ஸாஹித்ய அழகு வாக்கிய ஆரம்பத்திலும் எதுகை ப்ராஸம் இருக்கிறது; ஸ்ரீஸு(ப்ர)-பூஸு(ராதி); வாஸ(வாதி) – தாஸ(ஜன) பொயட்ரி ரூபமும் அர்த்தம் மாதிரியே அழகாக அமையும்ப

ஸாஹித்ய அழகு

வாக்கிய ஆரம்பத்திலும் எதுகை ப்ராஸம் இருக்கிறது; ஸ்ரீஸு(ப்ர)-பூஸு(ராதி); வாஸ(வாதி) – தாஸ(ஜன). பொயட்ரி ரூபமும் அர்த்தம் மாதிரியே அழகாக அமையும்படிப் பண்ணியிருக்கிறார். இதுதான் மஹான்களின் ரசனா விசேஷம். ரஸ(sa)னை இல்லை; ரச(cha)னை. ரசனை என்றால் கவிதை அமைப்பு. அர்த்தம், வார்த்தை இரண்டும் அழகாக, வார்த்தைகளைக் கோக்கும் விதமும் ஒரு ஒழுங்கிலே அழகாக வரும்படி அமைவது. இலக்கிய ஸ்ருஷ்டிகளை “composition” என்கிறார்கள். Composed, composure என்றாலே ஹாயாக அமைதி நிலையில் இருப்பதுதான். தமிழிலும் அழகாகச் சொல்லமைதி, பொருளமைதி என்கிறோம். இப்படி ரசனை பண்ணுவதிலேயே ஒரு கவி அல்லது ஸாஹித்யகர்த்தாவுடைய ரஸனா விசேஷமும் தெரிந்துவிடும்.