இவரும் தமிழ்த் தெய்வமே!

விநாயகரும் தமிழும்

இவரும் தமிழ்த் தெய்வமே!

தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை 'நம்முது' (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்து ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு. ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனஸமூஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதில் தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.

எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது) !இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு - ஒரு வேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவேபடாது, சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு 'ரெஸொல்யூஷன்' கொண்டு வரப்போகிறேன்!. (அது) 'பாஸ்' ஆகணுமே!அதனால், புஷ்டியான காரணம் நிறையக் காட்டுகிறேன். 'யுனானிம'ஸாகவே 'பாஸ்' பண்ணிவிடுவீர்கள்!


  Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  இன்றைய 'பாலிடிக்ஸ்   '     :   பிரிவினை மயம்!
Next