அந்தகாரம் நீக்கும் நமஸ்காரம்

அந்தகாரம் நீக்கும் நமஸ்காரம்

ஆத்மாபிவிருத்தியே முக்யமாக இருந்த தேசத்தில் லெளகிக முன்னேற்றமே எல்லாம் என்பதாக இழுத்து விட்டிருக்கிற அஹங்கார ரோகத்திற்கு எனக்குத் தெரிந்த நமஸ்கார மருந்தைச் சொல்லி, இந்தக் ‘கார’த்தால் அந்தக் ‘கார’த்தை நிவிருத்தி பண்ணச் சொல்லிப் பார்க்கலாமே என்றுதான் இத்தனை சொன்னதும். ஸம்ஸார அந்தகாரத்திலிருந்தே நிவிருத்தி பெற முதற்படியாக நமஸ்காரம் இருப்பதால் சொன்னேன்.