மதக் கொள்கைகளுக்கு முரணான சட்டங்கள் கூடாது

மதக் கொள்கைக்கு முரணான சட்டங்கள் கூடாது

அதாவது எல்லா மதங்களுக்கும் ஒரே போல் ஆதரவளிப்பதான சரியான செக்யூலரிஸமோ, எம்மதத்திலும் சம்பந்தம் கொள்ளாத தவறான செக்யூலரிஸமோ, எதனை அரசாங்கம் ஏற்கின்ற போதிலும் அரசியலாரின் சமூகக் கொள்கைகளுக்குப் பொருந்தும் வகையில் மதங்களில் வகுத்துள்ள விதிகளுக்கு முரணாகச் சட்டமியற்றும் அதிகாரத்தை அரசாங்கம் கைக்கொள்ளலாகாது. எம் மதத்திலும் சம்பந்தப்படுவதில்லை என்ற தவறான செக்யூலரிஸத்தை மேற்கொண்ட பின்பும் எதிர்மறை சம்பந்தமாக மத விதிகளில் இவ்வாறு துர்பிரவேசம் மட்டும் செய்யலாம் என அரசாங்கம் கருதுமேயாகில் அதனை நாம் ஏற்பதற்கில்லை.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மத விஷயத்தில் அரசின் பங்குக்குள்ள வரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மதக் கொள்கையை மீறினால் அதிலும் சமநீதி காட்டவேண்டும்
Next