இந்தியாவில் மத உணர்வின் நலிவு;ஆயிரம் ஆண்டு வரலாறு காட்டுவது

இந்தியாவில் மத உணர்வின் நலிவு;ஆயிரம் ஆண்டு வரலாறு காட்டுவது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே நாம் அந்நியராட்சிக்கு ஆளாகத் தொடங்கினோம். அப்போது முதலில் வந்தவர்கள் ஆசியாவைச் சேர்ந்த பிற நாட்டவர் தாம். அவர்களிலேயே பல பிரிவினரின் ஆளுகையைப் பல அளவுகளில் பெற்று, முடிவாகப் பல காலம் முற்றிலுமே அவர்களின் ஆளுகை அல்லது படையெடுப்புக்கு ஆளாகும் நிலை நம் நாட்டிற்கு வந்தது. விளைவாக ஆயிரமாண்டுக்கு முன்வரையில் உலகுக்கே வழிகாட்டியாக மதாசரணைகளைப் பற்றுதலுடன் பின்பற்றிய ஹிந்துக்களின் நாடாகவே இருந்த நமது நாட்டில், பிற்பாது அவ்வாசிய நாட்டு அந்நியர்களில் பலர் ஹிந்து மதத்தை எதிர்த்து ஹிம்சை வழியில் செய்த நடைமுறைகளினால் ஹிந்துக்கள், குறிப்பாக இந்நாட்டின் வடபுலத்தினர் தங்களது மதாசாரங்களை நிர்பயமாகவும், நிச்சிந்தையாகவும் பின்பற்ற முடியாமலாயிற்று. இது இப் பாரத நாட்டுக்கேயான தனிப்பெருமையாக அதற்கு ஜீவ சக்தியூட்டி வந்த ஆத்மிக கலாசாரத்தை நலிவுபடுத்தத் தொடங்கியது. அதோடு காலம் செல்லச் செல்ல, இங்கு ஆட்சிக்கு வந்துவிட்ட அந்த அந்நியரின் வழக்குகள், கலை, உடை முதலியவற்றை சிலவற்றை ஹிந்துக்கள், குறிப்பாக இந்நாட்டின் வடபுலத்தினர், தமதாக ஏற்றனர். எனினும் இத்தனையிலும் சற்று திருப்தி தரும் ஓரம்சமாக, இவற்றால் ஹிந்துக்கள் தமது வாழ்க்கை முறை முற்றிலும் அந்த ஆசிய நாட்டு அந்நிய ஆட்சிக்காரர்களுடையதன் பிரதியாக (copy -ஆக) ஆகிவிடாமலே, தமது தனித்தன்மையை ஷீணித்த காரணம், அவர்களை ஹிந்துக்கள் நாகரிகத்தில் தம்மைவிட மேம்பட்டவர்களாக எண்ணாததுதான்.

இவ்வாறு எழுநூறு ஆண்டுகள் சென்றபின், கடைசி முந்நூறு ஆண்டுகளில் ஐரோப்பிய நாட்டு அந்நியர்கள் இங்கு மெல்ல மெல்ல ஆட்சி பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து தான் நிலைமை விபரீதமாகவே மாறலாயிற்று.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is இந்தியாவின் உயிர்நிலையே மதமும் ஆன்மிகமும்தான்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மேல் நாட்டினரின் மறைமுக சாமர்த்தியமும் இரு 'புரட்சி'களும்
Next