் படிப்பினைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குருவின் விநயம்
Next