நதிகளும் கலாச்சாரமும்

நதிகளும் கலாசாரமும்

நதிகளால்தான் 'அக்ரிகல்ச்சர்'மட்டுமில்லாமல் மக்களின் 'கல்ச்ச'ரும் உருவாகியிருக்கிறது. ஜீவ நதிகள் அவை பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருப்பதில் அந்தப் பிராந்தியத்திலுள்ளவர்களுக்கு ஸம்ருத்தியாகப் பயிர்ச் செழிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆஹாரத்தைப் பற்றிக் கவலையில்லை. நதி தீரம், தோப்பு, தென்னஞ் சோலை என்று பரந்த ஆகாசத்தின் கீழே வாழ்கிறபோது நிச்சிந்தையான மனஸில் உயர்ந்த எண்ணங்கள் உண்டாகி உயர்ந்த கலாசாரங்களாக உருவெடுக்கின்றன. உலகத்தில் எந்தப் பெரிய நாகரிகத்தைப் பார்த்தாலும் நதி ஸம்பந்த முள்ளதாகவே இருக்கிறது. பழைய காலத்தில் இப்போது போல ஷிப்பிலும், குட்ஸிலும் தானியங்களை வரவழைத்துக் கொள்ள முடியாமலிருந்ததால் நதிப் பிரதேசங்களிலிருந்தவர்கள் தவிர மற்றவற்றிலிருந்தவர்களுக்கு 'அன்ன விசாரம் அதுவே விசாரம்' என்றாகி அப்படிப் பட்டவர்கள் கலாசாரத்தில் அபிவிருத்தியடைய முடியாமலே இருந்திருக்கிறது. எகிப்திலிருந்த புராதனமான பெரிய கலாசாரத்துக்கு 'நைல் நதி நாகரிகம்'என்றே பெயர் சொல்கிறார்கள். மெஸபொடேமியாவில் இருந்த நாகரிகத்திற்கு யூஃப்ரடிஸ்-டைக்ரிஸ் என்ற நதிகளை வைத்தே பெயர் வைத்திருக்கிறது:ரோம ஸாம்ராஜ்யத்தின் கலாசாரத்துக்கு அங்கே ஓடும் டைபரைப் பிணைத்துப் பெயர் கொடுத்திருக்கிறது. எத்தனையோ பெரிசான சீனாவிலும் ஆதி கலாசாரம் எது என்று பார்த்தால் அது யாங்ட்ஸி-கியாங் நதியை ஒட்டி எழுந்ததாகவே இருக்கும். நம் தேசத்திலும் ஸிந்து நதி நாகரிகம், கங்கை நதி நாகரிகம் என்றெல்லாம் ஆறுகளை வைத்தே உயர்ந்த கலாசாரம் உண்டாகியிருப்பதைக் காட்டுகிறார்கள். River V alley Civilisations என்றே பொதுவில் சொல்கிறார்கள்.

அப்படி இந்தத் தமிழ் தேசத்தில் சோழ நாட்டுக்கு என்று ஏற்பட்டிருக்கிற அலாதியான, refined கல்ச்சருக்குக் காரணமானவள் காவேரி.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is காவேரி தடம் மாறியது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  காவேரி தொடர்புள்ள மூன்று ரிஷிகள் ; மூன்றாமவரி ஏரண்டகர்
Next