நமஸ்கார பாக்யத்தைப் பயன் செய்து கொள்க! எனக்குக் கிட்டாத அந்த நமஸ்கார பாக்யம் உங்களுக்கெல்லாம் கிட்டி

நமஸ்கார பாக்யத்தைப் பயன் செய்து கொள்க!

எனக்குக் கிட்டாத அந்த நமஸ்கார பாக்யம் உங்களுக்கெல்லாம் கிட்டியிருக்கிறது. நீங்கள் அதைப் பூராவாக ப்ரயோஜனம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கோவிலுக்குப் போய் ஸ்வாமி நமஸ்காரம் பண்ணுவதோடு, கண்ணுக்கெதிரே நடமாடிக் கொண்டிருக்கும் பெரியவர்களையெல்லாம் தேடிப் போய் நமஸ்காரம் பண்ணுங்கள்.

பின்னாடி சொன்னதில்தான் குறிப்பாக மரியாதையுணர்ச்சி முக்யமாயிருக்கிறது என்கிறேன்.