கலை மூலம் கடவுள் தேவார – வேத ஓதுவிப்பு; ஆரியம் – தமிழ் பாடுவது; ஆரியக் கூத்து – தமிழ்க்கூத்து ஆடுவது; இது தவிர வெறும் டான்ஸ் என்றிப்படி வெகு லகுவாகவும்,

கலை மூலம் கடவுள்

தேவார – வேத ஓதுவிப்பு; ஆரியம் – தமிழ் பாடுவது; ஆரியக் கூத்து – தமிழ்க்கூத்து ஆடுவது; இது தவிர வெறும் டான்ஸ் என்றிப்படி வெகு லகுவாகவும், லளிதமாகவும், ஆயாஸமான ஸாதனை எதுவுமில்லாமல், ஜனங்களுக்கெல்லாம் கலை மூலம் கடவுளைக் காட்டிக் கொடுத்த பரமோபகாரி ராஜராஜன்.

அவனைப் பற்றி நாம் பெருமைப்படுகிறோமென்றால், அவனைப் பெருமைப்படுத்தி விழா நடத்துகிறோமென்றால் அவனுக்கிருந்த தெய்வ பக்தியையும், பாரத கலாசாரத்தின் இரண்டு கிளை மரபுகளிலும் அவனுக்கிருந்த ஸமமான கௌரவ புத்தியையும் நாமும் பெற வேண்டும். அவன் எதையும் grand scaleல் செய்ய முடிந்ததென்றால் அதற்குக் காரணமே இந்த இரண்டும் தான்.

கலைகளை நெறிகெட்டுப் போவதற்கு வழியாக்காமல் ஈச்வரபரமாக்கி, ஈச்வரார்ப்பணம் பண்ணுவித்து, ஜனங்களும் இதனால் அரன் குடிமக்களாக, பாஷை முதலான பேதங்களின்றி அன்பிலே ஒன்று சேர்ந்திருக்கும்படி செய்வதற்கு அந்த சிவ பாத சேகரன் போட்டுக் கொடுத்திருக்கிற பாதையிலே போவோம்.