ஆசிச் சக்தியின் மூலம் நாராயணனே! அப்போதுங்கூட அந்த சக்திக்கு மூலம் நாராயணன் தான் அதை ஒருநாளும் மறந்து

ஆசிச் சக்தியின் மூலம் நாராயணனே!

அப்போதுங்கூட அந்த சக்திக்கு மூலம் நாராயணன் தான். அதை ஒருநாளும் மறந்து விடக்கூடாது. அவனன்றி அணுவும் அசையாது என்றால் ஆசீர்வாதமும் அவன் திருவுள்ளம் கொண்டால்தானே கார்ய ரூபத்தில் பலன் தரும்? ஆகையினால் ஒரு பக்கம் நாங்கள் நமஸ்காரத்தில் ஸம்பந்தமேயில்லை என்று தள்ளக் கூடாதானாலும், இன்னொரு பக்கம் எங்கள் ஆசீர்வாதத்துக்கே சக்தி இருப்பதாக நினைத்து ஆசீர்வதிக்கவும் கூடாது, பின்னே என்ன பண்ணணுமென்றால், நீங்கள் எங்களுக்கு முன்னாலே சரீரத்தைப் போட்டு நமஸ்காரம் பண்ணும் போது நாங்கள் ‘நாராயண’ சொல்லி அதனால் அவனை நினைத்துக் கொண்டு மானஸிகமாக அவனுக்கு நமஸ்காரம் பண்ணி, “இந்தக் குழந்தைகளுக்கான நல்லது நடக்க ஆசீர்வாதம், அருள் செய்யப்பா!” என்று ப்ரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.