சக்தி வேலன் “சக்த்யாயுத தர்த்ரே”: ”பராசக்தியின் ஸ்வரூபமானதும், மஹா சக்தி பொருந்தியதுமான வேலாயுதத்தை தரித்துக் கொண்டிருப்பவர்

சக்தி வேலன்

சக்த்யாயுத தர்த்ரே”:

”பராசக்தியின் ஸ்வரூபமானதும், மஹா சக்தி பொருந்தியதுமான வேலாயுதத்தை தரித்துக் கொண்டிருப்பவர்.”

மாறி மாறி அவருடைய வித வித வேஷங்கள் – சூராதி அஸுரர்களின் ஸம்ஹர்த்தாவாக, உடனே தாபத்ரயம் போக்குகிற தத்வோபதேசகராக, அடுத்தே வீரர்கள் நமஸ்கரிக்கிற மஹா வீரராக, உடனேயே குருகுஹன் என்ற பெருமையோடு அஞ்ஞான தமஸைப் போக்கும் ஸவிதாவாக, அப்புறம் வள்ளி கல்யாண மூர்த்தியாக – இப்போது மறுபடி சக்திவேலன் என்ற வீர பராக்ரமராக!