இதய குகையில் இலகும் குரு, அஞ்ஞான இருள் நீக்கும் ஸுரியன் “குருகுஹாய; அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே”: வீரத்தைச் சொன்னவுடனே ஞானம்! குருகுஹன

இதய குகையில் இலகும் குரு, அஞ்ஞான இருள் நீக்கும் ஸுரியன்

குருகுஹாய; அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே”:

வீரத்தைச் சொன்னவுடனே ஞானம்! குருகுஹனாக ஸ்வாமி இருப்பது! மலைகள் அவருக்கு முக்யவாஸம். குறிஞ்சிக் கடவுள் என்றே போற்றுகிறோம். மலைக் குஹைகளில் வஸிப்பதால் குஹன். தத்வார்த்தமாகச் சொன்னால் ஹ்ருதய குஹையிலிருக்கும் ஆத்ம ஸ்வரூபம். அதுவே குருவாக வந்து உபதேசிக்கிறபோது குருகுஹன். ஸ்வாநுபவத்தினால் தீக்ஷிதருடைய ஹ்ருதயத்திலிருந்து பீறிக் கொண்டு வந்து அவருடைய முத்ரையாவே ஆகி விட்ட நாமா, குருகுஹன் என்பது.

“குருகுஹாய; அஜ்ஞான – த்வாந்த – ஸவித்ரே.”

‘த்வாந்தம்’ இருட்டு. ஸவித்ரு, ஸவிதா என்றால் ஸுர்யன். இருட்டை இருந்த இடம் தெரியாமல் ஸுர்யன் விரட்டி அழித்து விடுகிற மாதிரி அஜ்ஞான இருட்டை த்வம்ஸம் பண்ணும் ஞான ஸுர்யன். ஸநத்குமாரர் இருட்டுக்கு அந்தண்டைக்கு வழிகாட்டினார் என்கிற ஸமாசாரம்.