வணக்கம் ’வணக்குவது’ என்றால்கூட ‘வளைப்பது’ தான் அப்படிப் பார்த்தால் ‘வணக்கம்’ என்பது வாஸ்தவத்திலே ஸ

வணக்கம்

’வணக்குவது’ என்றால்கூட ‘வளைப்பது’ தான். அப்படிப் பார்த்தால் ‘வணக்கம்’ என்பது வாஸ்தவத்திலே ஸ்த்ரீகள் பண்ணுவதுதான் என்று தோன்றுகிறது. புருஷர்கள் கை வணக்கம் மட்டும் பண்ணலாம்; இடுப்புக்கு மேலே உடம்பையும் சிரஸையும் கொஞ்சம் குனித்து வணங்கலாம். ஆனால் ஸ்த்ரீகள்தான் ஸர்வாங்க வணக்கம் செய்வது.

‘வணக்கம்’ என்பது மட்டுமில்லை. ‘நமஸ்கார’த்தில் வரும் ‘நம’ என்பது ‘நம்’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து தான் தோன்றியிருக்கிறது. ‘நம்’ என்கிறதற்கு அர்த்தம் ‘வளைப்பது’தான். ‘நம்’ என்பது வினைச் சொல் தாது; ‘வளை’ என்று அர்த்தம். அதுவே ‘நமனம்’ என்றாகும்போது ‘வளைத்தல்’ என்று அர்த்தம். அதுவே ‘நமஸ்கார’மும். அப்படிப் பார்த்தால் கழி மாதிரி நேரே, வளையாமல் கிடக்கிற அஷ்டாங்கத்தை விடவும், ‘நமஸ்காரம்’, ‘வணக்கம்’ என்ற வார்த்தைகளுக்கு ஜாஸ்தி நிஜமாக இருப்பது பஞ்சாங்கம் தான்!