இந்தியப் பண்பாடு ’இண்டியன் கல்ச்சர், இண்டியன் கல்ச்சர்’ என்று இப்போது நிறைய ப்ரஸங்கம் பண்ணுகிறோமே, ப்ரஸங்கம் மாத்திரம் பண்ணுகிறோமே, அது வாஸ்தவத்தில

இந்தியப் பண்பாடு

’இண்டியன் கல்ச்சர், இண்டியன் கல்ச்சர்’ என்று இப்போது நிறைய ப்ரஸங்கம் பண்ணுகிறோமே, ப்ரஸங்கம் மாத்திரம் பண்ணுகிறோமே, அது வாஸ்தவத்தில் இதுதான். தன் உயிரே போவதாயிருந்தாலும் அறிவை எங்கிருந்தும் பெறப் பாடுபடுவது, அதே மாதிரித் தன் உயிரையே எடுக்கக் கூடியவனாயிருந்தாலும், அவன் சாஸ்த்ரப்படித் தகுதி பெற்றவனாயிருந்தால் தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது – இதுதான் இண்டியன் கல்ச்சர். நம்முடைய பண்பாடு அறிவிலே உயர்ந்த கலாசாரம் என்று லோகமெல்லாம் கொண்டாடும் படியாக வளர்ந்து வந்திருப்பதற்குக் காரணம், தகுந்த பாத்திரம் கிடைத்தபோது அறிவைக் கொஞ்சங்கூட அடைத்து வைக்காமல் திறந்து விட்டதுதான். இதற்குக் ‘கான்வெர்ஸா’க இன்னொன்றும் சொல்ல வேண்டும். அபாத்திரத்திடம் அறிவு போனால் அதைவிட விபரீதமில்லை என்பதால் நம் பூர்விகர்கள் இப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் உயிரே போனாலும் அறிவைக் கொடுக்க மாட்டார்கள்.