ஸகல தேவதைகளும் கோவுக்குள் அடக்கம் ஏனென்றால் கோவுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களுமே அடக்கம் ஸகல புண்யதீர்த்தங்களும் ஒரு பசுவுக்குள் இரு

ஸகல தேவதைகளும் கோவுக்குள் அடக்கம்

ஏனென்றால் கோவுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களுமே அடக்கம். ஸகல புண்யதீர்த்தங்களும் ஒரு பசுவுக்குள் இருக்கின்றன. நம்முடைய ஆலயம் ஒவ்வொன்றிலும் சில தெய்வங்களுக்கு ஸந்நிதிகள் இருக்கின்றன; அதைச் சேர்ந்ததாக ஒவ்வொரு புண்ய தீர்த்தம் இருக்கிறது. கோ என்பதோ அத்தனை தெய்வங்களும் அத்தனை புண்ய தீர்த்தங்களும் குடி கொண்ட ஆலயமாக இருக்கிறது. கோவே ஒரு நடமாடும் கோயில். ஸர்வ தேவதைகளுக்குமான மஹத்தான கோயில்.