ஸாந்நித்ய விசேஷம் தன்னிடமிருந்து த்ரவியங்களைக் கொடுத்து யஜ்ஞ ரக்ஷையைச் செய்கிற கோ, எதையும் கொடுக்காவிட்டாலும் தன்னுடைய ஸாந்நித்ய மாத்ரத்த

ஸாந்நித்ய விசேஷம்

தன்னிடமிருந்து த்ரவியங்களைக் கொடுத்து யஜ்ஞ ரக்ஷையைச் செய்கிற கோ, எதையும் கொடுக்காவிட்டாலும் தன்னுடைய ஸாந்நித்ய மாத்ரத்திலேயே மந்த்ரங்களை ரக்ஷித்துக் கொடுக்கிற வல்லமை வாய்ந்ததாக இருக்கிறது. அதனால்தான் மாட்டுக்கொட்டிலில் ஜபம் செய்தால் கோடிப் பங்கு (மடங்கு) பலன் என்பது. ‘கோஷ்டம்’ என்ற மாட்டுக் கொட்டிலை போன்ற பரிசுத்தமான ஸ்தலம் எதுவும் இல்லை.*

*1927ல் மஹாத்மா காந்தியை ஸ்ரீசரணர் பாலக்காட்டிலுள்ள நெல்லிச்சேரியில் மாட்டுக் கொட்டிலிலேயே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.