அதிகபட்ச ஆலயம் கொண்டவர்

அதிகபட்ச ஆலயம் கொண்டவர்

தமிழ்நாட்டுக்கு நிறையக் கோவில்களை அக்ரஹித்திருக்கிற அவருக்கே இந்தத் தமிழ் நாடும் ஏகப்பட்ட கோவில்கள் கட்டி வைத்திருக்கிறது. இங்கே வேறே எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்குப் பிள்ளையாருக்குத்தான் மூலைக்கு மூலை கோவில்!தமிழ் நாட்டில் இருக்கிற அளவுக்கு இந்த பாரத தேசத்தில் பாக்கி அத்தனை மாகாணங்களிலுள்ள பிள்ளையார் கோவில்களைக் கூட்டினாலும் கணக்கு வராது!பிள்ளையாரையே முழுமுதற் தெய்வமாகக் கொண்ட காணபத்யத்துக்கு மஹாரஷ்டிரந்தான் ராஜதானி என்று சொல்வது. ஆனால் கோவில் கணக்குப் பார்த்தால் அதுவும் தமிழ் நாட்டுக்கு ரொம்பவும் பின்தங்கி எங்கேயோதான் நிற்கும் முதலில் அவருக்கு 'நம்மவர்' என்று முத்ரை குத்தி ஆரம்பித்தேனே, அதுவே முக்யமாக இதை நினைத்துத்தான். ஆனால் உசந்த கலாசாரத்தைக் கொடுத்தவர் என்று சொல்லிவிட்டு 'நாங்க-நீங்க' என்று பிரித்து பெருமை, உரிமை கொண்டாடிக் கொண்டு முத்ரை போடுவதே முரணாக இருக்கிறதாக இப்போது 'ஞானம்' பிறந்திருக்கிறது


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is கலாசார வளர்ச்சி கணேசராலேயே
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  விநாயகரும் தமிழ் மொழியும்
Next