உடைத் தூய்மை நீங்கள் போட்ட

உடைத் தூய்மை

நீங்கள் போட்டுக் கொள்ளும் உடை அழுக்கு மயமாக இருந்தால் எத்தனை குளித்தும் பிரயோஜனம் இல்லை. துணியில் அழுக்கு இருந்தாலும் சொறி சிரங்கு வரத்தான் செய்யும். சலவைக்குத் துணியைப் போட்டால் நன்றாக வெளுத்துத் தருவார்கள். அதைவிட நீங்களே உங்கள் உடைகளை நன்றாகத் துவைத்துக் கொள்ளுவது சிறந்தது. துணியைத் துவைத்துப் பிழிவது உங்கள் தேகத்துக்கே ஓர் ஆரோக்கியப் பயிற்சியாக இருக்கும். நாமே நம் துணியை இவ்வளவு நன்றாகச் சுத்தப்படுத்தி வெள்ளை வெளேரென்று ஆக்கியிருக்கிறோம் என்றால் உங்களுக்கே அதில் ஒரு பெருமை, திருப்தி, சந்தோஷம் இருக்கும். உங்கள் பெற்றோர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். சலவைச் செலவும் இதனால் குறையும்.

உடம்பைத் தேய்த்துக் குளிப்பது, உடுப்பைத் துவைத்துக் கட்டுவது – இவை இரண்டாலும் அழுக்கிலிருந்து, சொறி சிரங்கிலிருந்து விடுபட வேண்டும்.