துறவி குறித்து ஆசார்யாளின் விதி இத்தனையிலும் ஆசார்யாள் ஒரு பெரிய நல்லது பண்ணியிருக்கிறார் என்னவென்

துறவி குறித்து ஆசார்யாளின் விதி

இத்தனையிலும் ஆசார்யாள் ஒரு பெரிய நல்லது பண்ணியிருக்கிறார். என்னவென்றால், ‘ஸந்நியாஸிகள் என்று இருக்கிற எங்களைப் பெரியவர்களாக வைத்து நீங்கள் நமஸ்காரம் பண்ணினாலும் வாஸ்தவத்தில் அந்த நமஸ்காரம் எங்களைச் சேர்ந்தது என்று நாங்கள் நினைத்து விடக்கூடாது. ஜகத் வ்யாபாரம் ஸகலத்தையும் நடத்திக் கொண்டிருக்கிற பரமாத்மாவும் பராசக்தியுமான ஒன்றுக்குத்தான் எவர், எங்கே செய்கிற நமஸ்காரமும் ஸொந்தம்’ என்று அவர் ஞாபகப்படுத்தியிருக்கிறார். அதோடு நிற்காமல், நீங்கள் செய்கிற நமஸ்காரத்தை நாங்கள் எங்களுக்கேயாக்கும் என்று ஸ்வீகரித்துக் கொண்டுவிடாமல் அந்த ஒன்றிடம் சேர்த்து விடும்படியாக எங்களுக்கு ஒரு விதியும் பண்ணிக் கொடுத்திருக்கிறார். என்ன விதி என்றால், கேட்கிறதற்கு ரொம்ப ஈஸியாகத் தோன்றும், அப்படி ஒன்று.