கோ ச்ருங்கமும் விசேஷமே கோ பரம புனிதமானதாக இருப்பதால் அதன் உடம்புக்குள்ளிருந்து எடுக்கிற கோரோசனையும் ஈச்வரார்ப்பணம் ஆவதற்குத் தக்கத

கோ ச்ருங்கமும் விசேஷமே

கோ பரம புனிதமானதாக இருப்பதால் அதன் உடம்புக்குள்ளிருந்து எடுக்கிற கோரோசனையும் ஈச்வரார்ப்பணம் ஆவதற்குத் தக்கதாக இருக்கிறது.
நடராஜாவாக ஆடும் ஈச்வர ஸந்நிதியில் நந்திகேச்வரரே ம்ருதங்கம் வாசிப்பது பல பேருக்குத் தெரிந்த விஷயம். அதைவிடவும் விசேஷமாக ஒன்று. ’கோ ச்ருங்கம்’ என்கிற மாட்டுக் கொம்பின் வழியாகப் பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்வதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. ருத்ர-சமகங்கள் ஒரு ஆவ்ருத்தி சொல்கிற காலத்துக்கு கோ ச்ருங்க த்வாரம் வழியாக சிவலிங்கத்துக்கு க்ஷீராபிஷேகம் (பாலபிஷேகம்) செய்வது மஹா புண்யம். காளை மாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பவருக்கு கோச்ருங்கத்தால் பசும்பால் அபிஷேகம் பொருத்தந்தானே?

பெண் பசு பால் என்ற உணவை நேராகத் தருகிறது என்றால் காளை மாடுதான் முக்யமாக உழவில் உழைத்து பயிர் பச்சை மூலம் உணவு தருகிறது. இப்படி மாட்டு ஜாதியே மநுஷ்ய ஜாதியின் வயிற்றுக்குப் போடும் பரமோபகாரத்தைப் பண்ணுவதாக இருக்கிறது. அதனிடம் நாம் அளவில்லாத நன்றியும் பக்தியும் காட்ட வேண்டும். அதற்குச் சின்ன ஹானி செய்தாலும் தெய்வாபராதமாக, தெய்வக் குற்றமாக நினைக்க வேண்டும்.
கொம்பு வழியாக அபிஷேகம் என்பதோடு பஞ்சகவ்ய வஸ்துக்களான ஐந்துமே ஸ்வாமிக்கு அபிஷேகமாகின்றன.